அம்மாடியோ ! காங்கிரஸ் ஆட்சியில் 12 லட்சம் கோடி ஊழலா ?

அம்மாடியோ ! காங்கிரஸ் ஆட்சியில் 12 லட்சம் கோடி ஊழலா ?

Share it if you like it

பீகாரில் பா.ஜனதாவை வளர்த்த பழம்பெரும் தலைவர் கைலாஷ்பதி மிஸ்ராவின் 100-வது பிறந்தநாளையொட்டி, பாட்னாவில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், பா.ஜனதா தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். அதில் நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் குடும்ப கட்சியாக மாறிவருகின்றன. மாநில கட்சிகள் குடும்பத்துக்கு கட்டுப்பட்டதாக இருப்பதுடன் ஊழலில் சிக்கி தவிக்கின்றன.

தற்போது மக்களின் மனநிலை மாறிவிட்டது. மாநில கட்சிகளை இனிமேலும் அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அதனால், வரும் நாட்களில், குடும்ப ஆதிக்கம் கொண்ட கட்சிகள் மக்களால் துடைத்து எறியப்படுவது உறுதி. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சுமார் 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.புதிதாக தொடங்கப்பட்ட இந்தியா கூட்டணியின் நோக்கம் ஊழல் செய்வது தான்.

ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் பாஜகவின் நோக்கம். மோடி அரசு கொண்டுவந்த திட்டங்களால் ஏழை எளிய மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பலன் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவதுடன், 2025-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இவ்வாறு பாஜக தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.


Share it if you like it