கனடாவில் பெரும் தொழில் அதிபர்களாகவும் வாக்கு வங்கியாகவும் இருப்பது இந்திய வம்சாவளி சார்ந்த சீக்கியர்களும் அவர்களின் வாக்குரிமையும் கணிசமான பங்களிப்பை வழங்குவது. அந்த வகையில் எதிர்வரும் தேர்தலை எதிர்கொண்டு தனது பதவியை அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு சீக்கிய வம்சாவழி வாக்கும் அவர்களின் அரசியல் ஆதரவும் தன் பக்கம் உறுதியாக நிறுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட வாக்கு வங்கி அரசியலில் கனடா நாட்டின் பிரதமர் ஐன்ஸ்டீன் ப்ரூடோ காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்க கூடும் என்ற கோணத்தில் சர்வதேச அரசியல் அளவில் பார்க்க முடியும்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாரதத்தின் உளவுத்துறை மற்றும் வெளியுறவு துறைக்கும் சமரசம் இல்லாத முருகல் இறுகி வருகிறது. இந்நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் உலகம் முழுவதிலும் ஆங்காங்கே விபத்து தனிமனித கொலை என்ற பெயரில் மரணித்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரணம் விவகாரத்தின் விசாரணையை கையில் எடுத்து அதை வைத்து பாரதத்தின் ஒரு ராஜ்ஜிய அதிகாரியை கொலை குற்றம் சுமத்தி அதன் மூலம் நேரடியாக பாரதத்தின் ராஜ்ஜியம் உளவுத்துறையின் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைக்கிறது கனடா. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருக்கும் பாரதத்தின் ராஜ்ஜிய அதிகாரிகள் அந்தந்த நாடுகளில் தீவிரமான கண்காணிப்பிற்கும் சந்தேகத்திற்கும் ஆளாவார்கள் .அது உலக அளவில் பாரதத்தின் ராஜ்ஜியத்திற்கும் நெருக்கடியை கொடுக்கும். அந்த வகையில் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை சர்வதேச அவமதிப்பை பாரதத்திற்கு முன்வைப்பதன் மூலம் பாரதத்தோடு பகை பாராட்டி வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை குளிர்விக்க முடியும். அதன் மூலம் அவர்களின் ஆதரவையும் சீக்கிய வம்சாவழியின் வாக்குகளையும் ஒருசேரப் பெற்று மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடலாம் என்ற அரசியலின் மூலம் வாக்கு வங்கி அரசியலுக்காக பாரதத்திற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜிய உறவை சீர்குலைக்க கனடா நாட்டு பிரதமர் முயல்வதாக ஒரு பெரும் குற்றச்சாட்டு அந்நாட்டில் எழுகிறது.
கடந்த காலங்களில் பாரதத்தின் தேசத்திற்கு பெரும் குந்தகம் அவமதிப்பு விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள் கலவரங்கள் பின்னணியில் இருக்கும் இந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளையும் அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் வெளிப்படையாக ஆதரித்தவர் தான் கனடாவின் தற்போதைய பிரதமர் ஐன்ஸ்டீன் ஃப்ரூடோ. அப்படிப்பட்டவர் கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவருக்காக பல்வேறு பயங்கரவாத செயல்களில் தேடப்படும் குற்றவாளியாக ஆதாரப்பூர்வமான குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நபரை கனடா நாட்டு குடியுரிமையோடு இத்தனை ஆண்டு காலம் பாதுகாப்பாக தனது தேசத்தில் வாழ வைத்ததற்கே அவர்கள் முதலில் வெட்கப்பட வேண்டும் அதிலேயே காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பிற்கு கனடா நாடு எந்த அளவு அரசியல் புகலிடமும் பாதுகாப்பும் ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறது என்பது சர்வதேச அளவில் அம்பலமாகிவிடும்.
ஆனால் இவ்வளவையும் கடந்து அந்த பயங்கரவாதியின் மரணத்திற்காக பாரதத்தின் ராஜ்ஜிய அதிகாரியின் மீது பழி போட்டு இந்திய உளவுத்துறையை குற்றம் சாட்டி சர்வதேச அளவில் பாரதத்தை அவமதிக்க கனடா தயாராகும் எனில் அது நிச்சயம் கனடா நாட்டின் தனிப்பட்ட நிகழ்வாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை . அதன் பின்னணியில் எப்பாடுபட்டாவது பாரதத்தின் ராஜ்ஜிய பரிபாலனத்தை கடந்த காலங்களை போல் மீண்டும் தங்களது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பாரதத்தின் வளர்ச்சி பாதுகாப்பு உள்ளிட்டவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாங்களே தீர்மானிக்க வேண்டும் . இதற்கு எல்லாம் இடையூறாக இருக்கும் மோடி போன்ற ஒரு வல்லமை மிக்க அரசை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும். கடந்த காலம் போல தங்களது கைப் பாவையாக இருக்கும் ஒரு அரசை பாரதத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்ற சர்வதேச சதியின் ஒரு வெளிப்பாடாகவே கனடா நாட்டு பிரதமரின் குற்றச்சாட்டையும் அவர்களது தூதரக வெளியேற்ற நடவடிக்கையையும் பார்க்க கூடும்.
