கேரள மாநிலத்தில் தொடர் குண்டு வெடிப்பு – கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் பயங்கரம்

கேரள மாநிலத்தில் தொடர் குண்டு வெடிப்பு – கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் பயங்கரம்

Share it if you like it

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கலமச்சேரியில் நேற்று அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்ததில் கேரள மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கலமச்சேரியில் ஜோகோவா விட்னஸஸ் என்ற கிறிஸ்தவ பிரிவை சார்ந்தவர்களின் மூன்று நாள் கூட்டம் நடந்தது. அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரிவு கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவு. இதில் பின்பற்றும் 2000 மேற்பட்டோர் இந்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதி நாள் கூட்டமான நேற்று ஜெபக்கூட்டம் நடந்தது. இதில் அனைவரும் கண்களை மூடி பிரார்த்தனையில் இருந்தபோது அந்த அரங்கில் ஒரு குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் பீதி அடைந்த மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடிக் கொண்டிருந்தபோதே அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் என்று தொடர்ச்சியாக மூன்று குண்டுகள் வெடித்ததில் அங்கு முழுவதுமாக தீப்பற்றி எறிய தொடங்கியது. நாற்காலிகள் உள்ளிட்ட அங்கிருந்த பொருட்கள் சிதறியது . பலரும் படுகாயம் அடைந்தார்கள். ஒரு சிறுமி இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இவர்களில் பலரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிர் பலி அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மத வழிபாட்டுத்தளத்தில் குண்டுபிடிப்பு நடந்தது பலத்த அதிர்ச்சியாக இருக்கிறது என்று தனது சமூக ஊடகத்தின் வழியாக கண்டித்து இருக்கிறார். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புது தில்லி போயிருந்த நிலையில் கேரள மாநிலத்தில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இதை கண்டித்த கேரள முதல்வர் பினராயி மத வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி தருவதாக குறிப்பிட்டுள்ளார். மாநில மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தோடு தொடர்பு படுத்தி பேசுவதை கேரள மாநில அரசு கண்டித்து இருக்கிறது.

கேரள வருவாய் துறை அமைச்சர் கே ராஜன் மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் கமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போருடன் இந்த சம்பவத்தை தொடர்ப்புப்படுத்துவது முறையல்ல. பொய்யான செய்திகளை வதந்திகளை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு முழு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். அதை திசை திருப்பும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார் .இந்தத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக சிறப்பு புலனாய்வு அமைப்பிற்கு விசாரணை உத்தரவிடப்படும். டிஃபன் பாக்ஸ் வாயிலாக இந்த குண்டுகள் வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணைக்குப் பிறகே இது பயங்கரவாத சம்பமா சம்பவமா ? என்பது தெரியவரும் என்று கேரள மாநில போலீஸ் டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தான் ஈடுபட்டதாக கேரள மாநிலம் கொச்சி சார்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் மாவட்டம் கோடகரா காவல் நிலையத்தில் சரணடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது‌ இவரும் அந்த ஜோகோவா பிரிவை சார்ந்தவர் என்பதும் எதற்காக இந்த தாக்குதலில் ஈடுபட்டார்? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன் கூட்ட அரங்கம் அமைந்துள்ள வளாகத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகமாக வெளியேறியது பதிவாகியுள்ளது. அதில் சதிகாரர்கள் தப்பி சென்றனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் கேரள மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்புகளும் தீவிரமாகி இருக்கிறது.

கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள தமிழகத்தின் எல்லைப்புற மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்போம் தீவிர படுத்தப்பட்டுள்ளது தமிழக கேரள மாவட்டங்கள் தமிழக கர்நாடக மாவட்ட எல்லை பகுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சந்தேக நபர்களை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்கள் பஸ் ரயில் விமான நிலையங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது . மாநிலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலங்களிலும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மதரீதியான அமைப்புகள் சில பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதும் அவர்கள் சர்வதேச பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பிலும் பொருளாதார ரீதியான பங்களிப்பிலும் இருந்து வந்தது கண்டறியப்பட்டு அதன் மூலம் சில அமைப்புகள் தடை செய்யப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்புகளும் அதன் ஆதரவாளர்களும் பல்வேறு சதி செயல்களில் ஈடுபடும் ஈடுபட்டதும் அவர்கள் அதன் தொடர்ச்சியாக அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கேரள மாநிலத்தை முன்வைத்து தென் மாநிலங்கள் பலவற்றிலும் சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கும் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களுக்கு அவர்களின் ஆதரவாளர்களும் தேசிய பாதுகாப்பு முகமையின் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பல்வேறு சதி செயல்கள் முறியடிக்கப்பட்டு வருகிறது . தொடர் கண்காணிப்பும் என்ஐஏ வின் தொடர் சோதனைகள் விசாரணைகள் இருக்கும் தென் மாநிலங்களில் கேரளாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகை நாளை ஒட்டி ஏற்கனவே பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிர படுத்தப்பட்ட வரும் நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it