தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்த காலம் அது. பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை. கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்த ஆட்சி தான் இருந்தது. பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனை செய்ததற்காக இந்தியாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்திருந்த காலகட்டம். அதையும் மீறி வாஜ்பாய் உள்நாட்டு முயற்சியின் மூலம் தேசத்தை தற்காத்து வந்த பெரும் சவாலான காலகட்டம். பாரதத்தின் மீது பொருளாதார தடை விதித்த போதிலும் வாஜ்பாய் அரசையும் பணிய வைக்க முடியவில்லை. பாரதத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வன்மத்தின் உச்சத்தில் அமெரிக்கா இருந்த சோதனையான காலகட்டம் அது.
இந்தியாவில் ஆண்ட பரம்பரையில் வந்த ஒரு 23 வயது ஆண் வாரிசு தனிப்பட்ட காரணங்களுக்காக கொலம்பியா நாட்டிற்கு போய் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவின் பாஸ்டன் விமான நிலையம் வழியாக பயணித்துக் கொண்டிருந்தார். பாஸ்டன் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது அவரது கைப்பையில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட கொக்கெயின் என்ற போதை பொருளும் ஒரு சிறிய ரக கை துப்பாக்கியும் இருந்ததாக கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்காமல் போதையில் பொறுப்பற்று நடந்து கொண்டதால் அமெரிக்கா விமான நிலைய பாதுகாப்பு நடைமுறைகளின் படி உடனடியாக அந்த இளைஞர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது பாஸ்போர்ட் அந்த நிமிடமே ரத்து செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் இந்தியாவில் ராஜ வம்சம் என்று பல லட்சம் கொத்தடிமைகளால் கொண்டாடப்படும் ஒரு வம்சத்தின் இளவரசர், என்பதால் உடனடியாக தகவல் இந்திய தூதரகம் மூலமாக அப்போதைய மத்திய அரசுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மின்னல் வேகத்தில் தகவல் வந்து சேர்ந்தது. ஏற்கனவே அமெரிக்காவோடு உரசல் இருக்கும் நேரத்தில் இந்த விஷயத்தில் என்ன செய்வது ? என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கையை பிசைந்து நின்றது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொக்கைன் போதை பொருள் மற்றும் அமெரிக்காவுக்கு கொஞ்சமும் ஆகாத கொலம்பியா நாட்டில் இருந்து வந்த பயணி. போதாக்குறைக்கு அவர்களின் குடும்பப் பின்னணி வேறு அமெரிக்க சி ஐ ஏ விற்கு ஆகாத குடும்பம் என்று ஏற்கனவே எரிந்து கொண்ட தீயில் அந்த இளைஞன் தனது பொறுப்பற்ற நடவடிக்கையால் எண்ணெய் ஊற்றியதில் பாரதம் பதை பதைத்தது.
கையும் களவுமாக பிடிபட்ட ஒரு குற்றவாளியை , போதை – ஆயுத கடத்தல் மற்றும் விமான நிலைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு குற்றங்களுக்கு ஆளான அமெரிக்க சட்டத்தின் படி மரண தண்டனைக்கு தகுதியான ஒரு குற்றவாளி. விதிகளை மீறி பாரதத்தின் மத்திய அரசு தலையிட்டு மீட்குமானால் ,அது பாரதத்திற்கு சர்வதேச அரங்கில் பெரும் தலைகுனிவு மறுபுறம் அமெரிக்காவிடம் மண்டியிட வேண்டிய துரதிருஷ்டவசமான சூழல்.அவரவர் செய்த செயலுக்கு அவரவரே பொறுப்பு . என்ற வகையில் வாஜ்பாய் அரசு அமைதியாக ஒதுங்கிக் கொண்டால் வாஜ்பாய் அரசின் மீது பழி வந்து சேரும். எதிர்க்கட்சிகளை ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு வெளிநாட்டோடு சேர்ந்து வாஜ்பாய் அரசு சதி செய்கிறது. என்ற பழியும் வந்து சேரும் என்ன செய்வது? என்று வாஜ்பாயும் ஒரு கணம் திகைத்து தான் போனார்.
