காஷ்மீர் மாநிலம் தனது சிறப்பு அந்தஸ்து என்ற பிரிவினையிலிருந்து மீண்டு பாரதத்தின் அங்கமாக  இணைந்து தினம்

காஷ்மீர் மாநிலம் தனது சிறப்பு அந்தஸ்து என்ற பிரிவினையிலிருந்து மீண்டு பாரதத்தின் அங்கமாக இணைந்து தினம்

Share it if you like it

காஷ்மீரை கேட்டவர்கள் இன்று கால் படி கோதுமைக்கு கையேந்தி நிற்கிறார்கள். கல்வான் பள்ளத்தாக்கில் வாங்கியதை மறந்து வடகிழக்கு மாநிலங்களில் வாலாட்டும் சீனாவின் நிலை விரைவில் கொரோனா கால பாகிஸ்தான் நிலை விட மோசமாகும். காஷ்மீரின் வழியில் மணிப்பூர் மக்கள் அமைதி வழக்கு திரும்புகிறார்கள். தடுக்க நினைக்கும் அந்நிய சதிகளும் உள்நாட்டு துரோகமும் தங்களின் முகத்திரை கிழித்து இறுதி ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்.

காஷ்யப முனிவரின் தபோவனமான காஷ்மீரம் தனது அரை நூற்றாண்டு கால ரத்தக் களரியிலிருந்து விடுபட்டு பாரதத்தின் ஒரு அங்கமாக இணை ந்த தினம் ஆகஸ்ட் 5 ல் கொண்டாடப்படுகிறது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் பிரிவினைவாதிகள் பாரத தேசத்திற்கு கொடுத்த தலைவலி கொஞ்சம் நஞ்சமல்ல. இன்று பாரத தேவியின் சிரசில் இருந்த சீழ் கட்டிகள் எல்லாம் வெட்டி எறியப்பட்டு இன்று அவள் சிகை அலங்கார வனப்போடு வெற்றி புன்னகை பூக்கிறாள்.

காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்று தினக்கூலிக்கு கல் எறிந்தவர்கள் இன்று பள்ளி கல்லூரிகளில் புத்தகமும் கையுமாக இருக்கிறார்கள். துப்பாக்கி சூட்டையே தொழிலாக கொண்டவர்கள் பலரும் இந்திய இராணுவத்தின் தயவால் சுவனம் புகுந்து விட்டார்கள்.

காஷ்மீரின் விடுதலைக்கு வீர முழக்கம் இட்டவர்கள் எல்லாம் இன்று இந்திய ராணுவத்திலும் காஷ்மீர் காவல்துறையிலும் நான் ஒரு இந்திய அரசு பணியாளர் என்ற மிடுக்கோடு இருக்கிறார்கள். தங்களின் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக பயங்கரவாத பிடிக்கு கொடுத்து விட்டு மரண பீதியில் வாழ்ந்த காஷ்மீரின் தாய்கள் இன்று அவர்களின் கல்வி – வேலை வாய்ப்பு பார்த்து மனம் பூரிக்கிறார்கள்.

சொந்த நாட்டில் அகதியான காஷ்மீர் இந்து பண்டிட் மக்களை நீங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் காஷ்மீருக்கு விருந்தாளிகளாக வந்து சுற்றி பார்க்கலாம். வேண்டிய ஏற்பாடுகள் செய்து தருகிறேன். என்று பரிகாசம் பேசியவர் இன்று வரை இந்திய இராணுவத்தின் பிடியில் வீட்டு காவலில் இருக்கிறார்.
காஷ்மீர் விடுதலையே எங்கள் வாழ்நாள் இலக்கு! என்றவர்கள் பொழுது விடிந்ததும் போராட்டம் அறைகூவல் விடுத்தவர்கள் எல்லாம் இன்று காஷ்மீரில் உள்ள இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடு செய்து மோடிக்கு காவடி எடுக்கிறார்கள்.

காஷ்மீரை முன்னிறுத்தி பாரதத்தின் மீது நேரடியாக நான்கு யுத்தங்களையும் மறைமுகமாக நான்காயிரம் யுத்தங்களையும் மேற்கொண்ட பங்காளி தேசம் இன்று சிதறு தேங்காயாக சிதறக் காத்திருக்கிறது. காஷ்மீர் எங்களின் சொத்து ! என்று கொக்கரித்தவர்கள் இன்று கால்படி கோதுமைக்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.

