116 வது நாள் தேவர் குருபூஜை – தமிழகம் தந்திட்ட பாரதத்தின் தேசிய பொக்கிஷம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

116 வது நாள் தேவர் குருபூஜை – தமிழகம் தந்திட்ட பாரதத்தின் தேசிய பொக்கிஷம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

Share it if you like it

பிறந்த நாளும் இறந்தநாளும் ஒரே நாளில் வாய்க்க பெறுவது அபூர்வமாக பூமியில் அவதரிக்கும் புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே இறைவன் வழங்கும் ஒப்பற்ற வரம். அவ்வகையில் தமிழகத்தில் தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக போற்றி வாழ்ந்த தேவர் பெருமகனாருக்கு அந்த பாக்கியத்தை இறைவனும் இயற்கையும் ஒருசேர வழங்கியது . ஒரே நாளில் அதே நாளில் பிறந்த நாளில் மரணித்தவர்களை அமர்ந்த நிலையில் சமாதி அடையச் செய்வதும் நினைவிடத்தில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்வதும் சனாதனத்தின் மரபு. பிறந்த நாளும் இறந்தநாளும் ஒரு சேர வரும் குருபூஜை நாளன்று ஆண்டு தோறும் அங்கு சிவ வழிபாடு செய்வதும் நம் தர்மத்தின் வழக்கம். சனாதன தர்மத்தின் வழியில் வாழ்ந்து தேசியத்தை உயிராக பாவித்த தேவர் பெருமகனாரின் இறுதிச்சடங்குகள் அந்த வழியிலேயே நடந்தேறியது. ஆண்டுதோறும் அவரின் பிறந்த நாளும் பிறந்த நாளும் ஒரு சேர வரும் நாளை சனாதனத்தின் வழியில் குருபூஜை நாளாக சிவ வழிபாடு செய்து வழிபடுவது மரபு .

தேவர் பெருமகனாரின் 116 முதல் நாள் குருபூஜை விழா இந்நாளில் அவரின் குல உறவுகளான தேவர் சமூகம் கடந்து பாரதம் முழுதும் பரவி இருக்கும் தேசியவாதிகளும் உலகெங்கும் விரவி இருக்கும் தேவரின் அபிமானிகளும் இந்நாளில் அவரை வணங்கி ஆசி பெறுகிறார்கள். தென் தமிழகத்தின் பசும்பொன் கிராமத்தில் தேவர் சமூகத்தில் பிறந்தவர் தேவர். தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக போற்றி வளர்ந்தவர். அந்நியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து விடுதலைப் போராட்டத்தை முன்மொழிந்த சுதந்திரம் என்பது அண்ணியின் இடத்தில் யாசகமாக கேட்டு பெரும் பிச்சை இல்லை அது நாம் போராடி வென்றெடுக்க வேண்டிய உரிமை என்று முழங்கிய இந்திய விடுதலைப் போராட்ட நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை தலைவனாக ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பின் நாளில் பாரதத்தின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி கட்டமைத்த போது அவரின் நம்பிக்கையான தளபதியாக தமிழகத்தில் இருந்து பெரும் படையை திரட்டி நேதாஜி சுபாஷின் ராணுவத்தை கட்டமைத்ததில் பெரும் பங்கு வகித்தவர்.

