பாரதத்தின் பணமதிப்பிழப்பு – பயங்கரவாதம் சரிவு – பாகிஸ்தான் திவால் – பிரிட்டன் நெருக்கடி ?

பாரதத்தின் பணமதிப்பிழப்பு – பயங்கரவாதம் சரிவு – பாகிஸ்தான் திவால் – பிரிட்டன் நெருக்கடி ?

Share it if you like it

இன்று இந்திய பாகிஸ்தான் ஒப்பீட்டையும் பாகிஸ்தானின் வளர்ச்சியையும் பற்றி பேசும் நவாஸ் அவரது விருப்பப்படி பாகிஸ்தானுக்கு வந்து மீண்டும் அரசியலில் களம் இறங்கலாம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி கூட அமைக்கலாம். ஆனால் பெநசீரின் வரிசையில் அவர் இன்று பேசுவது போல எதிர்காலத்தில் இந்திர்களோடு நல்லுறவை முன்னெடுக்க முடியுமா? அல்லது பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதையில் தான் கொண்டு போக முடியுமா? என்றால் அதற்கு அவரிடம் பதில் இருக்காது. காரணம் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் எப்போதுமே சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாதவர்கள்.

கடந்த காலங்களில் ஒரு புறம் பாரதம் பெறும் மக்கள் தொகையோடு தேசத்திற்கு அத்தியாவசிய உள் கட்டமைப்பு வளர்ச்சிகள் உள்நாட்டு பாதுகாப்பு பல துறைகளில் முன்னேற வளர்ச்சித் திட்டங்கள் என்று ஆக்கபூர்வமான வழிகளில் மட்டுமே பயணித்து வந்தது. ஆனால் பாரதத்தின் வளர்ச்சியை விரும்பாத உலக நாடுகள் பலவும் எந்த காலத்திலும் பாரதம் தன்னெழுச்சியான சுயசார்பு நாடாக வளர்ந்து விடக்கூடாது. பாரதத்தின் பொருளாதாரமும் உள்நாட்டு அரசியலும் வெளியுறவுத் துறையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணியது. அதற்காக பாரதத்தின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் எந்நேரமும் ஒரு பதட்டத்தில் சீரழிவில் வைத்திருக்க அவர்களுக்கு ஒரு நாலாந்தர அடியாள் தேவைப்பட்டது.

சுதந்திரம் அடைந்த நாள் முதலாய் இந்து இந்திய எதிர்ப்பு ஒன்றையே கொள்கையாகக் கொண்டு இருந்த பாகிஸ்தானின் சித்தாந்தமும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கொடூர முகமும் பாரதத்தின் வளர்ச்சியை தடுக்க நினைத்த சர்வதேச நாடுகளுக்கு பேருதவியாக இருந்தது. பல்வேறு நாடுகளின் உளவுத்துறைகளும் பாகிஸ்தானின் உளவுத்துறையானா ஐஎஸ்ஐ ராணுவம் மற்றும் இந்து இந்திய எதிர்ப்பில் ஆழமாக ஊறிப்போன பாகிஸ்தானின் இஸ்லாமிய பழமை வாத அமைப்புகள் என்று அத்தனையையும் தங்கள் செல்ல பிள்ளையாக்கி வளர்த்தெடுத்தது. திரும்பிய பக்கமெல்லாம் சர்வதேச நாடுகளில் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பாகிஸ்தானிற்கு கோடிகளில் கொட்டியது.

இன்னொரு புறம் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் போர் தளவாடங்கள் என்று எல்லா நாடுகளிலிருந்தும் விலையில்லாமலே கிடைக்க தொடங்கியது. மறுபுறம் மத அடிப்படையிலான அரபு நாடுகளின் ஆதரவும் மனிதாபிமான உதவியும் பெட்ரோல் டீசல் தொடங்கி பொருளாதார உதவி வரை பாகிஸ்தானுக்கு அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருந்தது.பாகிஸ்தானின் அரசுக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் ராணுவம் உளவுத்துறை மத குருமார்கள் என்று அனைவருக்கும் தேவையான கோடிகள் உலகம் முழுவதிலும் இருந்து கொட்டத் தொடங்கியது. அதில் அவர்கள் பெரும் வளத்தோடு வாழத் தொடங்கினார்கள். தேசத்திற்கு தேவையான அனைத்தும் வெளியில் இருந்து வந்ததால் நாடும் ஓரளவு வளத்தோடும் சர்வதேச அளவில் கொஞ்சம் அந்நிய செலாவணி கையிருப்பு பொருளாதார பலம் என்று வலம் வந்தது.

