காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பிரிட்டனில் இடமில்லை – ஜி 20 மாநாட்டில் பாரதத்தின் ராஜீய வெற்றி

காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பிரிட்டனில் இடமில்லை – ஜி 20 மாநாட்டில் பாரதத்தின் ராஜீய வெற்றி

Share it if you like it

கடந்த காலங்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களது தேசத்தின் ஆளுமையை வெளிப்படுத்தவும் பாரதத்திற்கு நெருக்கடிகளை உண்டாக்கவும் பாரதத்தின் மீது வெறுப்பும் கசப்புணர்வும் கொண்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் கொடுத்து ஆதரவளித்தது. சமீப காலங்களில் பிரிட்டனின் பெரும் உள்நாட்டு சிக்கலாக இருந்து வருவது அங்கு அளவுக்கு மீறிய இஸ்லாமிய குடியேற்றத்தால் பெருகிவரும் பிரிட்டிஷார் அல்லாத இஸ்லாமிய குடிமக்களின் எண்ணிக்கையும் மறுபுறம் இந்திய காலிஸ்தான் பிரிவினை வாதத்தின் பல்வேறு பிரிவுகள் குழுக்களை சார்ந்தவர்களின் நடவடிக்கைகளும் பிரிட்டனுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்தது.

வலுவான உளவுத்துறை உலகில் பெரியண்ணன் அந்தஸ்தில் இருந்த போதே தொடர் குண்டு வெடிப்புகள் ரயில் குண்டு வெடிப்புகள் மூலம் பயங்கரவாத பிடியையும் ஊடுருவல் காரர்களின் உண்மையான முகத்தையும் கடந்த காலங்களில் பிரிட்டன் மக்கள் உயிரிழப்க்க நேரிட்டது. இந்த இழப்புகள் அவர்களை மீண்டும் அது போல் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு அரசு ஒரு ஆளுமையை நோக்கி நகர்த்தியது. அந்த வகையில் பயங்கரவாதத்தால் பெரும் சீரழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்த பாரதத்தின் அனுபவமும் அவர்களின் தற்காப்பு நடவடிக்கைகளும் பிரிட்டனுக்கு ஒரு பாடமாக இருந்தது.

கடந்த கால ஆட்சியாளர்கள் பாரதத்தை தங்கள் முன்னோர்களின் காலனி நாடாகவே பார்த்தார்கள். அதன் காரணமாக அவர்களால் வெளிப்படையாக எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பாரதத்துடன் நேரடியாக விவாதிக்கவும் ஆலோசனை செய்யவும் முடியாத நிலை இருந்தது. ஆனால் ரிஷி சுனக் பொருத்தவரையில் பாரதம் அவரின் பூர்வீக பூமி. பிரிட்டன் அவரின் கர்ம பூமி .அந்த வகையில் இரண்டில் நலனுக்கும் அவர் முன்னுரிமை கொடுத்த காரணம் பாரதத்தையும் அதன் ஆட்சியாளர்களையும் அவர் எந்த ஒரு நெருடலும் இல்லாமல் சக சகோதர மனப்பான்மையுடன் நெருங்கவும் முடிந்தது. தேவையான ஆலோசனைகள் ஒத்துப்புகளை கேட்டுப் பெறவும் முடிகிறது.

பாரதத்தை தாய் பூமியாக நினைக்கும் மனப்பான்மை காரணமாக பாரதத்தின் வெளியுறவு துறைக்கும் பல்வேறு ஒருங்கிணைப்பு ஒத்துழைப்புக்கள் பிரிட்டன் வெளியுறவுத் துறை மூலம் கிடைக்கப்பெற்றது. பாரதத்தின் சி ஏ ஏ – என் ஆர் சி உள்ளிட்ட குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள் கலவரங்கள் அனைத்திற்கும் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதமும் சீக்கிய பயங்கரவாதமும் ஓரணியில் கைகோர்த்து நின்றதை இந்திய உளவு துறைகள் நிரூபித்தது. இதற்கு முழு ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் சீக்கிய பயங்கரவாதத்தின் நாடு கடந்த களங்களாக இருக்கும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – பிரிட்டன் – அமெரிக்கா – கனடா – ஐரோப்பா யூனியன் உள்ளிட்ட இடங்களில் வலுவாக காலூன்றி இருப்பதும் அங்கெல்லாம் இவர்களுக்காக ஒரு லாபி இருப்பதும் நிரூபணமானது. அதன் மூலம் இவர்கள் தொடர்ச்சியாக பாரதத்தின் உள்ளும் வெளிநாடுகளில் இருக்கும் பாரதத்தின் தூதரக ராஜிய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அதை கலவரங்களாக மாற்றியமைத்து சர்வதேச அளவில் பாரதத்திற்கு தலைக்குனிவையும் பிரிட்டன் அரசுக்கும் சங்கடத்தையும் ஏற்படுத்தியதும் அம்பலமானது.

