INDIA வை மீண்டும் பிளவுபடுத்த வரும் I.N.D.I.A. – இந்தியர்கள் ஜாக்கிரதை

INDIA வை மீண்டும் பிளவுபடுத்த வரும் I.N.D.I.A. – இந்தியர்கள் ஜாக்கிரதை

Share it if you like it

சுதந்திர இந்தியாவை எந்த வகையிலும் முன்னேற விடாமல் மக்களையும் ஒன்று பட விடாமல் தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி ஆட்சி மூலமாக அந்நிய சக்திகள் இங்கு செய்த பல சதிகள் சிக்கல்கள் நமக்குத் தெரியும். தற்போது இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் அடைவதற்காக அவர்கள் செய்யும் சதிகளை டூல் கிட் என்ற பெயரில் குறிப்பிடுகிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சியே அந்நிய சதிகளின் ஒருங்கிணைந்த டூல்கிட் தான் என்பதை நிரூபிக்கும் நிகழ்வு தான் I.N.D.I.A கூட்டணி. சுதந்திர இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் உயர்ந்த சிறப்பில் பல நூறு சமஸ்தானங்களை ஒன்றிணைத்து படேல் பாரத பேரரசை மீண்டும் கட்டமைத்தார். ஆனால் பிரதமர் பதவியில் இருந்த நேரு மூலமாக அவரது அந்நிய எஜமானர்கள் அந்த வேற்றுமையில் ஒற்றுமையில் பிரிவினை என்ற விஷம் விதைத்து சிதைக்க ஆங்காங்கே பல்வேறு விஷ விதைகளை விதைத்தார்கள்.

காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்து .வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் சமூக – பொருளாதார – அரசியல் புறக்கணிப்பு. மேற்கு வங்கம் தொடங்கி எல்லைப்புற மாநிலங்களில் சீன- வங்கதேச -பர்மிய ஊடுருவல் அனுமதி . 7 சகோதரிகள் என்னும் வடகிழக்கு மாநிலங்களில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற ரீதியில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் வளர்ந்து அந்நிய உதவியோடு போதை – பிரிவினை- மதமாற்றம் வளர்க்க இடம் கொடுத்தது. பஞ்சாப் – ஹரியானா மாநிலங்களில் காலிஸ்தான் பிரிவினை வாதத்தை வளர்த்ததும் எல்லைப் புற கண்காணிப்பை பெயரளவில் வைத்திருந்து போதை – ஆயுதம் ஊடுருவல் அனைத்திற்கும் இடமளித்தது.

ராஜஸ்தான் -குஜராத் – மகாராஷ்டிரா என்ற தொழில் பொருளாதாரம் கனிமங்கள் நிறைந்த மாநிலங்களில் பகை நாடான பாகிஸ்தானுக்கு கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த போதிலும் கண்காணிப்பு -உளவுப் பணி – கடலோர காவல் என்று அனைத்தையும் பெயரளவில் மட்டுமே வைத்திருந்தது. மத்திய மாநிலங்களான உத்தர பிரதேசம் – மத்திய பிரதேசம் – பீகார் உள்ளிட்டவற்றை. நிலச்சுவான்தார் முதல் உள்ளூர் சமூக விரோதிகள் வரை நிழல் அரசாக வளரவிட்டது. இலக்ஷதீபத்தை மினி பாகிஸ்தானாக வளரவிட்டது. அதன் மூலம் சாதி – மத – பண்பாட்டு ரீதியிலான சிக்கல்களை தீர்வை எட்ட விடாமல் கொழுந்து விட்டு எறிய செய்ததன் மூலம் எப்போதும் ஒரு பதட்ட நிலையை தக்க வைத்து வளர்ச்சியை முடக்கியது. கோவா – பாண்டிச்சேரி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் காலணியில் இருந்து விடுபட்ட பகுதிகளை முழுமையான கண்காணிப்பு கட்டுப்பாடு செய்யாமல் விட்டது.

தென் மாநிலங்களில் கேரளாவில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் தனித்தனியாகவும் மறைமுக கூட்டணியாகவும் மத பயங்கரவாதத்தையும் அந்நிய ஊடுருவல் மற்றும் ஹவாலா உள்ளிட்ட தலைநகரமாக வளரவிட்டது. தமிழகத்தில் திராவிடம் என்ற பெயரில் அந்நிய அடிவருடிகளையும் பிரிவினைவாதிகளையும் வளரவிட்டு வேடிக்கை பார்த்தது. பின் நாளில் அவர்களோடே கூட்டணி போட்டு அரசுரிமை கண்டது. தென் மாநிலங்களில் கேரளா – கர்நாடகா – ஆந்திரா – தமிழகம் இடையே எந்த ஒரு ஒருங்கிணைப்பும் நல்லுறவும் வராத வண்ணம் நதிநீர் பங்கீட்டு சிக்கலை உருவாக்கி அது தீராமல் பார்த்துக் கொண்டது.

