தங்கம் வென்ற தங்கமங்கை ! ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு !

தங்கம் வென்ற தங்கமங்கை ! ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு !

Share it if you like it

மாற்று திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2023 அக்டோபர் 22 முதல் 28 வரை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு இந்தியா 303 விளையாட்டு வீரர்களை அனுப்பியுள்ளது. அதில் 191 ஆண்கள் மற்றும் 112 பெண்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் துளசிமதி முருகேசன். இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டி சமூக வலைத்தளத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கால்நடை மருத்துவம் பயின்று கொண்டிருக்கும் சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள் இந்த ஆண்டு ஆசியப் போட்டிகளில் பெற்றுள்ள இரண்டாவது பதக்கம் ஆகும். உலக அரங்கில் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நம் அனைவரையும் பெருமைப்படுத்த வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


Share it if you like it