அந்த இளவரசனை பெற்ற பெண் நேராக அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் வீட்டிற்கு சென்று . ஆனால் எப்படியாவது என் மகனைக் காப்பாற்றுங்கள்! என்று கண்ணீர் மல்க கேட்ட பொழுது வாஜ்பாயின் கண்முன்னே தெரிந்தது ஒரு தாயும் தன் மகனைக் காக்க வேண்டும் என்ற அவளது கண்ணீரும் மட்டுமே.ஏற்கனவே தொடர்ச்சியாக பல உயிர்களை கொடூரமாக இழந்திருந்த ஒரு குடும்பத்தின் வலி என்னவாக இருக்கும்? என்பதை குடும்பம் இல்லை என்றாலும் உணரக்கூடிய மனிதத்துவம் இருந்த மாமனிதர் அவர். அடுத்த கணமே இதை வெளிப்படையாக அணுகாமல் வேறு விதமாகத்தான் கையாள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து கவலைப்படாமல் வீட்டுக்கு போங்கள்! உங்களின் மகன் பத்திரமாக வருவான்! என்னை நம்புங்கள் என்று வாக்குறுதி கொடுத்து அந்த பெண்ணை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
தன்னையும் தனது அரசையும் எப்போதும் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்ட தங்களை மட்டம் தட்டுவதற்கு என்ன வாய்ப்பு கிடைக்கும்? என்று காத்திருக்கும் நபர் என்று தெரிந்த போதிலும் தன்னுடைய ஈகோவை விட்டுவிட்டு அந்த மனிதருக்கு உடனடியாக தொலைபேசியில் அழைப்பு விடுத்து உங்களுக்கு அமெரிக்காவில் சாதாரண நிலை முதல் வெள்ளை மாளிகை வரை எல்லா மட்டத்திலும் லாபி இருப்பதை நான் நன்கு அறிவேன். நான் எனக்காக எதையும் கேட்கவில்லை. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு 50 முதல் 60 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை என்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு 22 மணி நேரங்களாக அமெரிக்காவின் பாஸ்டன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞனை எப்படியாவது காப்பாற்றுங்கள் .
இதில் நானும் நமது அரசோ நேரடியாக தலையிட முடியாது. நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். இந்த விஷயம் சர்வதேச அரங்கில் பேசும் பொருள் ஆனால் அது அந்த குடும்பத்திற்கு மட்டும் அவமானம் என்று நினைக்க வேண்டாம். அது ஆண்ட பரம்பரை என்ற வகையில் நம் பாரதத்திற்கும் பெரும் அவமானம் தான் . காற்றில் பறக்க போவது நம் தேசத்தின் தன்மானம் தான் ! என்பதை உணருங்கள்.
உங்களுக்கு எங்களின் மீது ஏதேனும் கோபம் இருந்தால் கூட அதை தீர்த்துக் கொள்ள பல வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். அதை இதில் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். அமெரிக்காவிடமும் நான் இதையே தான் கேட்கிறேன்.இந்த விஷயத்தில் உடனடியாக களமிறங்கி அந்த இளைஞனை பத்திரமாக தாயகத்திற்கு திருப்பிக் கொண்டு வாருங்கள்.நான் ஒரு தாய்க்கு வாக்களித்து இருக்கிறேன் .உங்கள் மகனின் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு கவலைப்பட வேண்டாம் என்று என் வார்த்தையை காப்பாற்றுங்கள். நம் தேசத்தின் மானத்தை காப்பாற்றுங்கள் என்று அந்த மனிதரிடம் வாஜ்பாய் வேண்டுகோள் விடுத்தார் .
வாஜ்பாயின் மீது தனிப்பட்ட மரியாதையும் தேசிய உணர்வும் கொண்ட அந்த நபர் தனது செல்வாக்கை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாகவும் நினைத்த அந்த மனிதர் அடுத்த கணம் களத்தில் இறங்கினார். சில மணி நேரங்களில் போதை பொருட்கள் பறிமுதல் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரின் மீது போடப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். ஆன போதிலும் அவரது கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட காரணமாக அவர் தொடர்ச்சியாக விமான நிலையத்திலேயே கைதியாக இருக்க வேண்டிய சூழல்.வாஜ்பாய்க்காக களம் இறங்கி வேலை செய்த அந்த மனிதர் மீண்டும் வாஜ்பாயை தொடர்பு கொண்டார். வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அமெரிக்காவில் பாஸ்டன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அவனும் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தான்.
இந்த விவகாரத்தில் வாஜ்பாய் நினைத்திருந்தால் சாகும் வரை அந்த இளைஞனை அங்கேயே சிறை வைத்திருக்க முடியும். அதை காரணமாக வைத்து இங்கே அவரின் தாயை முடக்கி இருக்க முடியும். அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் மன்னர் வகையறா என்று சொல்லிக் கொள்ளும் அந்த கொத்தடிமைகளுக்கு அடுத்து எங்களின் வாரிசு இவர்தான்! என்று சொல்லிக் கொள்ள ஆளே இல்லாமல் செய்திருக்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் என்பதை கடந்து நம் தேசத்தின் பிரதமர் தலைவர்கள் சக குடிமக்கள் என்ற வகையில் முன்னாள் பிரதமர்களின் கொலையாளிகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த அந்த மாமனிதர், சரியோ தவறோ நம் தேசத்தின் மானம் அந்நிய மண்ணில் காற்றில் பறக்க கூடாது என்று அந்த ஊதாரியை பத்திரமாக பாதுகாத்து குடும்பத்திடம் கொண்டு வந்து சேர்த்தார்.
அதற்கு பிரதிபலனாக அந்த தாய் காத்மாண்டுவில் இருந்து காந்தஹா ருக்கு இந்திய விமானம் கடத்தப்பட்ட போது மிக சதுரயமாக ஒரு அரசியல் நாடகமாடி வாஜ்பாயின் அரசிற்கு எவ்வளவு பெரிய இக்கட்டை உண்டு செய்ய முடியுமோ? அதை செய்து தீவிரவாதிகளிடம் பாரதத்தை பணிய வைத்து அந்த தீவிரவாதிகளின் விடுதலைக்கு வித்திட்டு தான் ஒரு விஷ நாகம் என்பதை மீண்டும் தெளிவாக நிரூபித்தார்.