காஷ்மீர் சகோதரர்களின் விடுதலைக்கு குரல் கொடுப்போம் ! அது எங்கள் புனித கடமை என்றவர்கள் இன்று இந்துகுஷ் மலைகளில் இருந்தவாறே இந்தியா எங்களின் நட்பு நாடு. எங்களின் பசிக்கு உணவும் நோய்க்கு மருந்தும் தரும் சகோதர நாடு என்று சிலாகிக்கிறார்கள். காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதில் நாங்கள் தலையிட முடியாது என்று ஒதுங்கி போகிறார்கள்.

காஷ்மீரை முன்னிறுத்தி மலிவான அரசியல் செய்த அரபு தேசங்கள் எல்லாம் இன்று பாரதம் எவ்வழியோ அரபு தேசமும் அவ்வழியே என்கிறார்கள். பாரதத்திற்கு இலவசமாக பாடம் எடுத்து அறிவுரை வழங்கிய ஐரோப்பிய நாடுகளோ யோகியை ஒரு சில நாட்கள் கடனாக கொடுத்தால் எங்களின் தேசத்தை காப்பாற்றிக் கொள்வோம்! என்று மடிப்பிச்சை கேட்கிறார்கள்.
இந்தியாவின் இவ்வளவு சிக்கலுக்கு காரணமான சூரியன் அஸ்தமிக்காத தேசம் இன்று மத பயங்கரவாத பிடியில் இருந்து விடுபட பாரதத்தின் ஆலோசனை வேண்டும் என்கிறது.

அதே காஷ்மீரின் பாதுகாப்பிற்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை வீர மரணம் ஆகவும் சொந்த மண்ணின் மக்களை கொடூர பலிதானமாகவும் வழங்கிய பாரதமோ அரை நூற்றாண்டு கால துயரத்தில் இருந்து விடுபட்டு காஷ்மீரை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதோடு தன்னை உலகின் குருவாக நிலை நிறுத்திக் கொண்டது. இதற்காக பாரதம் கடந்து வந்த கண்ணீரும் சிந்திய உதிரமும் கணக்கில் அடங்காது.

காஷ்மீர் எப்படி பயங்கரவாத பாதையில் இருந்து மீண்டு பாரதத்தின் அங்கமாக அமைதி வளர்ச்சி பாதையில் திரும்பியதோ ? அதே வழியில் மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களும் நிரந்தரமான அமைதிக்கும் நிலைத்த வளர்ச்சிக்கும் பாரதத்தின் அங்கமாக பரிபூரணமாக அமைதிப் பாதையில் விரைவில் திரும்பும்.
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மத்திய உள்துறையும் தேசிய பாதுகாப்பு ஆலோசனை மையமும் இணைந்து அடிக்கும் அடியில் வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்ல மேற்குவங்கம் தொடங்கி தென்னிந்தியா முழுவதிலும் நிரந்தர அமைதி நிலவத் தொடங்கும்.

காஷ்மீர் விவகாரம் முதல் காலிஸ்தான் பிரிவினைவாதம் வரை காரணம் சொல்லி இந்திய மண்ணுக்கும் மக்களுக்கும் ஊறு விளைவித்து கொத்து கொலைகளால் அப்பாவி மக்கள் உயிரிழக்கவும் இந்திய இராணுவ சகோதரர்கள் வீர மரணம் தழுவவும் காரணமான துரோகிகள் எல்லாம் ஆங்காங்கே விபத்திலும் தனிமனித கொலையாகவும் பலியாவதை காணும் சர்வதேச சமூகத்திற்கு தெரியும் பாரதத்தின் அரியணையில் இருப்பது எங்களுக்கு கிருஷ்ணன் ஆட்டமும் தெரியும். சகுனி ஆட்டமும் தெரியும். இடத்திற்கு சூழலுக்கு ஏற்ப களமும் காட்சியும் மாறும் என்ற அசகாயர்கள்‌ என்ற‌ உண்மை. அதனால் தான் முதல் கட்ட விசாரணையோடு கடந்து போகிறார்கள்.

இன்று மணிப்பூரை முன்னிறுத்தி இந்து – இந்திய விரோதம் பேசுபவர்கள் எல்லாம் சர்வதேச சமூகத்தின் இந்த அமைதியை பார்த்து அரண்டு தான் தங்கள் திட்டத்தின் படி ஏழு சகோதரிகள் எனும் மலை மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி கலவரமாக்கி பிரிவினைக்கு ஆதரவு திரட்ட முடியும் என்ற எண்ணத்தில் இறுதி ஆட்டத்தை ஆடித் தீர்க்கிறார்கள் .
அவர்கள் ஆட்டத்தை முடித்து கொட்டத்தை அடக்கி மக்களை மீட்டு வளர்ச்சி பாதையில் தேசிய சிந்தனையில் இணைப்பது எப்படி ? என்று மத்திய அரசுக்கு தெரியாமலா இருக்கும் ? அவர்கள் தங்கள் ஆட்டத்தை தொடங்கும் போது வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை போதை ஆயுதம் எல்லாம் முடிவுக்கு வந்திருக்கும்.

