சீக்கியர்கள் காலிஸ்தான் பிரிவினையை ஆதரிப்பதில்லை ஓய்வு பெற்ற இந்திய உளவுத்துறை அதிகாரி தகவல்

சீக்கியர்கள் காலிஸ்தான் பிரிவினையை ஆதரிப்பதில்லை ஓய்வு பெற்ற இந்திய உளவுத்துறை அதிகாரி தகவல்

Share it if you like it

பாரதத்தில் இருக்கும் சீக்கிய மக்களில் பெரும்பாலானவர்கள் உண்மையில் சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையான காலிஸ்தான் பெயரிலான பிரிவினையை அதற்கான பயங்கரவாதம் நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை பிந்தரன் வாலே என்பவரை அரசியல் காரணங்களுக்காக தனிப்பட்ட அதிகார தேவைக்காக வளர்த்தெடுத்து துஷ்பிரயோகம் செய்து கொண்டார்கள். ஆட்சியாளர்களின் நலனுக்காக அவர்கள் செய்யும் இது போன்ற துஷ்பிரயோகங்கள் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி விட்டது.

ஆனால் உண்மையில் சீக்கிய மக்கள் பாரதத்தின் குடிமக்களாக தங்களது சீக்கிய மத அடையாளங்களோடு சுய கவுரவத்தோடும் கண்ணியமாகவும் வாழவே விரும்புகிறார்களே தவிர ஒரு போதும் தேசத்தை துண்டாடவோ பயங்கரவாத செயல்களில் ஈடுபடவோ எண்ணியதில்லை என்று இந்திய உளவுத்துறை பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி ஜிபிஎஸ் சித்து என்பவர் தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it