தேவர் பெருமகனார் நேதாஜி சுபாஷ் தனது சுயசரிதையில் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தது மட்டுமே ஆயுதப் போராட்டத்தை முன்மொழியவும் அதன் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அசைத்துப் பார்க்கவும் பலம் சேர்த்தது. இந்த இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்ததில் தனக்கு பேருதவியாக இருந்தவர்கள் வடக்கில் பட்டேலும் தெற்கில் தேவரும் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டிருந்தார். தென் தமிழகத்தில் பசும்பொன்னில் பிறந்த முத்துராமலிங்கத் தேவர் அவர்களை தனது தென்னகத்து தளபதியாக நேதாஜி குறிப்பிடும் பெருமைக்குரியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் வந்திருந்த இளம் பெண் உங்களின் முறுக்கு மீசை உங்களுக்கு வசீகரமாக இருக்கிறது. அதை பார்க்கும் போதே உங்களின் மீது காதல் வருகிறது என்று ஒரு பேசியதை கேட்டதும் ஒரு பெண் மனம் சலனப்படுவதற்கு எனது மீசை காரணம் எனில் அந்த முறுக்கு மீசை எனக்கு தேவையில்லை என்று வாழ்நாள் முழுவதிலும் மீசையை மழித்தே வாழ்ந்தவர்.

பசும்பொன்னிலும் சுற்று வட்டாரத்திலும் தனக்கு சொந்தமாக இருந்த 1832 ஏக்கர் 63 சென்ட் நிலங்களை நன்செய் நிலங்களை சுற்று வட்டாரத்தில் இருந்த நலிந்த மக்களுக்கு குறிப்பாக பட்டியல் சமூகம் சார்ந்த மக்களுக்கு வாழ்வாதாரமாக வழங்கியவர். காமராஜர் அப்துல் கலாம் வாஜ்பாய் வரிசையில் தேவரும் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். பிரம்மச்சாரிகளின் நினைவிடத்திற்கும் பிறப்பும் இறப்பும் ஒரே நாளில் சம்பவித்த குருபூஜை காணும் நினைவிடங்களுக்கும் அதீத ஆன்மீக சக்தி உண்டு. அவர்களின் நினைவிடம் சித்தர்கள் ஜீவ சமாதி யாகவே பொற்றப்படும். அங்கு செய்யும் வழிபாடுகளும் பூஜைகளும் அளப்பரிய பலன் தருபவை. அதன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் தேவரின் சமாதியில் விசேஷமாக குருபூஜை நடத்தப்படுகிறது. அதில் ஏராளமான மக்கள் சாதி இன மொழி மதம் கடந்து பெரும் திரளாக கலந்து கொள்கிறார்கள் . தென் தமிழகத்தில் சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பொது வழிபாட்டுத் தலமாக விளங்குவது தேவரின் நினைவிடம் என்றால் அது மிகையல்ல.

ஆனால் தமிழகத்தில் பிறந்து பாட்டுக்கொரு கவிஞனாக தேசியத்தை வளர்த்திட்ட பாரதியை பார்ப்பண வட்டத்திற்குள் அடைத்தது போல பாரத தேசத்தின் அடுத்த தலைமை யார் என்பதை முன்மொழியும் இடத்தில் இருந்த காமராஜரை நாடார் வட்டத்தில் அடைத்தது போல பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும் தேவர் என்னும் சாதிய ஆட்டத்துக்குள் அடைத்து திராவிடம் தனது இந்து இந்திய விரோத வன்மத்தை தீர்த்துக் கொண்டது. தேச விடுதலை போருக்காக ஆயுதப் போராட்டம் கண்ட வீரன் வாஞ்சிநாதன் பிரிட்டிஷார் அனுப்பி வைத்த ஆஷ் துரை என்னும் கலெக்டரை சுட்டுக்கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்டவர். வீரன் வாஞ்சிநாதனின் மனைவிக்கு வாஞ்சிநாதன் நினைவு நாளில் ஆண்டுதோறும் சகோதர ஸ்தானத்திலிருந்து வஸ்திரங்களும் ஆண்டு முழுவதற்குமான செலவுத் தொகையையும் தவறாது அவரை நேரில் சந்தித்து வழங்கி அவரது பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வந்தவர் தேவர். பாரதத்தின் தேசிய போராட்ட வீரர்களின் ஒட்டுமொத்த தேசியவாதிகளின் ஆன்மா ஆசியையும் பெற்றுக் கொண்ட பெருமைக்குரியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