இன்று அந்த இளவலும் பாம்பில் நல்ல பாம்பு கெட்ட பாம்பு என்பதெல்லாம் ஏது பாம்பு பாம்பு தானே? என்ற தனது விஷ நாக்கை தினமும் நிருபித்து வருகிறார்.
கட்சி அரங்கம் முதல் நாடாளுமன்றம் வரை அரசியல் என்று. தனிமனித தாக்குதல் பேசுவார்.ஆளுங்கட்சி யை எதிர்க்கிறேன் என்று தேசிய இறையாண்மையை கூட அவமதிப்பார்.வெளிநாடுகளுக்கு போகும் இடங்களில் எல்லாம் இந்திய அரசை விமர்சனம் செய்வதாக தேசத்தை அவமதிப்பார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பகை நாடுகளோடு கை கோர்த்து பாரதத்தை பழி தீர்ப்பார். இதோ இன்று சீனாவோடு ஒட்டி உறவாடி வரலாறும் தெரியாமல் பூகோளமும் புரியாமல் சீன ஆக்கிரமிப்பு என்று பட்டியல் வாசிக்கிறார்.
இந்திய பகுதிகளில் சீன ஆக்கிரமிப்பு நடந்தது உண்மை தான். ஆனால் அது நடந்தது உங்கள் கட்சி ஆட்சியில் தான் ஆதாரத்தோடு காஷ்மீர் எம்பி ஆவணப் படுத்திவிட்டார். இளவல் மோடியை விமர்சனம் செய்கிறேன் என்று அவர்கள் குடும்ப அடிமையாக மன்மோகன் சிங் முதல் தனது தந்தை பாட்டி பாட்டியின் தந்தை என்று வம்சத்தையே இன்று சபையில் வைத்து அவமதித்திருக்கிறார். கண்டிக்க வேண்டிய தாய் கள்ள மவுனம் காக்கிறார்.
கட்சி குடும்பம் அரசியல் எல்லாம் அவர்களின் பதவி அதிகார வெறிக்கு மட்டும் தேவையான அடையாளம் தானே தவிர அது அவர்களின் உணர்வு இல்லையே. அவர்களின் உணர்வும் பந்தமும் இந்த தேசம் சார்ந்ததில்லையே அந்த வகையில் இந்த தேசத்தின் அவமானம் சங்கடம் இடர் பாடு மட்டுமே எங்கள் இலக்கு என்பதில் தாயும் மகனும் மகளும் என்று ஒட்டுமொத்த குடும்பமும் இந்திய விரோதத்தில் முதல் இடத்தில் நிற்கிறது.
தட்டி கேட்க வேண்டிய கட்சி காரர்கள் தங்களின் பதவி பணம் அதிகாரம் தக்க வைத்தால் போதும் என்று கள்ள மௌனம் காக்கிறார்கள். கண்டிக்க வேண்டிய கூட்டணி கட்சிகள் எப்படியாவது மோடியை வீழ்த்தி கூட்டணி ஆட்சி அமைத்தால் போதும். அதிகார கொள்ளையை தொடர்ந்தால் போதும் நாடும் மக்களும் எப்படி போனால் நமக்கென்ன என்று போய் கொண்டிருக்கிறார்கள்.
வாஜ்பாய் என்ற ஒற்றை மனிதரின் வேண்டுகோளிற்காக தனது அத்தனை செல்வாக்கையும் பயன்படுத்தி சில மணி நேரங்களில் தனது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு அந்த ஊதாரியை காப்பாற்றி கொண்டு வந்து சேர்த்த அந்த மனிதர் வாஜ்பாய் இடம் உங்களுக்காக தான் நான் இதை செய்தேன். ஆனால் கார்கோடகனுக்கு நீங்கள் பால் வார்த்திருக்கிறீர்கள். அதன் விஷத்தை ஒருநாள் நீங்களும் இந்த தேசமும் எதிர்கொள்ள தான் வேண்டும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார். அந்த தீர்க்கதரிசியின் வாக்கு இன்று வரை ஒவ்வொரு நாளும் நிரூபணம் ஆகி வருகிறது.
விரோதிக்கு கூட கெடுதல் அறியா வாஜ்பாய் என்னும் மாமனிதர் அன்று பால் வார்த்ததில் புத்துயிர் பெற்ற விஷ நாகங்கள் அன்று வாஜ்பாயின் மீதும் இன்று சிஷ்யரான மோடி என்னும் மகானின் மீதும் தனது கொடிய விஷத்தை தினமும் கக்கிக் கொண்டே இருக்கிறது. வாஜ்பாயின் வழியில் அவரது சிஷ்யரும் விஷத்தை கக்குவது உன்னுடைய வேலை. உனக்கும் சேர்த்து பால் வார்ப்பது என்னுடைய வேலை என்று கடந்து போகிறார்.!
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது உண்மைதானே ?