ஆரம்பகாலம் முதலில் பாகிஸ்தானில் அவ்வப்போது ராணுவ ஆட்சி தலை தூக்குவது வழக்கமான ஒன்று. உள்நாட்டு குழப்பம் என்று பெரும்பாலும் பஞ்சம் பசி பட்டினி வேலையில்லா திண்டாட்டம் இதெல்லாம் ஒருபுறம் தொடர்கதையாகவே இருந்து வந்தது. கடந்த காலங்களில் இந்த உள்நாட்டு குழப்பம் அவ்வப்போது தலை தூக்கும். இதை காரணமாக வைத்து ஆட்சியாளர்களின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி விடும். ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த பிறகு ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு மரண தண்டனை என்று ஒருவித சர்வாதிகார ஆட்சி நடக்கும். அதன் காரணமான மக்களின் அச்சம் ஒருவிதப் பதட்டத்திலேயே பாகிஸ்தானில் உள்நாட்டு அரசியல் நகர்ந்து கொண்டிருக்கும். பிறகு வெளிநாடுகளில் அதிகப்பட்ச உதவிகள் மனிதாபிமான உதவிகள் என்று மீண்டும் மேல் எழுந்து வரும். பிறகு மீண்டும் ஆட்சியாளர்கள் ஊழல் அதிகாரக் கொள்ளை என்று தலை தூக்குவார்கள். இதுவே பாகிஸ்தானில் இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது.

பாரதத்தின் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் ஏலத்தில் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் தொடர்ந்து பாரதத்தின் ரூபாய் நோட்டுக்களை கள்ளத்தனமாக அச்சடித்து குவித்து வந்தது. அதை பாகிஸ்தான் வங்கதேசம் நேபாளம் மாலத்தீவு இலங்கை வழியாக பெருமளவு இந்தியாவில் புழங்க வைத்தது. பாரதத்தின் நாடு முழுவதும் நிலவிய பயங்கரவாத அமைப்புகள் பயங்கரவாத தாக்குதல்கள் காஷ்மீரில் ராணுவத்தின் மீது தினமும் நடந்த தாக்குதல் சம்பவங்கள் கல்லெறி சம்பவங்களுக்கு முழு பொருளாதார பலமாக இந்திய கள்ள ரூபாயை பின்புலமாக இருந்தது. அதை வைத்து பாரதத்தின் உள்ளும் புறமும் பெரிய அளவில் பாகிஸ்தான் மரண ஆட்டம் ஆடியது. அதில் பாரதம் பெரிய அளவில் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் கடந்து வந்தது.

இந்திய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பாகிஸ்தானின் கைகளில் இருக்கிறது. கடந்த காலங்களில் இந்திய ரூபாய் நோட்டு அச்சடிப்பிற்கு காகிதத்தை அனுப்பிய அதே நிறுவனம் தற்போது பாகிஸ்தானுக்கும் காகித விநியோகம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் கணக்கு வழக்கு இல்லாமல் இந்திய ரூபாய் நோட்டுக்களை பாகிஸ்தான் கள்ளத்தனமாக அச்சடிக்கிறது. அதை அண்டை நாடுகள் மட்டுமல்லாது அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளின் மூலமாகவும் இந்தியாவில் கொண்டு வந்து குவிக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் தேசத்தில் கள்ள நோட்டுகள் புழங்கி பொருளாதாரம் சீரழிகிறது. மறுபுறம் தங்க கடத்தல் போதைப் பொருட்கள் கடத்தல் ஆயுதக் கடத்தல் என்று ஒட்டுமொத்த பாகிஸ்தானின் கடத்தல் மையமாகவும் கேந்திரமாகவும் பாரதத்தை மாற்றி அமைத்து அதன் மூலம் திட்டமிட்டு பயங்கரவாதத்தின் துணையோடு பாரதத்தின் பொருளாதாரத்தையும் உள்நாட்டு பாதுகாப்பையும் பாகிஸ்தான் சீர்குலைத்து வந்தது.

பாகிஸ்தானின் இந்த திட்டமிட்ட பயங்கரவாதத்தையும் அதற்கு கடந்த கால காங்கிரஸ் ஆட்சியாளர்கள் முழு உடந்தையாக இருந்ததையும் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொண்ட மோடி அரசு பல்வேறு கட்ட ஆய்வுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் சரி செய்து கொண்டு பிறகு பண மதிப்பிழப்பு என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தது . இதன் மூலம் ஒரே நாளில் பாகிஸ்தானில் அச்சடித்து தயாராக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் கோடிகள் மதிப்பிலான இந்திய ரூபாய் செல்லாக்காசானது. இனி எந்த காலத்திலும் அந்த ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு வராது .அதே நேரத்தில் தற்போது இந்திய ரூபாயின் நோட்டுகள் அச்சடிக்கும் தொழில்நுட்பங்களிலும் நவீன மாற்றங்களும் கள்ளநோட்டுகளை உடனடியாக கண்காணித்து அதை தடை செய்வதோ அல்லது நடவடிக்கை எடுப்பது என்று உள்நாட்டிலும் தீவிரமான கண்காணிப்பு உளவு பணிகளை பாரதம் முடுக்கிவிட்டது.

