தமிழகத்தின் நீலகிரி வனப்பகுதியில் சமீபமாக தொடர்ச்சியாக புலிகள் மரணம் அடைந்து வருகிறது . அதிலும் ஒரே நாளில் நான்கு குட்டிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. வேட்டைக்காக புலிகளை கொல்பவர்கள் அவற்றின் தோல் நகம் உள்ளிட்டவத்திற்காக கையோடு கொண்டு போகவே செய்வார்கள். மாறாக கொன்று பிணமாக வீசுவது வேட்டைக்காரர்களின் வழக்கம் அல்ல. அதனால் இந்த புலிகளின் மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக வன ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அருகாமையில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களுக்காக இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு போகப்பட்டிருக்கிறது. இதை அடுத்து இந்த புலிகளின் மர்ம மரணம் சம்பந்தமான ஆய்வுக்கும் விசாரணைக்கும் மத்திய குழு இன்று அல்லது நாளை தமிழகம் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அல்லது சாதாரண வனப்பகுதிகள் என்று எங்கு இருந்தாலும் வன உயிரினங்கள் பல்லுயிர் ஓம்பும் சுற்றுச்சூழல் சங்கிலிகள் ஆகும். அவற்றின் பாதுகாப்பும் இனப்பெருக்கமும் வாழ்வியல் உறுதிப்பாடும் தான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். வனம் என்பது வெறும் மரங்கள் நீர் நிலைகளின் பாதுகாப்பு மட்டுமல்ல. அந்த வனத்தில் வாழும் சகல உயிரினங்களின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதே வன பாதுகாப்பு. இதில் பாதுகாப்பும் கண்காணிப்பும் இருக்கும் நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் வனப் பகுதியிலேயே புலிகள் மரணிப்பதும் அது தொடர்ச்சியாக மர்மம் மரணமாக இருப்பதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
புலிகள் மரணம் என்பதால் பாரதத்தின் தேசிய விலங்காக புலிகள் மதிக்கப்படுகிறது. அதனால் ஒரு தேசிய விலங்கு கொல்லப்படுவதாக தேசிய கோஷமாக மட்டும் இதை கடந்து போக முடியாது. பாரதத்திற்கு புலி. தேசிய விலங்கு அவ்வகையில் அது தேசிய இறையாண்மையின் அடையாளம் என்ற வகையில் நிச்சயம் பாதுகாக்க வேண்டிய ஒரு தேச பொக்கிஷம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த தேசிய விலங்கு என்ற அடையாளத்தையும் கடந்து புலிகள் வனங்களின் மூல ஆதாரமாக கருதப்படுகிறது. எந்த ஒரு நாட்டில் புலிகள் அழியுமோ அந்த நாட்டில் வனமும் வனம் சார்ந்த சூழலும் முற்றாக அழியும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எச்சரிக்கை. அதன் அடிப்படையில் தான் பல்வேறு இடங்களில் வனப்பகுதிகளில் புலிகள் இனப்பெருக்கம் குறைந்தாலும் அல்லது அவை கொல்லப்பட்டாலும் அரசாங்கம் எப்பாடு பட்டாவது அந்த சீதோஷண நிலையில் வாழ்வதற்கு உகந்த புலி குட்டிகளை வேறு எந்த நாட்டில் இருந்து கூட வாங்கி வளர்க்கும் . ஒரு குறிப்பிட்ட அளவில் இனப்பெருக்கம் செய்யும் வரையிலும் அந்த புலிகளை சிறப்பு அக்கறை கொண்டு பராமரித்து வருவார்கள். இதுதான் வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பின் சாரம்சம். கடந்த காலங்களில் முற்றாக அழியும் நிலையில் இருந்த ஒரு சில அரிய வகை புலி இனங்களை மீட்டெடுப்பதற்காக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து புலிகள் கொண்டுவரப்பட்டு அவை பல்வேறு வனப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்விக்கப்பட்டு இன்றுவரை மத்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அடர்ந்த வனப் பகுதிகளில் புலிகள் இறைச்சி வேட்டையாடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கடந்து தொடர்ச்சியாக கொல்லப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. சமீபமாக கேரள மாநிலத்தில் தொடர்ச்சியாக யானைகள் கொல்லப்பட்டது அதன் பின்னணியில் ராஜ்ய அடையாளமாக இருக்கும் யானைகள் கொல்லப்படுவது திட்டமிட்ட கொலையாக சர்ச்சைகள் எழுந்தது. அதன் பிறகு அங்கு சில அமைப்புகள் தடை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக என்ஐஏ உள்ளிட்ட பாதுகாப்பு முகமைகள் கேரளாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு நிலைமை சீரானது. இன்று வரை பல்வேறு சோதனைகள் கைதுகள் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது.
