கனடாவின் ப்ராம்ப்டன் நகரை காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களது காலிஸ்தான் பிரதேச பகுதியாக பிரகடனம் செய்திருக்கிறார்கள் அங்கு இருக்கும் சீக்கியர் அல்லாத பிற மக்களை எல்லாம் காலிஸ்தான் பிரதேசத்தை விட்டு வெளியேற எச்சரிக்கையும் கெடுவும் விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள் இதனால் கனடாவில் உள்நாட்டு பாதுகாப்போம் அமைதி அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது. கனடா நாட்டில் சரி பாதி நிலப்பரப்புகள் மனிதர்கள் வாழ தகுதியற்றவை. கனடாவின் தெற்கு பகுதிகள் குறிப்பாக அமெரிக்க எல்லையை ஒட்டிய பகுதிகள் மட்டுமே மனிதர்கள் வாழ தகுதியான நிலப்பரப்பாக இருக்கும் . சொந்த குடிமக்களாக மிகக் குறைந்த மூன்று கோடிக்கும் குறைவான பூர்வ குடி மக்களே கனடா நாட்டு மக்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். எஞ்சியுள்ள மக்கள் எல்லாம் ஆசிய ஐரோப்பா நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்று வாழ்பவர்கள். இதில் கணிசமாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வெளியேறிய சீக்கியர்கள் கனடா நாட்டு குடியுரிமையோடு வாழ்பவர்கள்.
இலங்கையின் உள்நாட்டு குழப்பத்தின் காரணமாக அகதிகளாக வெளியேறிய தமிழர்கள் கனடாவில் புலம்பெயர் ஈழத் தமிழர்களாக அகதி அந்தஸ்தில் வாழ்பவர்கள். இதில் 90 சதம் மக்கள் கனடா நாட்டு குடியுரிமையும் பெற்று இருப்பார்கள். இந்த அடிப்படையில் கனடாவின் வாக்கு வங்கியில் கணிசமான பங்களிப்பு இந்த வெளிநாட்டவர்களின் வாக்களிப்பே நிர்ணயிக்கும். இதில் அகதிகளாக வெளியேறிய இஸ்லாமிய நாடுகளின் மக்களும் அடக்கம். இந்த வாக்கு வங்கி அரசியல் தான் பல காலமாக கனடாவின் உள்நாட்டு அரசை ஆட்டுவிக்கிறது. இந்த வாக்கு வங்கி அரசியலுக்காக தான் தற்போதைய கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் முன்னாள் பிரதமரும் அவரது தந்தையும் இஸ்லாமிய பயங்கரவாதம் காலிஸ்தான் பயங்கரவாதம் ஈழத்தமிழர் பயங்கரவாதம் உள்ளிட்ட அவற்றை உரம் போட்டு வளர்த்தார்கள். தந்தையும் மகனும் பாம்பிற்கு பால் பார்த்ததன் பலனை இன்று கனடா நாடு அறுவடை செய்ய தயாராகிறது.
ஆனால் அவர்கள் இந்தியர்களைப் போல ஏமாளிகள் அல்ல . கனடா நாட்டு மக்கள் நல்ல அரசியல் விழிப்புணர்வும் சர்வதேச அரசியல் புரிதலும் உள்ளவர்கள். பாரதம் அதன் உள்நாட்டு பாதுகாப்பு தேசிய இறையாண்மை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளை தேவையில்லாமல் கனடா நாடு தலையிட்டதன் பலனை தான் இன்று தாங்கள் அறுவடை செய்கிறோம் என்பதை நிச்சயம் உணர்ந்து சுதாரிப்பார்கள் . ஏற்கனவே கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய உளவுத்துறை அதிகாரி இருப்பதாக குற்றம் சாட்டி பாரதத்தோடு மல்லுக்கு நிற்கும்போதே கனடா மக்கள் அவர்கள் பிரதமரின் மீது கேள்வி எழுப்பினார்கள். எந்தவித அடிப்படை ஆதாரமும் முகாந்திரமும் இல்லாமல் காலிஸ்தான் வாக்கு வங்கிக்காக மட்டுமே ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து உலக அரங்கில் பாரதத்தை அவமதித்ததோடு கனடாவிற்கும் பெரும் அவமதிப்பை தேடிக் கொடுத்ததாகவே அவர்கள் உணர்கிறார்கள். அதன் காரணமாக கனடாவில் உள்நாட்டு மக்களிடம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பெரும் அதிருப்தியும் அவநம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தங்களது தேசத்தில் அகதியாக அடைக்கலமாக வந்தவர்கள் குடியுரிமை வாக்குரிமை பெற்று வாழ்ந்தவர்கள். இன்று ஒரு பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து அதை தங்களது பிரதேசமாக அறிவிப்பதும் அங்கிருந்து கனடா நாட்டு பூர்வ குடிகளையே வெளியேற கெடு விதிப்பதும் அவர்களை ஆத்திரத்தின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தும். கனடா மக்கள் பொதுவாக கண்ணியமான கவுரவமான வாழ்க்கையை விரும்புவார்கள். சமூக அமைதி சட்டம் ஒழுங்கு பொது அமைதிக்கு எல்லாம் அதிகபட்ச மரியாதை கொடுப்பவர்கள். அவர்களுக்கு கொடி பிடித்து கோஷம் போடும் சில்லறை அரசியலோ பிரிவினைவாதம் பயங்கரவாதம் போன்ற நான்காம் தர அரசியலையோ துளியும் விரும்ப மாட்டார்கள். அது போன்ற நபர்களுக்கு அவர்கள் ஆதரவும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அபயும் என்று வந்தவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் . அதை ஆட்சியாளர்கள் செய்யும்போது மனிதாபிமான அடிப்படையில் அதற்கு எதிர்ப்பு காட்டாமல் அமைதி காத்தவர்கள். ஆட்சியாளர்கள் வாக்கு வாங்கி அரசியலுக்காக அதிகாரத்திற்காக செய்த தவறுகளுக்கு இன்று அவர்களும் அவர்களின் தேசமும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதில் அதிர்ச்சியில் உறைகிறார்கள்.