இனி இந்திய ரூபாயின் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதோ அல்லது அதை இந்தியாவில் புழக்கத்தில் விடுவதோ பாகிஸ்தானுக்கு சாத்தியம் இல்லை. ஏற்கனவே அச்சடித்து வைத்திருக்கும் நோட்டுகளும் இனி வெற்று காகிதங்களே என்ற நிலை வந்து பாகிஸ்தான் சரியத் தொடங்கியது. இன்று இல்லையேல் நாளை நிலைமை சீரடையும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பாரதத்தில் வந்தால் ரூபாய் நோட்டுகள் மறுபடியும் புழக்கத்தில் வந்து விடும் என்று காத்திருந்த பாகிஸ்தான் மண்ணை கவ்வியது. மீண்டும் பாரதத்தில் மோடி அரசு அமைந்ததில் பாகிஸ்தான் அஸ்திவாரமே ஆடத் தொடங்கியது.

எந்தவிதமான உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளும் பெரிய அளவில் கிடையாது . தனிமனித உழைப்பு தொழில்நுட்ப ஆய்வுகள் எதிர்கால சந்ததிகளை வழிநடத்தும் ஆக்கப்பூர்வமான கல்வி பொருளாதாரம் கட்டமைப்புகள் என்று எந்தவிதமான பெரிய உள்கட்டமைப்புகளோ வளர்ச்சியோ இருந்ததில்லை. மருத்துவத் துறையில் கூட பெரிய அளவில் வளர்ச்சியோ கட்டமைப்போ இல்லை இன்று வரை இல்லை. என்ன செய்தாலும் பாகிஸ்தானை மீட்டெடுப்பது கடினம். என்ன விலை கொடுத்தாலும் பாகிஸ்தானின் திவால் என்பதை தாமதப்படுத்த முடியுமே தவிர தடுத்து நிறுத்த முடியாது என்ற நிலைக்கு பாகிஸ்தான் போயிருப்பதற்கு உண்மையான காரணம் கடந்த காலங்களில் பாரதத்தில் அமல்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமே.

படிப்படியாக பொருளாதாரம் சரிந்து பணவீக்க உயர்வு விலைவாசி உயர்வு அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு குறைவு அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடு என்று தள்ளாடியது. காஷ்மிருக்காக பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியவர்கள் எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் கோதுமையும் அரிசியும் போதுமானது என்று பாரதத்திடம் கையேந்தி நிற்கும் அவலம் வந்தது. இன்னும் ஒரு படி மேலே போய் திரும்பிய பக்கமெல்லாம் உள்நாட்டு குழப்பங்களும் ஆங்காங்கே மாகாணங்கள் தனிநாடு பிரிவினை என்று மிரட்டல் விடுத்து வரும் நிலையில் பாகிஸ்தானில் எந்நேரமும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் திவால் என்ற அறிவிப்பும் அதன் தேசம் சிதறிய பிரகடனங்களும் வரக்கூடும் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

இன்றைய இந்திய பாகிஸ்தான் நிலப்பரப்புகளை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் அரசு ஏராளமான ஆலைகளை இரண்டு நாடுகளிலும் விட்டுப் போனது . இந்த ஆலைகளின் நிர்வாகமும் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களின் அதிகாரமும் அவர்களின் குடும்பத் தொழிலும் இன்று வரை பிரிட்டனில் சர்வசாதாரணமாக கால் பதித்து வருகிறது. பாரதத்திற்கு எதிராக தொடர்ந்து ஊறு விளைவித்து வந்த பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் பயங்கரவாத அமைப்புகள் இன்று வரை பிரட்டனில் சர்வ சுதந்திரமாக நடமாடுகிறது. இதோ இன்று நவாஸ் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய போது பாதுகாப்பிற்கு அரசியல் தஞ்சம் தேடியது பிரிட்டனில் தான்.

இந்தப் புள்ளிகளை எல்லாம் ஒரு நேர்கோட்டில் இணைத்து கடந்த கால காங்கிரஸ்காரர்களின் ஆட்சி முறையையும் வெளியுறவு கொள்கைகளையும் அவர்களின் பாகிஸ்தான் பாசம் வாக்கு வங்கி அரசியல் பிரிட்டன் முகமாக செயல்பட்ட விதம் என்று அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால் பாகிஸ்தானின் இன்றைய வீழ்ச்சியும் உள்நாட்டில் காங்கிரசின் வீழ்ச்சியும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதும் இரண்டுமே இனி மீள முடியாத பாதாளத்தில் இருப்பதும் தெரியவரும். இந்தியாவில் காங்கிரஸ் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் பிரிட்டனின் அரசு என்ற மூன்றும் ஒரு நூலிழையில் இணையும் மர்மமும் புரியும். இந்தியாவில் காங்கிரஸ் சரிந்ததும் பாகிஸ்தான் திவாலை நோக்கி நகர்வது மீள முடியாத நெருக்கடியில் பிரிட்டன் சிக்கித் தவிப்பதும் அதன் பின்னணியும் விளங்கும்.


Share it if you like it