கடந்த காலங்களில் லண்டனில் இந்து ஆலயங்கள் தாக்கப்படுவது இந்துக்களின் பண்டிகைகள் விழாக்களில் திட்டமிட்டு குழப்பங்கள் கலவரங்களை ஏற்படுத்துவது . கனடா – அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்துக்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துவது என்ற பல்வேறு குற்ற சம்பவங்களின் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும் இருந்தது இந்திய ரா மூலம் உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் நடக்கும் கலவரங்களும் வன்முறைகளும் இந்துக்களுக்கு எதிரானதாக பாரத தேசத்திற்கு எதிரானதாக இருந்தாலும் அவை நடத்தப்பட்டவை எல்லாம் வெளிநாடுகளில் என்ற வகையில் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் , பொது அமைதி – சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் நிகழ்வுகளாகவே அந்தந்த அரசாங்கங்களால் பார்க்கப்பட்டது.

அந்த வகையில் உங்களுடைய தேசத்தில் எங்களுடைய குடிமக்கள் தூதரக அலுவலர்கள் ராஜ்ஜிய பரிபாலன வளாகங்கள் வழிபாட்டுத் தலங்கள் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகிறது. இதில் உங்களது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? அதற்கு எதிராக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என்று இந்திய வெளியுறவுத்துறை மூலமாக அந்தந்த நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அந்தந்த நாடுகள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. உரிய பதில் வராத நிலையில் அதே பாணியில் பதிலடி தரவும் பாரதம் தயாரானது.

லண்டனில் ஒரு இந்து ஆலயம் தீக்கிரையாக்கப்படுகிறது அங்குள்ள ஒரு பாரத தூதராக அலுவலகம் சூறையாடப்பட்டது. இதை மௌனமாக பிரிட்டன் அரசு பெயரளவில் நடவடிக்கை எடுத்துவிட்டு வேடிக்கை பார்த்தது .சில வாரங்களில் புதுடில்லியில் இருந்த பிரிட்டன் தூதரகம் அவர்களின் ராஜ்ஜிய வளாகம் மீது இங்கு சிறு அளவில் போராட்டம் வன்முறை முன்னெடுக்கப்பட்டது. பாரதத்தின் உள்துறை அமைச்சகமும் வெளியுறவுத் துறையும் அதே பாணியில் பெயரளவில் நடவடிக்கை எடுத்துவிட்டு அதை சர்வ சாதாரணமாக கலந்து போக பிரிட்டன் அரசு அதிர்ந்து நின்றது.

இந்நிகழ்வு பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருக்கும் பயங்கரவாத குழுக்களில் கூட இந்தியன் ராவிற்கான ஏஜென்ட்களை ஏற்படுத்தி அவர்கள் மூலமாகவே ஊடுருவி பகை அழிக்கும் வலிமையான உளவுத்துறையாக வளர்ந்து நிற்கும் இந்தியன் ராவிற்கு தலைநகர் புது தில்லியில் நடைபெறும் நிகழ்வுகள் தெரியாம இருந்திருக்கும்? தெரிந்து அவர்கள் அமைதி காக்கிறார்கள் என்றால் இது நிச்சயம் வெளிநாடுகளுக்கான ஒரு மௌன எச்சரிக்கை என்பதை அனைத்து நாடுகளும் புரிந்து கொண்டது. பிரிட்டன் – அமெரிக்கா – கனடா – ஐரோப்பா யூனியன் – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் என்று கடந்த காலங்களில் பாரதத்திற்கு பாதுகாப்பிற்கும் நலனுக்கும் ஊறு விளைவித்த பல்வேறு பயங்கரவாத சம்பவங்களின் ஈடுபட்டவர்கள் மர்மமாக மரணித்தார்கள் . தனிமனித கொலைகள் விபத்துகளாக நடந்தேறிய அந்த சம்பவங்களை எல்லாம் அந்தந்த நாடுகள் சாதாரண குற்ற வழக்குகளாக விசாரணை செய்து அறிக்கைகளை சமர்ப்பித்து விட்டு அமைதியாக கடந்து போனது.

இதையெல்லாம் கண்முன்னே பார்த்த பிறகு இனியும் பாரதத்தின் நியாயங்களை நாம் புறந்தள்ளி போனால் அதற்காக நாம் கொடுக்க வேண்டிய விலை நம்மால் ஈடு செய்ய முடியாத இழப்பாகவே இருக்கும் என்பதை மேற்குலக நாடுகள் ஒட்டுமொத்தமாக புரிந்து கொண்டது. அதன் வெளிப்பாடு தான் பாரதத்தின் எதிரிகள் எங்களின் எதிரிகள் . அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அலுவல்களுக்கோ எங்களது நாட்டில் இடமில்லை என்ற நிலைப்பாட்டில் வந்து நிற்கிறது. பிரிட்டன் கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் இல்லாமல் சமீப காலமாக பாரதத்தின் உளவுதுறை வெளியுறவுத்துறைக்கு போதிய ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராகி பாரதத்திற்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கும் பிரிட்டனில் இடம் இல்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறது.

