தமிழ்நாட்டின்  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !

Share it if you like it

தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறும். பின்னர் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். அடுத்த ஆண்டு மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இப்பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். மொத்தம் 3.10 கோடி பெண்வாக்காளர்கள் உள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6.52 லட்சம் பேர் வாக்காளர்கள். தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி இது. கீழ்வேளூர் தொகுதியில் மிக குறைவாக 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 6.2 கோடி பேர் வாக்காளர்கள் இருந்தனர். இந்த ஆண்டு வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் ஆகிய திருத்தங்களுக்காக 27-10-2023 முதல் 19-12-2023 வரை திருத்தும் செய்துகொள்ளலாம். 17 வயது நிரம்பியவர்கள் அனைவருமே தங்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பின்னர் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it