குஜாத்திற்கு வந்த வெளிநாட்டு முதலீட்டார்களை அப்போதைய மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மிரட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.குஜாரத் மாநிலத்தில் உள்ள சயின்ஸ் சிட்டியில் ‘ரோபோ கண்காட்சியை’ பார்வையிட்ட பிரதமர் ‘துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாட்டை’ தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் குஜராத் வளர்ச்சியை முந்தை மத்திய காங்கிரஸ் அரசு தடுத்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். குஜராத் வளர்ச்சியை அரசியலோடு அவர்கள் தொடர்புப் படுத்தியதாகவும் மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் குஜராத் வருவதை தவித்ததாகவும் தெவித்த பிரதமர், காங்கிரஸ் மிரட்டலையும் மீறி குஜாத்திற்கு முதலீட்டாளர்கள் வந்ததாக குறிப்பிட்டார். குஜராத் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் வருங்காலத்தை பற்றியும் யோசித்ததாக அவர் தெரிவித்தார். இதற்கான முக்கிய சேனலாக ‘துடிப்பு மிக்க குஜராத்தை’ உருவாக்கியதாகவும் பிரதமர் நரந்திர மோடி தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டார்கள்!
Share it if you like it
Share it if you like it