பிரிட்டனின் இந்த நிலைப்பாட்டால் கடும் அதிருப்திக்கும் அதிர்ச்சிக்கும் ஆளான காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் தீட்டிய மரத்தை கூபாக்கும் செயலாக சமீப காலமாக பிரிட்டன் அரசையும் ஆட்சியாளர்களையும் தங்களின் எதிரியாக கட்டமைத்து அவர்களுக்கு அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக சில பல சம்பவங்களை அங்கு அரங்கேற்றினார்கள். ஏற்கனவே நிலைகுலைந்து இருக்கும் பொருளாதாரம் , மத ரீதியான உள்நாட்டு குழப்பங்கள் மக்கள் முன்னிருக்கும் அச்சுறுத்தல்கள் என்று பல்வேறு சிக்கலில் இருக்கும் காரணத்தால் பிரிட்டன் அரசு தங்களுக்கு அடிபணிந்து விடும் என்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் கணிப்பு பொய்யானது.

காரணம் தங்களின் பொருளாதார நெருக்கடி, மத பயங்கரவாதம் , சர்வதேச அளவிலான ராஜ்ஜிய உறவுகள் என்று அனைத்திற்கும் உலகின் குருவாக வளர்ந்து வரும் பாரதத்தின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் பிரிட்டன் அரசிற்கு தேவை. இன்றைய நிலையிலும் பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பு வளர்ச்சி என்று அனைத்து மட்டத்திலும் பல்வேறு பங்களிப்புகளை வழங்குபவர்கள் பிரிட்டிஷ் குடிமக்களாக இருக்கும் இந்திய வம்சாவழி சார்ந்த பெரும் தொழில் அதிபர்கள் இவர்கள் அனைவரும் செய்யும் லாபி பாரதத்தின் நன்மை, ராஜ்யப் பரிபாலனத்தின் வெற்றி என்பதை முன்னிறுத்தியே இருக்கும் . பிரிட்டன் அரசு பாரதத்தை பகைக்கும் பட்சத்தில் பிரிட்டன் அரசு மீதான நம்பிக்கை ஒத்துழைப்பை அங்குள்ள இந்திய வம்சாவழிகள் விலக்கிக் கொள்ள நேரிடும். அது பிரிட்டனின் உள்நாட்டு பாதுகாப்பு பொருளாதாரம் என்ற பல விஷயங்களிலும் மோசமாக எதிரொளிக்கும் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட பிரிட்டன் அரசு பாரதத்தின் எதிரிகள் தங்களுக்கும் எதிரிகள். நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து பாரதத்தின் உதவியுடன் உள்நாட்டு பயங்கரவாதத்திற்கும் உலக அளவிலான பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிரான நடவடிக்கைகளை எடுக்க தயாராகிறது.

அந்த வகையில் காலூன்ற இடம் கொடுத்து இத்தனை ஆண்டுகள் போஷாக்காக வளர்த்து வந்த பிரிட்டன் அரசே இன்று தங்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்துவதும் தங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க துணிந்திருப்பதும் காலிஸ்தான் பயங்கரவாதிகளை கடந்து தங்களுக்கும் இதே நிலைதானோ ? என்ற அச்சத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் நிறுத்தி இருக்கிறது. வேறுவழியின்றி ஒரு சிலர் பாரதத்திற்கு எதிரான தங்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டமைப்புகளை உதறிவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள். ஒரு சிலர் பிரிட்டனில் இருந்து தங்களின் நடவடிக்கைகளை வேறு ஏதேனும் ஒரு பாதுகாப்பான நாட்டிற்கு மாற்றிக் கொண்டு போகிறார்கள். இரண்டும் இல்லாதவர்கள் ஒரு புறம் பிரிட்டிஷ் அரசின் பிடி மறுபுறம் இந்திய உளவுத்துறையின் பிடி என்று இரண்டிற்கும் இடையில் அகப்பட்டு மரணிக்கிறார்கள்.