எல்லா மாநிலங்களுக்குள்ளும் புதிய மாநில தேவை பிரிவினை கருத்தை உருவாக்கி அதற்கு ஆதரவு – எதிர்ப்பு நிலையில் பதட்டத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் காண்பது.

காங்கிரஸ் கட்சி தங்களுக்கு தேவை வரும்போதும் அரசியலில் தங்களின் அதிகாரம் வீழும்போதெல்லாம் மேற்கண்ட மாநிலங்களில் இருக்கும் பிராந்திய பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றை பற்றவைத்து கொழுந்து விட்டு எரியச் செய்வதும் அதை வைத்து ஒற்றுமை – ஸ்திரத்தன்மை – பாதுகாப்பு என்று மக்களை ஏமாற்றி அதிகாரத்தை தக்க வைத்ததும் வரலாறு. அதிகாரம் தங்கள் கைகளை விட்டு நழுவும் போதெல்லாம் மீண்டும் ஒரு பெரும் கலவரத்தை உருவாக்கி உயிர் பலிகளை நிகழ்த்தி தங்களின் மீது இருக்கும் அதிருப்தியை மக்களின் உயிர் பயமாக மாற்றி தங்களின் அதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தியது. இதற்கு துணையாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் – சிறுபான்மை கட்சிகள் – அமைப்புகள் – மற்றும் வாக்கு வங்கி அரசியல் – ஊடகங்கள் – பிரிவினை சக்திகள் என்று அனைவருடனும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து களம் கண்டது தான் காங்கிரஸ் ன் கடந்து வந்த பாதை.

சுதந்திரம் பெற்ற நாள் முதலாய் வடகிழக்கு மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சிக்கல் இருப்பதும் ஒரே மாநிலத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதும் சுதந்திர வரலாற்றையும் வடகிழக்கு மாநில மக்களின் வாழ்வியலையும் அங்குள்ள அரசியல் – சமூக – பொருளாதார சூழலையும் அறிந்தவர்கள் யாவரும் நன்கறிவார்கள். அரை நூற்றாண்டு காலம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்ட அந்த மக்கள் வெளி உலக தொடர்புகள் இல்லாத நிலையில் அந்நிய சதிகளில் அகப்பட்டு போதை – மதமாற்றம் – மத பயங்கரவாதம் தனில் விழுந்து இன்று தேச விரோத சக்திகளாக வளர்ந்து நிற்கிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் ஆளும் மத்திய அரசால் அங்கிருந்த பல்வேறு குழப்பங்களுக்கு முடிவு கட்டப்பட்டது . குழப்ப தாரிகளுக்கு முடிவுரை எழுதப்பட்டது. அதில் நிலைமை பெரும்பாலும் சீரடைந்தது . அங்குள்ள மக்களும் கடந்த காலங்களில் தாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதையும் சுரண்டப்பட்டதையும் உணர்ந்து முழு மனதோடு இந்தியர்களாக வளர்ச்சி பாதைக்கு திரும்ப தயாராகி விட்டார்கள். ஆனால் அப்படி அவர்கள் இந்தியர்களாக இந்திய அரசோடு இணைந்து விட்டால் தங்களின் பிரிவினைவாதம்- மதமாற்றம் – மத பயங்கரவாதம் – போதை பொருள் – ஆயுத கடத்தல் உள்ளிட்ட அத்தனை தொழில்களும் பாதிக்கப்படுவதோடு பாரதத்தை சிதறடிக்க வேண்டும் என்ற முயற்சியும் பாரதத்தின் வளர்ச்சியை உலக அரங்கில் தடுக்க வேண்டும் என்ற முயற்சியும் தடைபடும் என்ற வெறியில் அந்நிய சக்திகளும் அவர்களின் உள்நாட்டு முகமான கடந்த கால ஆட்சியாளர்களும் அவர்களின் கூட்டாளிகளும் செயற்கையாக தங்களது அடிவருடிகளின் மூலம் திட்டமிட்டு உருவாக்கிய கலவரம் தான் தற்போது மணிப்பூரகம் பற்றி எரிவது.

கலவரத்தின் தொடக்கத்திலேயே மத்திய அரசு காட்டமாக நடவடிக்கை எடுத்திருந்தால் ஐயோ சொந்த மக்களை மோடி அரசு கொன்று குவிக்கிறது ! என்று பிண அரசியல் செய்திருப்பார்கள். அவர் பொறுமை காத்ததனால் மோடி அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்று அறிவுரை சொல்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் தங்களின் முகத்தை தெளிவாக காண்பித்து விட்டார்கள். இதற்காகவே காத்திருந்த மத்திய அரசு தற்போது நேரடியாக களம் இறங்குகிறது. இனி அங்கு காட்சிகள் மாறும். கலவரத்திற்கு காரணமானவர்களும் அவர்களின் பின்னணியில் இருந்தவர்களும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். ஏற்கனவே கண்டறியப் பட்டு கண்காணிப்பில் இருக்கும் அவர்களின் நதிமூலம் – ரிஷிமூலம் இனி வேரோடு அருத்தெறியப்படும்.

