இஸ்ரேலிய பெண் சிங்கங்கள் – சிறப்பு பயிற்சி பெற்ற பெண் கமோண்டோக்கள் மூலம் எதிரிகளை பந்தாடும் இஸ்ரேல்

இஸ்ரேலிய பெண் சிங்கங்கள் – சிறப்பு பயிற்சி பெற்ற பெண் கமோண்டோக்கள் மூலம் எதிரிகளை பந்தாடும் இஸ்ரேல்

Share it if you like it

பார்ப்பதற்கு பெரும் வசீகரமாகவும் அழகாகவும் இருக்கும் இந்த இளம் பெண்கள் ஹாலிவுட் கதாநாயகிகளோ அல்லது ஜேம்ஸ் பாண்ட் படத்தின் இணை நாயகிகளோ அல்ல. இவர்கள் அனைவரும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையில் இருக்கும் பெண் கமாண்டோ பிரிவு சிறப்பு அதிகாரிகள். புனித போர் என்ற பெயரில் மத பயங்கரவாதத்தை நிகழ்த்துபவர்கள் பெண்களின் கையால் மரணம் அல்லது பெண்களின் காரணமாக மரணம் ஏற்பட்டால் தாங்கள் சுவனம் போக முடியாது தங்களுக்கான மறுமையின் பரிசுகள் சலுகைகளை அனுபவிக்க முடியாது என்பதை தீர்க்கமாக நம்புபவர்கள் . அவர்களின் மத நம்பிக்கையையும் அதில் தீவிரம் காட்டும் அவர்கள் மனநிலையையும் தெளிவாக உணர்ந்து கொண்ட இஸ்ரேல் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகளில் அதிரடியாக பெருமளவிலான பெண்களை பணியமத்தியது. சாதாரண நிலை தொடங்கி உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வரை கடினமான பயிற்சிகளும் சிறப்பு ஆயுதங்கள் தொழில்நுட்பங்கள் கையாளுகையிலும் தேர்ந்த இஸ்ரேலிய பெண் புலிகளை வளர்த்தெடுத்தது. அவர்கள் களத்தில் முன் வரிசையில் நின்று எதிரிகளை தும்சம் செய்ய தொடங்கியதும் இஸ்ரேலிய எதிரிகள் தெறித்து ஓட தொடங்கினார்கள்

பாலைவனப் பிரதேசத்தில் சுற்றிலும் எதிரி நாடுகளுடனும் மத ரீதியான எதிர்ப்புகள் சர்வதேச அளவிலான அச்சுறுத்தல்கள் என்று பெரும் ஆபத்துக்கு இடையில் இஸ்ரேல் என்னும் ஒரு குட்டி நாடு இன்றளவும் எதிரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக பலப் பரீட்சை செய்து வருகிறது.

எந்நேரமும் போர் பதற்றம் எப்போது வேண்டுமானாலும் தீவிரவாத தாக்குதல்களும் போர் போர் அறிவிப்பும் வரலாம் என்ற உச்சகட்ட பதட்டம் சூழும் நிலையில் கூட எந்த விதமான நெருக்கடிகளையும் இடர்பாடுகளையும் எந்நேரமும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் தனித்துவத்துடன் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் விளங்குகிறது. அதே நேரத்தில் தன் தரப்பில் ஒரு பங்கு உயிரிழப்பு சேதம் என்றால் எதிர்தரப்பில் அது 10 மடங்காக திருப்பித் தரப்பட வேண்டும் என்ற எழுதாத சட்டத்தை இன்றளவும் பின்பற்றி வரும் இஸ்ரேலிய போர் வியூக பாணி தான் இன்றளவும் அவர்களை பாதுகாத்தும் வருகிறது.

பாம்புகளுக்கு புரிய வேண்டும் என்றால் பருந்தின் மொழியில் தான் பேச வேண்டும் என்ற பாரதத்தின் தலைசிறந்த மாவீரர் ஒருவரின் அறிவுரையை இந்தியாவை காட்டிலும் அதிக அளவில் நடைமுறைப்படுத்தி வருவது இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு என்றால் அது மிகையல்ல.காரணம் எண்ணெய் வளம் மிகுந்த பாலைவனப் பிரதேசம். சுற்றிலும் அரபு நாடுகளின் நேரடி மறைமுக பகை. அவர்களுக்குள் எத்தனை பகை இருந்தாலும் மத ரீதியாக ஒருங்கிணையும் ஒற்றுமை . இவை அனைத்திற்கும் இடையில் மதரீதியாகவும் அமெரிக்காவின் நெருங்கிய சகோதர நாடு நட்பு நாடு என்ற அளவில் பெரும் விரோதத்தையும் பகையையும் வளர்க்கும் விதமான ஒரு சிறிய தேசம் இஸ்ரேல். அந்த வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தற்காத்துக் கொள்ளவும் எந்நேரமும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற மனநிலை எப்போதும் இஸ்ரேலிய மக்களுக்கு உண்டு.