இனி எந்த காலத்திலும் பாரதத்திற்கு எதிரான பயங்கரவாதத்தையும் பொருளாதார குற்றங்களையும் நிகழ்த்திவிட்டு பிரிட்டனில் ஓடி ஒளியவும் முடியாது .அடைக்கலம் தேடி குடிமக்களாக சொகுசு வாழ்க்கை வாழவும் முடியாது என்ற வகையில் பிரிட்டன் அரசும் பாரதத்தின் வெளியுறவுத் துறையும் ஒருங்கிணைந்து எடுக்கும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் பாரபட்சமின்றி எடுக்கும் சட்ட திருத்தங்கள் எல்லாம் என்று காலிஸ்தான் பயங்கரவாதிகளை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இன்று அவர்கள் முன் இருப்பது ஒரே வாய்ப்பு . ஒன்று பிரிட்டன் ஆதரவோடு பிரிட்டிஷ் குடி மக்களாக அமைதியான ஒரு வாழ்வை முன்னெடுக்க வேண்டும். பாரதத்திற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை முழுமையாக கைவிட வேண்டும் . இல்லையே இதுவரையில் பாரதத்திற்கு மட்டும் எதிரியாக இருந்த காலிஸ்தான் பயங்கரவாதம் இனி பிரிட்டனுக்கும் எதிரானது என்ற வெளிப்படையான நிலைப்பாட்டில் பாரதம் பிரிட்டன் அதன் நட்பு நாடுகள் என்று உலகளாவிய எதிர்ப்புகளை சமாளிக்க அவர்கள் தயாராக வேண்டும்.

காலிஸ்தான்பயங்கரவாதத்தை பொருத்தவரையில் அவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களைப் போல செல்லப் பிள்ளைகளாக பாரதத்தின் உள்நாட்டில் இஷ்டம் போல் தீவிரவாதத்தை வளர்த்தெடுக்க முடியாது. அதனால் உள்நாட்டில் அவர்களின் நடவடிக்கைகளுக்கு கிட்டத்தட்ட முடிவுரை எழுதியாகிவிட்டது. பிரிட்டன் – அமெரிக்கா – கனடா – ஐரோப்பா யூனியன் என்று எங்கெல்லாம் அவர்கள் மேற்குலக நாடுகளின் கை பாவைகளாக லாபிகளாக இருந்தார்களோ ? அவை அத்தனையும் இன்று பாரதத்தின் உளவுத்துறைக்கும் வெளியுறவு துறைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டிய நிர்பந்தத்திற்கு வந்திருப்பதால் அந்தந்த நாடுகளில் அவர்களின் நடவடிக்கைகள் முடிவுக்கு வருகிறது.

திவாலான நிலையில் இருக்கும் பாகிஸ்தான் பாரதத்திற்கு எதிராக வாய் வார்த்தைகளை கூட உதிர்ப்பதற்கு துணிவில்லாத நிலையில் பாரதத்தின் உதவிகளை எதிர்நோக்கி நிற்கிறது. ஆப்கானிஸ்தானின் நிலையோ பாரதத்திற்கு எதிராக பேசுபவர்களோடு கூட தங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற அளவில் வந்து நிற்கிறது. நிலைமை இப்படி இருக்க இனி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலோ துருக்கி ஈரான் என்று இஸ்லாமிய நாடுகள் மூலமும் பாரதத்திற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாத இக்கட்டான நிலை. அந்த வகையில் காலிஸ்தான் பயங்கரவாதம் பல் பிடுங்கிய பாம்பாகி தனது இறுதி அத்தியாயத்தில் நிற்கிறது. ஆனால் அந்திம காலத்தில் அதன் பின் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் அதை பாலூட்டி வளர்த்த பிரிட்டன் முன் நிற்பதால் அதிலிருந்து வெளிவரவும் விளைவுகளை எதிர் கொண்டு காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிரந்தரமான முடிவு கட்டவும் பாரதத்தின் துணை வேண்டி முழுமையான ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு தேவை என்று பிரிட்டன் சாம்ராஜ்யம் பாரதத்திடம் உதவி கேட்டு நிற்கிறது.

கடந்த காலங்களில் அந்தந்த நாடுகள் விதைத்த வினைகளை தற்போது அறுவடை செய்கிறது என்பது எதார்த்த உண்மையான போதிலும் தனது தேசம் கடந்து வந்த பயங்கரவாதத்தின் இழப்புகளையும் வலிகளையும் உணரும் பாரதம் எதிர்காலத்தில் எதிரிகளுக்கு கூட அந்த நிலை வரக்கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் காலிஸ்தான் பயங்கரவாதத்திலிருந்து விடுபடவும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் உள்நாட்டு பாதுகாப்பு பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்திக் கொள்ளவும் முழுமையான ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பை வழங்க தயாராகிறது . அந்த வகையில் விரைவில் பாரதத்திற்கு எதிரான காலிஸ்தான் பயங்கரவாதம் பாரதத்தின் உள்ளிருந்து மட்டுமல்ல வெளியில் இருந்தும் சர்வதேச தடத்திலிருந்து முழுமையாக துடைத்து எறியப்படும் அதில் பாரதத்தின் பங்களிப்பும் பிரிட்டனின் பங்களிப்பும் கணிசமாக இருக்கும்.


Share it if you like it