பாரதத்தின் வளர்ச்சி தேசியம் பாதுகாப்பில் பங்களிப்பு வழங்கும் பெறு முதலாளிகள்  பாதுகாக்கப் பட வேண்டும் – அத்தியாயம் நான்கு !

பாரதத்தின் வளர்ச்சி தேசியம் பாதுகாப்பில் பங்களிப்பு வழங்கும் பெறு முதலாளிகள் பாதுகாக்கப் பட வேண்டும் – அத்தியாயம் நான்கு !

Share it if you like it

கடந்த காலங்களில் பாரதத்திலிருந்து பெரும்பாலான தொழில் வியாபாரம் கட்டுமானம் உற்பத்தி சார்ந்த வாய்ப்புகளில் அந்நிய நாடுகள் பெருமளவில் லாபத்தில் கொழித்தது. இதன் மூலம் பாரதியர்களின் உழைப்பு முயற்சி பங்களிப்பு எல்லாம் பாரதத்தை விடவும் வெளிநாடுகளுக்கே அதிக பலனை கொடுத்து வந்தது. இங்குள்ளவர்களின் வியர்வையை உறிஞ்சி வெளிநாடுகள் கொழுத்தது. இதைக் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அவர்களின் அரசியல் ஆதாயம் சுயலாபம் கருதி இதை எல்லாம் உரம் போட்டு வளர்த்தார்கள். அவர்களின் கூட்டணியான கம்யூனிஸ்டுகள் ஒரு புறம் பொதுவுடமை சித்தாந்தம் பேசிக்கொண்டே மறுபுறம் தங்களின் சுயநலனுக்காக பாரத தேசத்தின் பொருளாதார சுரண்டலை மௌனமாக கடந்து போனார்கள்.

சமீபத்திய பாரதத்தின் ஆட்சியாளர்கள் வெளிநாடுகளின் வருகைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். உள்நாட்டில் இருக்கும் தொழில் முனைவோர்கள் பெரு நிறுவன முதலாளிகளுக்கு சலுகைகள் முன்னுரிமை மூலம் அவர்களை மேலும் மேலும் வளர துணை நிற்கிறார்கள். சர்வதேச அளவில் வாய்ப்புகள் பெறவும் உரிய கட்டமைப்பு பாதுகாப்பு செய்கிறார்கள். இதன் காரணமாக வெளிநாடு போட்டி நிறுவனங்கள் எல்லாம் தற்போதைய பாரதத்தின் ஆட்சியாளர்கள் மீதும் அவர்களின் ஆதரவில் வளர்ந்து நிற்கும் உள்நாட்டு பெருநிறுவன முதலாளிகள் மீதும் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

தற்போதைய ஆட்சியாளர்கள் இருக்கும் வரை மீண்டும் தாங்கள் பாரதத்தில் கால் பதிப்பதும் பாரதத்தின் வளங்களை சுரண்டி பிழைப்பதும் நடக்காத காரியம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

சமீபத்தில் பங்குச்சந்தை விவகாரத்தில் முதலீடு சரிவு என்ற விவகாரத்தில் அதானியை முன்வைத்து திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்தது இதன் வெளிப்பாடு தான். இதன் மூலம் அவரது நிறுவனத்தின் பங்குச்சந்தைகள் சரிந்ததும் அதன் பிறகு நிலைமை சீரானதும் நினைவிருக்கலாம். ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் வந்த வீழ்ச்சியும் அதன் காரணமான பல ஆயிரக்கணக்கான மக்களின் மன உளைச்சலுக்கும் யார் பொறுப்பு ? என்ன காரணம் ? அவர்களின் நோக்கம் என்ன? என்பதை யோசித்துப் பார்த்தால் இந்த சதிகாரர்களின் உண்மை முகம் தெரியும். உள்நாட்டில் தொழில் முனைவோர்களாக பெரிய அளவில் இங்கு பெரு முதலாளிகள் வளர்ந்து வருவதையும் அவர்களின் மூலமாக பாரத தேசம் பொருளாதார வல்லரசாக வளர்வதையும் இவர்கள் யாரும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டார்கள். உள்நாட்டிலேயே வளர்ச்சியை விரும்பாதவர்கள் சர்வதேச அளவில் பொருளாதார பலத்தோடு அதானே போன்றவர்கள் வளர்வதையும் அவர்கள் மேலும் மேலும் தரவரிசையில் முந்துவதையும் எப்படி அனுமதிப்பார்கள்? அதனால் தான் சர்வதேச அளவிலான தரவரிசையில் பல புள்ளிகளைக் கடந்து முதல் ஐந்து இடங்களுக்குள் போன அதானியை குறிவைத்து அடுத்த சில மாதங்களில் திட்டமிட்டு பெரும் சதியை அரங்கேற்றினார்கள். அதன் காரணமாக மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் கடுமையான அரசியல் நெருக்கடிகளை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் கொடுத்தது .ஆனால் அத்தனைக்கும் உரிய பதிலடி கொடுத்து மத்திய அரசும் அதானியும் இன்றளவும் இணைந்த கைகளாக தேசத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார்கள்.

