Share it if you like it
பிரதமர் நரேந்திரமோடி மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் சுமார் 12,600 கோடி அளவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல்வாதிகளின் கூடாரமான காங்கிரஸ் கட்சியானது தனது பெட்டகத்தில் நிரப்பியதாக குற்றம் சாட்டிய மோடி, ஊழலை வேரறுக்க 2014 ஆம் ஆண்டு ஸ்வச்தா இயக்கத்தை தொடங்கியதாக கூறினார்.
மேலும் ஏழைகளுக்காக வழங்கப்படும் தொகையை வேறு யாரும் அபகரித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் மொபைல், ஆதார்,ஜன்தன் ஆகிய திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தியதாகவும் கூறினார். இதனால் ஏழைகளுக்கு சேர வேண்டிய சுமார் 2 அரை லட்சம் கோடி தொகையானது தவறான கைகளுக்கு போகாமல் ஏழைகளின் வங்கி கணக்குக்கே பத்திரமாக சேர்ந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
Share it if you like it