அவரின் வாழ்நாள் முழுவதும் அவரின் மீது காங்கிரசும் அதன் ஆதரவாளர்களும் பரப்பியும் அவதூறுகளும் அரசியல் அரங்கில் இருந்து அவரை ஒழித்துக் கட்ட செய்த விஷம பிரச்சாரங்களும் ஏராளம் . ஆனால் அவர் தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கலாம். அரசியல் அரங்கில் அவதூறுகள் எதிர் கொண்டு இருக்கலாம். அனைத்திற்கும் மேலாக அவரின் ஒட்டுமொத்த வாழ்நாளில் 20 சதவீதத்தை இந்த தேசத்தின் விடுதலைக்காக சிறையில் கழித்தவர் என்ற பெருமைக்குரிய ஒப்பற்ற தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.சாயல்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களிடம் சாதி சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு ஆன்மீக உணர்வையும் தேசிய உணர்வையும் வளர்த்தெடுத்ததில் அன்னாரின் பங்கு அளப்பரியது. அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு மக்களின் தனிப்பட்ட வாழ்விலும் நலனிலும் ஒரு குடும்பத் தலைவனை போல அக்கறை செலுத்தியவர்.

தன் வாழ்நாள் முழுவதும் பிராந்திய ரீதியாக சாதிய மோதல்கள் வருவதை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்தியவர். பிரிட்டிஷாரின் ஆட்சி அகன்றாலும் அவர்களின் முகவர்களாக இங்கிருந்து கொண்டு பிரிவினையையும் இந்து சனாதன தேசத்தையும் அரசியல் முகமாக முன்னெடுத்தவர்களை தன் வாழ்நாள் முழுவதும் தென் தமிழகத்தில் கால் பதிக்காமல் எட்டி நிற்க வைத்தவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அவமதித்த திமுகவின் அண்ணாதுரை அதே மேடையில் கண்டித்து அடுத்த நாள் அதே வளாகத்தின் மேடை போட்டு பேசியவர். விழா ஏற்பாடுகளை எச்சரித்து தேசியத்தையும் தெய்வீகத்தையும் காப்பதற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் உயிரை எடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் கொடுத்த அந்த எச்சரிக்கை அடுத்து அந்த கோவில் வளாகத்தில் நாத்திகக் கூட்டங்கள் மேடை ஏறாமல் தடுத்து நிறுத்தியது. தேவர் பெருமகனாரின் இறுதி நாள் வரையிலும் நாத்திக கும்பல்கள் தென்தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் திணறியது.

தன் வாழ்நாள் முழுவதையும் தான் சார்ந்த சமூக மக்களின் பாதுகாப்பிற்காக சாதி சமயம் கடந்து ஒட்டுமொத்த மக்களின் சமூக நல்லிணத்திற்கு நல்லிணக்கத்திற்காக பாதுகாப்பிற்காக அர்ப்பணித்தவர். தேசத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர் . தனக்கென்று சுகம் குடும்பம் தேடாமல் வாழ்நாள் முழுவதும் தேசிய நலனுக்காக அர்ப்பணித்த மகான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். நேதாஜி சுபாஷ் போன்ற மாவீரர்களும் அதன் காரணமாக பிரிட்டிஷ் படை அன்று நடுங்கி தேசத்தை விட்டு வெளியேறவும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போல எண்ணற்ற தியாகிகளின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நேதாஜிக்கு துணையாக இருந்ததில் பங்கு உண்டு‌ அதனால் தான் நேதாஜியின் அருமை உணர்ந்த உண்மையான தேசியவாதிகளுக்கு எல்லாம் பசும்பொன் தேவர் பெருமகனார் நேதாஜியின் நீட்சியாக காட்சி கொடுக்கிறார். நேதாஜியை வாழும் நாளில் காட்டிக் கொடுத்து அவர் நாடு கடந்து போக காரணமாக இருந்த அந்நிய அடி வருடங்களுக்கு எப்படி நேதாஜி வேப்பங்காயாக மாறினாரோ அதேபோல பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எட்டிக்காயாகவே கசந்தார்.