இவர்களின் தனிப்பட்ட இலக்கோ விரோதமோ அம்பானி அதானி மகேந்திரா உள்ளிட்ட பெரும் நிறுவன முதலாளிகள் மீதோ அல்லது மோடி உள்ளிட்ட தனி மனிதர்கள் மீதும் கிடையாது . இவர்களின் ஒட்டுமொத்த விரோதமும் பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட பங்களிப்பை வழங்க யாரும் முன் வரக்கூடாது தேசத்தில் வெற்றிகரமாக பெரு நிறுவனங்கள் தொழில் வியாபார வர்த்தகங்களை யாரும் நடத்தக்கூடாது. அப்படியே நடத்தினாலும் தனது வருவாய் ஆதாயங்களை மத்திய அரசுக்கு மக்கள் நலனுக்கு குறிப்பாக தேசியம் சார்ந்த விஷயங்களில் ஆதரவான நிலைப்பாட்டை அந்நிறுவனங்கள் எடுக்கவே கூடாது . அந்த வகையில் இங்கிருக்கும் பெரும் முதலாளிகள் எந்த காலகட்டத்திலும் தேசிய சார்புள்ளவர்களாக தேசத்தின் நலன் விரும்பிகளாக இருக்கக் கூடாது என்பதே இவர்களின் எண்ணம். அதையும் மீறி கொரோனா காலத்தில் பல ஆயிரம் கோடிகளை வாரி வழங்கும் உதவிகள் . அக்னி வீரர்களுக்கு எங்களின் நிறுவனத்தில் முன்னுரிமை போன்ற அறிவிப்புகள் எல்லாம் இது போன்ற பெரும் முதலாளிகள் மீது பாரதத்தின் உள்நாட்டு துரோகிகளுக்கும் வெளிநாட்டு சதிகாரர்களுக்கும் வன்மத்தை வளர்கிறது.

கடந்த காலங்களைப் போல ஆட்சியாளர்கள் உள்நாட்டு தொழில் முனைவோரை நசுக்கி அயல்நாட்டு தொழில் முனைவோருக்கும் தொழில் வளர்ச்சிக்கும் பட்டுக்கம்பளம் விரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்களின் சுயநலத்துக்காக இந்த தேசத்தின் நலன் வளர்ச்சி பாதுகாப்பை அன்னியர்களின் காலடியில் அடகு வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் . இதை செய்து தர தயாராக இருக்கும் ஆட்சியாளர்களுக்கு அவர்களும் தனிப்பட்ட முறையில் எவ்வளவு அரசியல் பொருளாதார ஆதாயங்களை வாரி வழங்க தயாராக தான் இருப்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் உடன்படாமல் தனது சுய விருப்பு வெறுப்பு ஆதாயத்திற்கு அப்பாற்பட்டு தேசத்தின் நலன் மட்டுமே குறிக்கோள் என்று செயல்படும் ஆட்சியாளர்களை இது போன்ற அந்நிய நிறுவனங்களுக்கும் உள்நாட்டு துரோகிகளுக்கும் கண்டாலே ஆகாது. அவர்களைப் போல ஆட்சியாளர்களும் அவர்களின் ஆதரவில் வளர்ந்து வரும் தேசிய சிந்தனை உள்ள உள்நாட்டு தொழில் நிறுவனங்களையும் எந்த விலை கொடுத்தேனும் முடக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஒன்று கூடி சதித்திட்டம் தீட்டுவார்கள்.

பாரதத்தின் உள்நாட்டு வளர்ச்சியை எந்த காலத்திலும் வளர விடக்கூடாது என்று நினைத்த அந்நிய தொழில் நிறுவனங்கள் பாரதம் எந்த காலத்திலும் வளர்ந்து வரக்கூடாது என்று நினைக்கும் அந்நிய சதிகாரர்கள் பாரத தேசத்தின் வளர்ச்சிக்கும் நலனுக்கும் எதிராக அணி திரள்கிறார்கள். அதே நேரத்தில் தனது சொந்த பொருளாதார ஆதாயத்திற்காக நாட்டையும் காட்டிக் கொடுக்க தயாராக இருக்கும் நாசக்கார தொழில் நிறுவனங்கள் பாரதத்திலும் உண்டு. அவர்கள் அம்பானி அதானி மகேந்திரா போன்ற தேசிய சார்புள்ள தொழில் நிறுவனங்கள் வளர்வதை அனுமதிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட வாக்கு வங்கி அரசியலுக்காக தங்களின் அதிகாரம் பலம் அதிகாரக் கொள்ளைக்காக தேசத்தையே பலி கொடுக்க தயாராக இருக்கும் கட்சிகளும் தலைவர்களும் ஒருநாளும் பாரத தேசத்தின் வளர்ச்சியை ஸ்திரத் த்தன்மையை விரும்ப மாட்டார்கள்.