மறுபக்கம் உள்நாட்டில் அரசியல் கட்சி தலைவர் வாரிசு என்ற பெயரில் ரஃபேல் போர் விமானத்தின் ரகசியங்கள் கேட்பது தொடங்கி பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் லடாக் பகுதிகளில் வெளிநாட்டு நண்பர்களோடு விதிகளை மீறி சுற்றித் திரிவது வரை ஒவ்வொரு விஷயத்திலும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிப்பது. தனது பொறுப்பற்ற நடவடிக்கையும் ஒவ்வொரு அசைவிலும் நிரூபித்தவர் வெளிநாடுகளுக்குப் போகும் இடங்களில் எல்லாம் தனது பொறுப்பற்ற செய்கையாலும் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளாலும் அவரும் அவமதிப்பட்டு தேசத்திற்கும் பெரும் அவமதிப்பை தேடிக் கொடுத்து வருபவர். அவரை சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் உளவு அமைப்புகள் பாரதத்தின் வளர்ச்சியை அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று நினைக்கும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் என்று பாரதத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் எதிரியாக செயல்படும் அத்தனை நபர்களும் சர்வ சாதாரணமாக அணுக முடியும். அவரும் எந்த வழிகாட்டுதல் கட்டுப்பாடு இல்லாமல் யாரையும் சந்திப்பதும் அவர்களோடு இவர் பெரும் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தேசத்திற்கு எதிராக வன்மமான கருத்துக்களை பேசி வருபவர்.
அவரின் பொறுப்பற்ற செயல்ளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி இருந்தால். மோடி அரசு எதிர்க்கட்சிகள் குரல்வளையை நெரிக்கிறது என்று இங்கிருந்து ஒரு பெரும் ஒப்பாரி எழுந்திருக்கும். ஆனால் ஆடும் மாட்டை ஆடி கறக்க வேண்டும். பாடும் மாட்டை பாடி கறக்க வேண்டும் என்ற ராஜதந்திரத்தோடு செயல்படும் மோடி அரசு அவரது அத்தனை நிகழ்வுகளையும் பின்னணியில் இருந்து கண்காணித்ததோடு எந்தவிதமான கட்டுப்படுத்தலையும் மேற்கொள்ளாமல் அவர் போக்கில் விட்டு வைத்திருக்கிறது. இன்று அதன் மொத்த பின்னணியும் ஒவ்வொன்றாக தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தான் என்பது வெளிப்பட தொடங்கியிருக்கிறது.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதெல்லாம் உள்ளூர் அரசியலுக்கு சரிவரும் . ஆனால் தேசத்திற்கு வெளியே ராஜிய பரிபாலனத்திற்கும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் இந்த அறம் – சமூகநீதி சம நீதி எல்லாம் சரிப்பட்டு வராது. அங்கு நல்லவனுக்கு இடம் இல்லை . பாதுகாப்பும் இல்லை . வல்லவன் மட்டுமே வாழ முடியும். புத்தியும் சக்தியும் இருப்பவன் மட்டுமே வெற்றி பெற முடியும். எதற்கும் துணிந்தவன் மட்டுமே அவனையும் தற்காத்துக் கொண்டு அவனது தேசத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கை செய்து முடிக்க முடியும். அந்த வகையில் எந்த ஒரு நாட்டிற்கும் உளவுப் பணி என்பதும் அதுவும் சர்வதேச அளவிலான ராஜ்ய பரிபாலனம் உளவுத்துறை என்று வருமானால் அங்கு அதர்மமும் தர்மமாகும். சூழ்ச்சியும் ராஜதந்திரம் ஆகும். அந்த வகையில் சகுனி ஆட்டம் – கிருஷ்ணன் ஆட்டம் இரண்டும் தெரிந்தவர்கள் மட்டுமே உளவுத் துறையிலும் ராஜ்யப் பரிபாலனத்திலும் வெற்றிக்கொடி நாட்ட முடியும். பாரதத்தின் வெளியுறவுத் துறையும் உளவுத்துறையும் அதை மிக கனகச்சிதமாக இணைந்த கைகளாக ஆடி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இனி தனது தேசத்தின் பாதுகாப்பு சர்வதேச அரங்கில் பாரதத்தின் கௌரவம் தேசிய இறையாண்மையை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை சமரசம் இன்றி மோடி அரசாங்கம் மேற்கொள்ளும். இந்திய உளவுத்துறையும் பாரதத்தின் வெளியுறவுத் துறையும் இணைந்த கைகளாக அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். அப்போது சர்வதேச அரங்கில் பல்வேறு வலை பின்னல்களோடு செயல்பட்டு வருபவர்களின் சதிகளும் அவர்களுக்கு இருக்கும் உள்நாட்டு அரசியல்வாதிகளின் தொடர்பும் அதன் பின்னணியும் அம்பலமாகும். அதன் பின்னர் கனடா போல பாரதத்தை கட்டுப்படுத்த நினைக்கும் பல்வேறு நாடுகளும் மலேசியா துருக்கி ஈரான் போல மூக்குடைப்பட்டு மூலையில் அமரும் அதன் பிறகு மோடி அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளால் உள்நாட்டில் ஊடகங்கள் முதல் அரசியல் அரங்கம் வரை ஜனநாயகம் – கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் அத்தனை தேச துரோகமும் தயவு தாட்சண்யம் இன்றி துடைத்து எறியப்படும்.