இனி கனடாவின் முன் இருப்பது இரண்டு வாய்ப்புகள் தான். முதல் வாய்ப்பு தான் வளர்த்த காலிஸ்தான் ஆதரவாக தனது தேசத்தின் நிலப்பரப்பை தானே இழக்க துணிவது. இல்லையேல் கனடா நாட்டின் மக்களின் பாதுகாப்பு தேசத்தின் இறையாண்மை பாதுகாக்க வேண்டி காலிஸ்தான் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டும். காலிஸ்தான் பிரகடனத்தை அங்கீகரித்து தனது தேசத்தை கூறு போட்டு காலிஸ்தான் நாடு உருவாக துணை நிற்க கனடா பிரதமரோ அவரது கட்சியோ முன் வராது. அரசு எந்திரம் துணை நிற்காது. தனது தேசத்தை வெளிநாட்டவர்களுக்காக கூறு போட பிரதமர் தயாரானால் அதை எதிர்த்து அவரது சொந்த கட்சியே களம் இறங்கும். அரசு எந்திரம் இராணுவம் உளவுத்துறை கனடா பிரதமரை காற்றில் பறக்க வைத்து விடும். அதனால் அதற்கு வாய்ப்பே இல்லை. இரண்டாம் வாய்ப்பு மட்டுமே சாத்தியம் அதன் படி கனடா அரசு காலிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்து தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்க தயாராக வேண்டும். அதைத்தான் கனடா அரசு செய்ய தயாராக வேண்டும். ட்ரூடோவிற்கு இதை தவிர வேறு வழி இல்லை.
கனடா நாட்டின் மக்களின் பாதுகாப்பு தேசத்தின் இறையாண்மை பாதுகாக்க வேண்டி காலிஸ்தான் பயங்கரவாதிகளை தடை செய்ய கனடா பிரதமர் தயாராக வேண்டும். அதுவே அவர் முன் இருக்கும் வாய்ப்பு. ட்ரூடோ காலிஸ்தான் பயங்கரவாதிகளை எதிர்கக தயாராகும் பட்சத்தில் கனடாவில் இருக்கும் காலிஸ்தான் அமைப்புகளை தலைவர்களை பட்டியலிட்டு அதை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து அதன் ஆதரவாளர்கள் அமைப்புகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இந்த தடையை கனடாவின் ஐந்து கண் நாடுகள் மற்றும் ஜீ 7 நாடுகள் ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளோடு பகிர்ந்து அந்தந்த நாடுகளில் இந்த காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு தடை விதிக்க வலியுறுத்த வேண்டும். அது தான் சர்வதேச அமைப்பு விதி நடைமுறை. தடை செய்யப்பட்ட மறுகணமே இந்த பயங்கரவாத அமைப்புகளின் பொருளாதார மூலங்களை எல்லாம் முடக்கி அவற்றை கனடா நாட்டின் அரசு சொத்தாக அறிவிக்க வேண்டும். இதை அவர்கள் செய்யும் பட்சத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகளை நேருக்கு நேர் எதிர் கொள்ளவும் அதன் மூலம் உள்நாட்டில் ஏற்படும் பயங்கரவாத தாக்குதல்கள் இழப்புக்கள் அனைத்தையும் கடந்து வரவும் கனடா நாடு தயாராக வேண்டும்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளை கனடா தடை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகளும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கனடா நாட்டுக்கு எதிராக களம் இறங்கும் . அதையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் கனடாவின் முன் நிற்கிறது . காரணம் கடந்த காலங்களில் காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு கனடா நாடு கொடுத்த அதே ஆதரவை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இதர பல்வேறு நாட்டு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும் ஆதரித்தது. மேலும் இலங்கையின் தனி ஈழம் கேட்டு போராட்டக் குழுக்கள் பயங்கரவாத அமைப்புகளின் தளமாக இருந்த கனடாவில் இந்தியாவிற்கு எதிரான அரசியல் லாபியை காலிஸ்தான் பயங்கரவாதிகளும் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகளும் சேர்ந்து முன்னெடுத்தார்கள்.