உள்நாட்டில் இவர்கள் எல்லாம் அதானி குழுமத்திற்கு எதிராக ஒரு அணியில் திரளுகிறார்கள். இந்த உள்நாட்டு அணியும் வெளிநாட்டு அணியும் ஒன்றிணைந்து பாரதத்தின் தற்போதைய ஆட்சியாளர்களையும் அவர்களின் பாதுகாப்பில் பெரிய அளவில் வளர்ந்து தேசத்திற்கு பங்களிப்பு வழங்கும் பெரும் முதலாளிகளையும் ஒழித்து கட்டுவதற்கு ஒன்றிணைகிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அம்பானி அதானி பாசிசம் மோடி என்ற கூச்சல்களும் குழப்பங்கள் எல்லாம். இவர்களின் ஒரே இலக்கு பாரத தேசத்தின் வளர்ச்சி பொருளாதார பலம் முடக்கப்பட வேண்டும். இங்கு அந்நிய நிறுவனங்கள் பழையபடி காலூன்ற வேண்டும் . இந்த தேசமும் மக்களும் நவீன காலனியாகவே தொடர வேண்டும் என்ற கெடுமதி மட்டுமே. அதற்கு இங்கு இருக்கும் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் ஊதுகுழலாகி செயல்படுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அரை நூற்றாண்டு கால ஆட்சியில் அவர்கள் எதை செய்தார்களோ? அதைத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் செய்வோம் என்று காங்கிரஸ் இளவரசர் ராகுல் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

இதே காங்கிரஸ் கட்சியின் தலைவர் எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகளை 100% நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற எந்த ஒரு அரசியல்வாதியின் சொத்துக்கள் வருமானம் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடுவேன் என்றோ அதையெல்லாம் பறித்து நாட்டு மக்களுக்கு பிரித்துக் கொடுப்பேன் என்றோ ராகுல் பேசவில்லை. மாறாக நேர்மையாக உழைத்து தேசத்தை வலுப்படுத்தும் ஒரு பெரு முதலாளியை குறி வைப்பதன் மூலம் உள்நாட்டில் இருக்கும் அத்தனை பேரும் முதலாளிகளுக்கும் அவர் மனதளவில் ஒரு அச்சத்தை விதைக்கிறார்.‌ அதன்மூலம் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் மாறும் அவர்களை அச்சுறுத்தி தங்களின் ஆதரவாளர்களாக கொத்தடிமைகளாக மாற்றிக் கொள்ள முடியும். அவர்களின் பங்களிப்பு செயல்பாடுகளை மடை மாற்றுவதன் மூலம் இந்த தேசத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியும் என்று அவர் கனவு காண்கிறார்.

இங்குள்ள பெரும் முதலாளிகள் எல்லோரும் ராகுலின் அப்பா பாட்டி தாத்தா என்று அவர்களின் முன்னோர்கள் தலைமை அதிகாரத்தில் ஆட்சி பீடத்தில் இருக்கும் போது கூட இதே பெரும் முதலாளிகளாக இருந்தவர்கள். இந்த தேசத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியவர்கள் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பெரு முதலாளிகளின் வளர்ச்சியிலும் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கியதிலும் கணிசமான பங்களிப்பு ராகுலின் முன்னோர்கள் ஆட்சியில் கூட இருந்தது என்பது அவருக்கு மறந்திருக்கலாம். இன்று இவர் சொல்வது போல கடந்த காலங்களில் இவர்களின் முன்னோர்களின் வழியிலும் அவசரநிலை பிரகடனம் என்ற பெயரில் எவ்வளவு நெருக்கடிகளை உள்நாட்டு தொழில் முதலாளிகள் அனுபவித்திருக்கிறார்கள். அத்தனையும் கடந்து தான் அவர்கள் வெற்றிகரமாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று ராகுலின் இந்த மிரட்டலையும் பெற்று கூச்சலையும் கூட கடந்து அவர்கள் தங்களது உழைப்பு துணிச்சலின் மூலம் வெற்றிகரமாக தங்களின் பெரு நிறுவனங்களை தொடரத்தான் போகிறார்கள் என்பதும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


Share it if you like it