கனடாவின் காலிஸ்தான் பாசம் – அரை நூற்றாண்டு கால அரசியல் பின்னணி

கனடாவின் காலிஸ்தான் பாசம் – அரை நூற்றாண்டு கால அரசியல் பின்னணி

Share it if you like it

சுதந்திரப் பிரிவினையின் போது கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து எப்படி இந்துக்கள் கொடூரமாக கொல்லப்படும் அனைத்தும் இழந்து அகதிகளாக நிராகரமாக நின்றார்களோ ? அதே நிலை இந்த மண்ணின் சொந்த மைந்தர்களான சீக்கியர்களுக்கும் நேர்ந்தது . சுதந்திரத்திற்கு பிறகும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் அங்கு இந்துக்களுக்கு என்னவெல்லாம் கொடூரங்கள் இழைக்கப்பட்டதோ ? அது அத்தனையையும் கொஞ்சமும் குறைவில்லாமல் இந்துக்களோடு சேர்ந்து அனுபவித்தவர்கள் சீக்கியர்களே. அந்த வகையில் அவர்களின் தனிநாடு கோரிக்கையும் மதரீதியான எதிர்பார்ப்புகளும் ஒரு திட்டமிட்ட உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்த வல்ல அரசியல் காரணிகளாக மாற்றப்பட்டது.

அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கனடாவை மையமாகக் கொண்டு இந்த காலிஸ்தான் பயங்கரவாதம் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. இந்திராவின் ஆட்சி காலத்தில் கனிஷ்கா என்ற விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. 33 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் குண்டு வெடித்து அதன் மூலம் 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததும் அந்த விமானம் கடலில் மூழ்கியதும் உலகத்தையே அதிர வைத்தது. அதன் பின்னணியில் இருந்தது காலிஸ்தான் பயங்கரவாதம் . அதன் முழு பின்னணியும் கனடா நாட்டிலிருந்து அரங்கேறிய சதி என்பது கண்டறியப்பட்ட போதிலும் அந்த விசாரணை அரசு எந்தவிதமான ஒத்துழைப்பும் கனடா அரசு வழங்கவில்லை. அந்த விமானத்தை தகர்த்ததில் நேரடி சாட்சியங்களாக இருந்த ஐந்து பேர் தொடர்ச்சியாக கொல்லப்பட்டார்கள். அனைத்துமே மர்ம மரணமாகவே இருந்தது. பின்னர் கனிஷ்கா விமான விபத்து வழக்கு சாட்சிகள் இல்லை குற்றங்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கைவிடப்பட்டது.

சில காலங்களுக்குப் பிறகு கனடாவின் விமான நிலையத்தில் வைத்தே இந்தியன் ஏர்பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. 200 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமான சிப்பந்திகள் உள்ளிட்ட பலர் அந்த சதியில் கொல்லப்பட்டார்கள். அந்த வெடிகுண்டு விபத்திற்கும் தங்களது மண்ணில் நிகழ்த்தப்பட்ட ஒரு அநீதியாக கனடா நாடு தார்மீக பொறுப்பேற்கவோ விசாரணைகளுக்கோ உத்தரவிட்டால் லை. இந்திய அரசின் வழக்குக்கோ உரிய ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு தரவே இல்லை . அதன் பிறகு சில காலத்தில் இந்திரா காந்தியும் கொல்லப்பட்டார். அவரது மரணத்தின் பின்னணியிலும் கனடாவை மையமாக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் அடிபட்டது . ஆனால் எந்த ஒரு விசாரணைக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் கனடா நாடு ஒத்துழைப்பு கொடுத்ததே இல்லை. இன்று கனடாவின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ப்ரூடோவின் தந்தையார் தான் கடந்த காலங்களில் கனடாவின் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் உள்நாட்டில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் சுக்தால் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பில் முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். நேற்றைய தினம் கனடாவில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் இனம் காணப்படவில்லை என்றாலும் இது குழு மோதலாக விசாரணையில் தெரிய வருகிறது . 15 குண்டுகள் பாய்ந்த நிலையில் சுக்தால் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் கனடா நாட்டு காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஹர்திப் சிங் நிசார் விவகாரம் அதை முன்வைத்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியின் மீது குற்றம் சுமத்தி கனடா அவரை நாட்டிலிருந்து வெளியேற்றியது . இதில் இந்திய உளவுத்துறை தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் வைத்து குற்றம் சாட்டியது . இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலுக்கு கனடா நாட்டு தூதரக அதிகாரியை பாரதத்திலிருந்து மத்திய அரசு வெளியேற்றியது. அதோடு முருகல் முடிவுக்கு வரும் என்று நினைத்த கனடாவிற்கு பாரதத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் கலக்கத்தை கொடுத்திருக்கிறது.

பாரதத்தின் உள்நாட்டு அமைதிக்கும் ராஜிய உறவுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் பின்னடைவுகளை ஏற்படுத்திய காலிஸ்தான் பயங்கரவாதம் என்ற ஒரு முகமூடியின் பின்னே பாரதத்திற்கு எதிரான பல்வேறு நாடுகளின் சதி இருந்து வந்தது. இன்று அந்த காலிஸ்தான் பயங்கரவாதம் வேர்கள் அறுபட தொடங்கும் போது எங்கே தங்களின் பிடி அறுந்து விடுமோ? அல்லது தங்களின் சதிகள் அம்பலமாகிவிடுமோ? என்று பல்வேறு தரப்பிலிருந்தும் பதட்டங்கள் எழுகிறது.

பாரதத்தின் வெளியுறவுத்துறை சார்பில் கனடா நாட்டு குடிமக்களுக்கு இந்திய விசா வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறது. மறு அறிவிப்பு வரும் வரையில் கனடா நாட்டு குடிமக்களுக்கு இந்திய தூதரகங்கள் விசா வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளிவருகிறது . மேலும் இந்தியர்களுக்கு கனடா நாட்டில் பாதுகாப்பு இல்லை . அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு பயணிக்கும் போது கூடுதல் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு துறை சார்பில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு உலக நாடுகள் இடையே அவர்களின் குடிமக்களின் பாதுகாப்பு விஷயத்திலும் எதிரொலிக்க தொடங்கினால் கனடாவின் சுற்றுலாவும் உள்நாட்டு பாதுகாப்பும் பற்றிய மதிப்பீடும் சரியத் தொடங்கும் என்று கனடா பதறுகிறது.


Share it if you like it