இன்று காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வரக்கூடிய நெருக்கடியும் தடையும் நாளை நமக்கும் வரக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கும். அதிலும் இதுவரையில் பாரதத்திற்கு எதிராக எந்த ஒரு விஷயத்திலும் கருத்து தெரிவிக்கவும் ஆதரவு தெரிவிக்கவும் முன்வராக இலங்கை தற்போது கனடா விவகாரத்தில் பகிரங்கமாக தாமே முன்வந்து கனடாவின் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. கனடா நாடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தளமாகவும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வாழும் இடமாகவும் இருந்து வருகிறது என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி ஃசப்ரி சமீபத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டி இருக்கிறார். இதன் மூலம் பாரதத்தோடு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இலங்கை முழுவதுமாக உடன்படுவது தெளிவாகிறது. இனி பாரதத்தோடு இணைந்து இலங்கை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கனடாவில் இருக்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வரக்கூடிய அத்தனை நெருக்கடியும் எதிர்காலத்தில் ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகளுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் கூட நிச்சயம் வரும் என்ற அச்சம் அவர்களுக்கு இந்நேரம் வந்திருக்கும்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாரதம் நடவடிக்கை எடுக்கும்போதே கனடாவில் இருக்கும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அங்கிருக்க கூடிய கனடா முஸ்லிம் லீக் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியது. பாரதத்திற்கு எதிராக கனடா குற்றச்சாட்டு வைத்ததிலும் கனடா நாட்டு பிரதமர் இந்திய வெளியுறவுத்துறை உளவுத்துறை மீது அடிப்படை ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரம் செய்து தூதரை வெளியேற்றிய அதன் பின்னணியில் கனடா நாட்டு இஸ்லாமிய கட்சிகளும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களும் இருப்பது உலகறிந்த ரகசியம் . பதிலுக்கு கனடா நாட்டு தூதரை பாரதம் வெளியேற்றியதற்கு பதிலடித்தரும் விதமாக கனடா நாட்டில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் . அதன் ஆதரவாளர்களை கனடாவில் விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கனடாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு அமைப்பைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திலேயே பேசியது கவனிக்கத்தக்கது.
எந்த வாக்கு வாங்கி அரசியலுக்காக கனடா நாட்டு பிரதமர் காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரித்து வளர்த்தாரோ? என்று அதே காலிஸ்தான் பயங்கரவாதம் அவரது ஆட்சியை பலிவாங்க தயாராகிறது . அவர் தனது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் எனில் காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் மண்டியிட வேண்டும். அப்போது உலக அளவில் பாரதத்தை நேரடியாக எதிர்க்க அவர் துணிய வேண்டும். இதை செய்யும் பட்சத்தில் உள்நாட்டில் இருக்கும் கனடா நாட்டு பூர்வ குடிகளும் எதிர் கட்சிகளும் ஊடகங்களும் ஒன்றிணைந்து அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து விடும். காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நேரடி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவருக்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைக்கலாம் .ஆனால் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் இன்னும் அவர்களின் ஆதரவில் இயங்கும் பல்வேறு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளும் கனடா நாட்டு பிரதமருக்கும் கனடா நாட்டிற்கும் எதிராக நேரடியாக களம் இறங்குவார்கள். அப்போது கனடாவின் நிலை உள்ளும் புறமும் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகும்.
தற்போது கனடா நாட்டின் பாதுகாப்பும் உள்நாட்டு அரசியலும் ஸ்திரத்தன்மை இழந்து நிற்கிறது . கனடா நாட்டு பிரதமர் காலிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் முடங்க வேண்டிய நிலை. காலிஸ்தான் பயங்கரவாதிகளை எதிர்த்தால் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது .ஆதரித்தால் ஆட்சியும் இருக்காது. கட்சியும் இருக்காது. உள்நாட்டில் மக்களின் ஆதரவும் இருக்காது . உலக அரங்கில் கனடாவில் கௌரவமும் இதன் மூலம் பெரும் அவமதிப்பை சந்திக்கும் என்ற இக்கட்டான நிலையில் செய்வதறியாது கனடா நாடு பரிதவிக்கிறது. கனடாவின் இன்றைய நெருக்கடி நிலைகள் யாவும் எதிர்வரும் காலத்தில் பிரிட்டன் பிரான்ஸ் ஐரோப்பா யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விடுக்கப்படும் பாதுகாப்பு எச்சரிக்கையாகும் சம்பந்தப்பட்ட நாடுகள் கனடாவின் நிலையை பார்த்து சுதாரித்துக் கொள்ளாவிட்டால் இன்று கனடாவிலும் சமீபத்தில் பாரிசிலும் நிகழ்ந்தவை எல்லாம் அடுத்தடுத்த காலங்களில் அந்தந்த நாடுகளில் அரங்கேறக்கூடும். வன்முறையும் பயங்கரவாதமும் எந்த ஒரு நாட்டிற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் தர முடியாது அச்சுறுத்தலையும் அழிவையும் மட்டுமே தரமுடியும் என்பதை உலக நாடுகள் உணர்ந்து சுதாரித்துக் கொள்வது அவர்களுக்கு நலம் தரும்.