‘பப்ஜி’ காதலி பாகிஸ்தான் திரும்பாவிட்டால்… மீண்டும் 2011 திரும்பும்… மும்பை போலீஸாருக்கு வெடிகுண்டு மிரட்டல்!

‘பப்ஜி’ காதலி பாகிஸ்தான் திரும்பாவிட்டால்… மீண்டும் 2011 திரும்பும்… மும்பை போலீஸாருக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Share it if you like it

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் தாயகம் திரும்பாவிட்டால், மும்பைத் தாக்குதல் போல மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறும் என்று மும்பை போலீஸாருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதில் சீமா ஹைதருக்கு மிகுந்த ஆர்வம். அ்பட்டி பப்ஜி விளையாடியபோது உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவருடன் சீமா ஹைதருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. எனவே, சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையை தாண்டி நேபாளம் வழியாக இந்தியா வந்தார். பின்னர், சச்சினும் சீமாவும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர்.

இதையடுத்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தான் சச்சினை காதலிப்பதாகவும், பாகிஸ்தான் செல்ல விருப்பம் இல்லை என்றும் இந்தியாவிலேயே தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் சீமா தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீமா மற்றும் குழந்தைகளுக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, தற்போது சீமா தனது குழந்தைகளுடன் சச்சினுடன் சேர்ந்து இந்தியாவிலேயே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், மும்பை போலீஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், சீமா ஹைதர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை என்றால் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படும். இத்தாக்குதலுக்கு உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர அரசுகளே காரணம் என்று உருது மொழியில் எச்சரிக்கை விடுத்து விட்டு, இணைப்பை துண்டித்து விட்டார். இதைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்தது யார்? பாகிஸ்தானை சேர்ந்தவரா அல்லது இந்தியாவிலேயே யாராவது மிரட்டல் விடுத்தார்களா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it