ஆனால் அங்கு நடந்த ஒரு நிகழ்வை ஏதோ மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஆதரவோடு மணிப்பூரில் ஆளும் மாநில பாஜகவை சேர்ந்த கட்சிக்காரர்கள் செய்தது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் பாஜகவிற்கு நாடு முழுவதும் அவப்பெயரையும் மோடி சர்க்கார் மீது அதிருப்தி யும் , உலக அரங்கில் பாரதம் – மோடி இரண்டிற்கும் அவமதிப்பையும் உருவாக்க வேண்டும் என்ற திட்டமிட்ட செய்த சதி தவிடு பொடியான வெறியில் அவர்கள் மணிப்பூர் மணிப்பூர் என்று கதறுகிறார்கள். மோடிஎதிர்ப்பு கருத்தியல் உருவாக்கம் செய்ய நினைப்பது சரிதான். செய்வதற்கு முன்பாக கிடைத்த காணொளியில் இருப்பது என்ன? செய்தது யார்? எப்போது – எதற்காக செய்தார்கள் ?அதன் பிண்ணணி மற்றும் விளைவுகள் என்னவாக இருந்தது ? என்று ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி சேகரித்த தகவல்களை சரி பார்த்துவிட்டு பிறகு களத்தில் இறங்கி இருந்தால் இந்த அசிங்கத்தை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.

அந்த வகையில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் அடைவதற்காக காங்கிரஸ் கட்சி எந்த எல்லைக்கும் போகும் என்பதற்கு காஷ்மீரும் – மணிப்பூரும் கண்கண்ட சாட்சிகள். காங்கிரசுக்கு துணையாக அதன் கூட்டணி கட்சிகள் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போகவும் தயங்காது என்பதற்கு கண்கண்ட சாட்சியம் தான் மணிப்பூர் சம்பவத்தை முன்னிறுத்தி அவர்கள் செய்யும் பிண அரசியல். அவர்களின் நோக்கம் – இலக்கு – எண்ணம் எல்லாமே ஒன்றுதான். இந்த தேசம் அதன் தர்மம் மக்கள் அனைத்தையும் சிதறடிக்க வேண்டும். இங்கு அந்நிய மதத்தை அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டும். இங்குள்ள பொருளாதாரம் வளங்கள் யாவும் அவர்களின் கைகளுக்கு போக வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் அதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

அதன் வெளிப்பாடு தான் ஆளும் பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து எவ்வளவு குற்றச்சாட்டு அபாண்டம் அவதூறு பேச முடியுமோ அத்தனை பேசிய பிறகு அதற்கு பிரதமர் உள்ளிட்ட ஆளுங்கட்சி பதில் தரும் போது அவையை விட்டு வெளியேறியது. அவர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அவர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக வாக்களித்து தங்கள் தீர்மானத்தை வெற்றி பெற செய்ய முயலாமல் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறிய கபட நாடகம் . அவர்கள் தீர்மானம் மற்றும் அவர்களது அரசியல் சார்பு இரண்டும் இந்த மண் மற்றும் மக்களுக்கு எதிரானது தான். அதை வெற்றி கரமாக நிறைவேற்ற அவர்களுக்கு மோடி எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு என்ற முகமூடிகள் தேவைப்படுகிறது.

சீதையை கவர்ந்து செல்ல மாயாவி மாரிசன் எப்படி மாயமானாக வந்து ராவணனுக்கு உதவினானோ? அதேபோல எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக மக்களை திசை திருப்பி காங்கிரஸ் கட்சியை மீண்டும் அரியணையை அமர்த்த வேண்டும். அதன் மூலம் என்றைக்கும் இந்தியா தங்களின் காலனி நாடாகவே நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்க வேண்டும் என்று நினைக்கும் அந்நிய சக்திகள் அரங்கேற்றும் மாயமான் அரசியல் தான் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் I.N.D.I.A.

இந்தியர்களே !

கானல் நீருக்கும் கங்கை நீருக்குமான வித்தியாசத்தை பருகித்தான் உணர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பார்த்தும் கேட்டும் பகுத்தாய்ந்து கூட உணர முடியும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் காலத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் இது போல் நிறைய சம்பவங்கள் சதிகளாக அரங்கேற கூடும். எத்தனை சதிகள் எதிர்பட்டாலும் அத்தனையும் கடந்து மோடி என்னும் ராஜரிஷியின் பின்னே நாம் அணிவகுத்து நின்றாலே போதும். நம்மையும் நம் சந்ததிகளையும் நம் தேசத்தையும் எப்படி பாதுகாக்க வேண்டும்? என்று அவருக்குத் தெரியும்.எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்.

மீண்டும் மோடி! வேண்டும் மோடி. !


Share it if you like it