ஒட்டுமொத்த தேசியவாதிகளுக்கும் நாயக பிம்பமாக இருப்பதும் அன்று முதல் இன்று வரை உள்நாட்டு துரோகிகளுக்கும் இந்து இந்திய விரோதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவதுமே தேவர் பெருமகனாரின் வீரம் தீரம் துணிவு தியாகம் தேசிய தெய்வீக மாண்பிற்கான சாட்சியம். சாதி சமயம் கடந்த மாநில அடையாளமாக முன்னிறுத்தப்பட வேண்டியவர். அவரின் சாதிய வட்டத்திற்குள் அடைத்து திராவிடத்தால் வீழ்த்தப்பட்டது தமிழகத்தின் துரதிருஷ்டம் .தேசிய அளவில் பாரதத்தின் விடுதலைக்கு அரும்பாடுபட்ட தலைவர்களும் தேசிய பொக்கிஷமாக வைத்து போற்றப்பட வேண்டியவர். ஒரு மாநில அரசியலின் வன்மம் காரணமாக இருட்டடிப்பு செய்யப்பட்டதும் இந்த தேசத்தின் சாபக்கேடு.

ஆனால் கீழ்நோக்கிப் பிடித்தாலும் மேல் நோக்கி பாயும் அக்னி தனலை போல வாழ்நாளில் சமரசம் இல்லாத தேசிய தெய்வீக உணர்வில் வாழ்ந்தவர்கள் நேதாஜியும் தேவரும் அந்த மாண்பும் மாட்சிமையும் தான் காலம் கடந்து கூட காலத்தை வென்ற தேசிய தலைவர்களாக அவர்களை இந்த மண்ணில் நிலை நிறுத்தி இருக்கிறது. அவர்கள் அரசியலால் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் பாரத தேசத்தின் உதிர வரலாறு அவர்களின் தங்களின் பக்கங்களில் பெருமிதத்தோடு பதிந்து வைத்திருக்கிறது. அந்த வரலாற்றின் பக்கங்கள் இறையருளால் மீண்டு வருவதற்கு காரணமாக எப்படி தேசத்தின் தலைநகரில் புது தில்லி ராஜ வீதியில் வெண்கல சிலையோடு கம்பீரமாக நேதாஜியின் சிலை எழுந்து நிற்கிறதோ ? அதே வழியில் பாரத தேசத்தின் ஆட்சியாளர்களாலும் இங்கு உள்ள தேசியவாதிகளாலும் தற்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழும் மாண்பும் வெளிச்சத்திற்கு வர தொடங்கி இருக்கிறது.

இன்றில்லையேனும் என்றேனும் ஒரு நாள் பசும்பொன் என்னும் தமிழகம் தந்துட்ட பொக்கிஷம் தேசிய அளவில் புடம் போட்ட தங்கமாக நிச்சயம் மிளிரும் . அந்நாளில் தேவர் பெருமகனார் வீரமும் புகழும் அவரை சாதிய வட்டத்துக்குள் அடைத்த சதிகளை தடுத்து தேசிய தலைவராக பாரத தேசத்தின் விடுதலைப் போராட்ட நாயகர்களில் ஒருவராக நிச்சயம் நிலை நிறுத்தும். அந்நாளில் அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த சாதி மத துவேஷிகளும் அவரை வாழ்நாள் முழுவதும் வஞ்சித்து வந்த இந்து இந்திய விரோதிகளும் இந்த மண்ணில் இருந்து ஒட்டுமொத்தமாக துடைத்தெறியப்பட்டு இருப்பார்கள். அந்நாளில் தேவரின் குருபூஜை தமிழகம் என்னும் மாநிலத்தைக் கடந்த பாரத தேசத்தின் தேசிய அளவிலான குருபூஜை நாடாக புகழோடு ஜொலிக்கும்.


Share it if you like it