கடந்த ஆண்டு தீபாவளி நாளில் கோவையில் ஒரு பெரும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் இறை அருளால் அந்தத் திட்டம் தோல்வி அடைந்து சம்பந்தப்பட்டவர்கள் மரணித்த விவகாரம். அதன் தொடர்ச்சியான விசாரணையில் மங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு உள்ளிட்டவற்றில் கோவை நீலகிரி பகுதியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டார்கள். இன்னமும் அது சம்பந்தமாக பல்வேறு இடங்களில் என் ஐஏசோதனைகள் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில் அடர்ந்த வனப் பகுதிகளில் தொடர்ச்சியாக புலிகள் கொல்லப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தேசிய விலங்காக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் புலியை கொல்வதன் மூலம் இந்த தேசத்தின் இறையாண்மை மீது கொடுக்கப்படும் ஒரு தாக்குதலாக திட்டமிட்டு இந்த புலிகள் குறிவைத்து கொல்லப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. அடர்ந்த வனப்பகுதிகளில் புலிகள் கொன்று குவிக்கப்படும் எனில் ஒன்று அந்த வனப்பகுதிகளுக்குள் மர்மமான நடவடிக்கைகள் மர்ம நபர்களின் நடமாட்டங்கள் குழுவாக இருப்பதாக அர்த்தம். அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் அங்கிருக்கும் புலிகளை கொன்று குவிக்கலாம். அல்லது அந்த வனப் பகுதிகளில் ஏதேனும் சதி செயல்கள் திட்டங்கள் அரங்கேற்றப்படும் வாய்ப்புகள் அதிகம். அவர்களின் செயல்பாடுகளுக்கும் இடையூறாக இருக்கும் வன விலங்குகள் கொல்லப்படும் வகையிலும் இருக்கலாம்.
இது வெறும் வனத்துறை சார்ந்த அச்சுறுத்தலாகவோ அல்லது வன விலங்குகள் வேட்டையாடப்படும் நிகழ்வாகவோ சாதாரணமாக கடந்து போகும் விவகாரம் இல்லை .ஒரு வகையில் தேசிய விலங்காக மதிக்கப்படும் புலிகள் தொடர்ச்சியாக திட்டமிட்டுக் கொல்லப்படுவது வனங்களின் மூலாதாரத்தை முற்றாக அளிக்கும் சூழலில் சிதைப்பு நடவடிக்கை. கடந்த காலங்களில் பல்வேறு மர்ம நடவடிக்கைகள் ஆயுதப் பயிற்சிகள் தீவிரவாத நடவடிக்கைகள் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை கொடுக்கப்பட்ட வனப்பகுதிகளில் தற்போது வன புலிகள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக கொல்லப்படுவது அபாய எச்சரிக்கையே. அவ்வகையில் அவர்களின் எச்சரிக்கையை மனதில் வைத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக கடந்து போன மாநில உளவுத்துறை காவல்துறையின் அலட்சியத்தால் இன்று அந்த வனப்பகுதிகளில் புலிகள் கொல்லப்படுகிறது.
தேசத்தின் பாதுகாப்பு வன பாதுகாப்பு சூழலில் பாதுகாப்பு தேசிய இறையாண்மையின் அடையாளமாக இருக்கும் வனவிலங்கின் பாதுகாப்பு என்று எந்த ஒரு விஷயத்திலும் அக்கறை காட்டாமல் மாநில அரசு கடந்து போகிறது. தேசத்தின் பாதுகாப்பு வனத்துறை வன விலங்குகளை தன்வசம் வைத்திருக்கும் மத்திய அரசு உளவுத்துறை எச்சரிக்கையின் அடிப்படையில் களமிறங்க தயாராகிறது. தமிழகத்திற்கு வர இருக்கும் மத்திய குழு புலிகளின் மரணத்திற்கு என்ன காரணம் அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார் ? அதன் பின்னணி என்ன ?என்பதை விசாரித்து முழு உண்மையை வெளிக் கொணரட்டும்.
இதே நீலகிரி வனப்பகுதியில் தான் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் இன்றளவும் ஈடு செய்ய முடியாத இழப்புக்களை கடந்த காலங்களில் பாரதம் கடந்து வந்திருக்கிறது . இனியும் அந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் நிகழாமல் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. வர இருக்கும் மத்திய குழு விசாரணையும் ஆய்வுகளும் முழு உண்மைகளை வெளிக்கொணரட்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசின் பாதுகாப்பு முகமைகள் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து நீலகிரி உள்ளிட்ட வனப் பகுதிகளை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரட்டும். வனம் சார்ந்த இடங்களும் சூழலியல் காரணிகளாக சுற்றுலா தலங்களாக மலை வாழிடங்களாக மட்டுமே இருக்கட்டும் .அவை தேசவிரோதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் புகலிடமாக இருக்க வேண்டாம். அதை மதிய அரசு உணர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.