இன்று மணிப்பூரை வைத்து இந்து இந்திய துவேஷம் பேசுபவர்கள் எல்லாம் அன்று இருக்கும் இடமே தெரியாது. இன்று மணிப்பூருக்காக நீதி கேட்டு நெடும் பயணம் கண்டவர்கள் எல்லாம் அன்று நிரந்தர ஊமையாகி இருப்பார்கள்.

காஷ்மீரின் விடுதலைக்காக விமானம் கடத்தியவர்களை பண மதிப்பிழப்பு மூலம் இன்று அவர்களின் விமான நிலையத்தை ஏலத்தில் குத்தகை விடும் நிலைக்கு கொண்டு வந்தவர்கள் மணிப்பூர் சதிகாரர்களை நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்.
எழுதி வைத்து கொள்ளுங்கள். அந்நிய சதிக்கும் உள்நாட்டு துரோகத்திற்கும் இடையில் அகப்பட்டு சொந்த மண்ணில் மணிப்பூர் மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் உதிரத்திற்கும் நிச்சயம் பதிலடி உண்டு. அம்மண்ணின் பாதுகாப்பு பணியில் வீரமரணம் எய்திய பலிதானம் அடைந்த வீரர்கள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் இந்திய அரசுக்கு அதற்காக தரப்போகும் விலை தயவு தாட்சண்யத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.
திரிபுரம் எரித்த சிவனின் அருளாலே மணிப்புரத்தில் தொடங்கும் அமைதி தென் குமரி வரை நீளும். ஊடுருவல் காரர்களும் அவர்கள் எச்சமும் மிச்சமின்றி துடைத்தெறிந்து தேசம் பொலிவு பெறும்.

தமிழகத்தில் பிரிவினைக்கு பேர் போன ஒரு அரசியல்வாதி பாரதத்தின் பொன்விழா கொண்டாட்ட காலத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களை பார்த்து இந்தியா சுதந்திர நூற்றாண்டு காணும் காலம் வரும் போது இந்திய துணை கண்டம் பல துண்டுகளாக சிதறி இருக்கும் என்று கட்டியம் பேசினார்.
இன்று அவரின் கண் முன்னே காஷ்மீர் பாரதத்தில் இணைந்தது. பாரதத்தின் சுதந்திர அமிர்தோற்சவ ஆண்டில் பலுசிஸ்தான் திபெத் தைவான் உள்ளிட்ட நாடுகள் தங்கள் விடுதலைக்கும் பாரத இணைவிற்கும் பாரத பிரதமரின் ஆதரவு வேண்டி நிற்கிறது.
நேபாளம் பூடான் இலங்கை மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் பிரகடனம் ஏதும் இல்லாமல் இந்தியாவின் ஒரு அங்கமாக செயல் பட தொடங்கி விட்டது.

பாரதத்தின் சுதந்திர நூற்றாண்டு விழா காணும் போது பிரகடனம் ஏதுமின்றி அகண்ட பாரதம் உருவாகி அகிலத்தின் குருவாக பாரதம் மிளிரும் . அடைக்கலம் வேண்டுவோருக்கும் அமைதி தேடி வருவோருக்கும் அபயம் தரும் தாய்மடியாக பாரத தேவி பூதேவியாக போற்றப்படுவாள். அதை பார்க்க அந்த அரசியல்வாதி உயிருடன் இருக்கட்டும்.

காஷ்மீரம் முதல் மணிப்பூர் வரை சொந்த மண்ணில் அகதிகளான மண்ணின் மைந்தர்கள் தங்களின் இன்னல் மறைந்து அமைதியான வாழ்வை பெறட்டும். இந்த மாநிலங்களில் இந்திய இறையாண்மை பாதுகாக்க வேண்டி வீர மரணம் எய்திய இராணுவ சகோதரர்கள் பனிமலை உறையும் சிவனின் பாதத்தில் அமைதி அடையட்டும். அவர்கள் வீரமும் தியாகமும் அவர்கள் தேசத்தை அவனியில் தலைமையில் அமர்த்துவதை பார்த்து ஆன்மா பூரிக்கட்டும்.


Share it if you like it

One thought on “காஷ்மீர் மாநிலம் தனது சிறப்பு அந்தஸ்து என்ற பிரிவினையிலிருந்து மீண்டு பாரதத்தின் அங்கமாக இணைந்து தினம்

Comments are closed.