அந்த வகையில் மறைந்திருந்து கோழைத்தனமான கொத்து கொலைகள் நிகழ்த்துவது, பெண்கள் குழந்தைகள் மருத்துவமனைகள் கல்வி வளாகங்கள் என்று மனிதாபிமானமற்ற தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்துவது என்ற பயங்கரவாதத்தின் உச்சத்தில் இருக்கும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் சீருடை இல்லாத ராணுவமாக உலவும் பல்வேறு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் என்று உயிர் ஆபத்தில் வாழ்ந்து வந்த இஸ்ரேல். இதை தங்கள் நாட்டு தேசிய உணர்வு தங்களின் ஆயுத பலம் மட்டும் கொண்டு எதிர்கொள்ளும் போது பெரும் இழப்புகளை சந்தித்தது . ஆனால் எதிரிகளின் பலவீனம் என்ன என்பதை கண்டறிந்து அதையே தனது பாதுகாப்பு வியூகமாக மாற்றி அமைத்த போது பெருமளவில் சுய சேதாரத்தை தவிர்த்ததோடு எதிர் தரப்பை பெட்டி பாம்பாக அடக்கி வைத்தது.

வலிய வந்து தாக்குதல் நடத்துவது தேடித்தேடி பயங்கரவாத கொடூரங்களை அரங்கேற்றுவது என்று இருந்த இஸ்ரேலின் எதிரி நாடுகளும் அதன் பயங்கரவாத அமைப்புகளும் இந்த பெண் கமாண்டோக்களையும் அவர்களின் தேடுதல் வேட்டையையும் அறிந்தால் ஒன்று பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி தற்காத்துக் கொள்வார்கள். இல்லையேல் துண்டைக் காணோம் துணியை காணோம் என்று இஸ்ரேலிய எல்லையை விட்டு ஓடுவார்கள். காரணம் பெண்ணின் கையால் மரணம் என்றால் தன்னுடைய மரணம் வெறும் மரணமாகவே முடியும். அது புனித போரில் தியாகமாக கருதப்படாது என்ற அச்சமும் அதன் காரணமாக வரும் அவமானமும் அவர்களை இஸ்ரேலிய பெண் புலிகளை கண்டால் திரும்பிப் பார்க்காமல் ஓட வைத்தது .

பல வருடங்களுக்கு முன்பு வரை பெரும் சேதம் இழப்பை சகஜமாக எதிர்கொண்டு வந்த இஸ்ரேலிய ராணுவம் சமீப காலங்களில் குறைந்த இழப்போடு தன்னை தற்காத்துக் கொள்வதும் எதிரி நாட்டில் பெரும் சேதத்தை இழப்பை ஏற்படுத்துவதும் இதன் பின்னணியே.

இதை படிக்கும் யாருக்கும் ஏன் இந்தியாவில் இது போன்ற ஒரு கட்டமைப்பு இல்லை என்ற கேள்வி வரலாம். அவர்களுக்கான பதில் இதுதான். இந்தியாவின் பாதுகாப்பு படைகளிலும் முக்கிய சிறப்பு பிரிவுகளிலும் கூட சமீப காலமாக அதிக அளவில் இந்திய பெண்கள் கோலோச்சி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் பாதுகாப்பு பணிகளுக்கான கடினமான பயிற்சிகளை பெற்றதோடு வெளிநாடுகளிலும் சில விசேஷ பயிற்சிகளை முடித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாலக்கோடு தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ராணுவ நடவடிக்கையில் இந்திய விமானப்படைகளை ஒருங்கிணைத்து வழி நடத்தியதில் ஒரு பெண் கமெண்டோவின் பணி அபாரமானது என்பது இதற்கு சாட்சியம்.

அந்தப் பெண் கமாண்டோ உள்ளிட்ட எண்ணற்ற இந்திய பெண்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம் தீவிரவாத தாக்குதல் எல்லையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் எதிரி நாட்டு ராணுவத்தால் ராணுவத்திலும் இதர பாதுகாப்பு படைகளிலும் இருந்த தங்களது கணவன்களை பறிகொடுத்தவர்கள். அவர்களின் மீது இருந்த அன்பாலும் இந்த தேசத்தின் மீது இருக்கும் பற்றாலும் தனது கணவன்மார்கள் விட்டுச் சென்ற பணியை அந்த இடத்திலிருந்து தாங்கள் தொடங்க வேண்டும் என்று இந்திய ராணுவத்தில் தாமாக முன்வந்து இணைந்தவர்கள். குறுகிய கால விசேஷ பயிற்சியை முடித்து ராணுவ அதிகாரிகளாகவும் விமானப்படை உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற பெயரில் இந்திய எல்லைப்புற நாடுகளில் தொடர்ந்து மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் எல்லாம் இவர்களின் கைவரிசை தான் பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது என்பது கூடுதல் தகவல்.


Share it if you like it