தனது சுயலாபத்திற்காக உள்நாட்டு வளர்ச்சியை அந்நியரிடம் அடகு வைக்கும் காங்கிரஸ் தலைமை – அத்தியாயம் மூன்று !

தனது சுயலாபத்திற்காக உள்நாட்டு வளர்ச்சியை அந்நியரிடம் அடகு வைக்கும் காங்கிரஸ் தலைமை – அத்தியாயம் மூன்று !

Share it if you like it

அதானியிடம் இருந்து சொத்துக்களை பறித்து நாட்டில் உள்ள ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்பேன் என்று சொல்லும் இதே ராகுல் காந்தியால் தமிழகத்தில் பெரும் நிதி நெருக்கடி காரணமாக மாநில அரசே திமுக லை நோக்கி நகரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக வெறும் கையோடு தமிழக அரசியலில் கால் பதித்து இன்று பல லட்சம் கோடி களுக்கு அதிபதிகளாக இருப்பவர்களின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவர்களின் ஊழல் சொத்துக்கள் நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. பதிலுக்கு கூட்டணி கட்சிகள் திருப்பி அடித்தால் காங்கிரஸின் அஸ்திவாரம் நொறுங்கிவிடும் என்று ராகுலுக்கு தெரியும். அதனால் அது போன்ற விஷயங்களில் அவர் கள்ள மவுனமே காப்பார்.

அம்பானி அதானி மகேந்திரா உள்ளிட்டவர்கள் காலம் காலமாக இங்கு தொழிலில் இருக்கிறார்கள். நாங்கள் இந்த தொழிலில் இவ்வளவு முதலீடு செய்தோம். அதில் வந்த வர்த்தக இயக்கம் இவ்வளவு. அதன் மூலமான லாபம் நஷ்டம் இவ்வளவு கையிருப்பு இவ்வளவு என்று அவர்களிடம் தெளிவான கணக்கு வழக்குகள் இருக்கும். ஆனால் அவர்களின் சொத்துக்களை குறி வைத்து அவர்களின் வளர்ச்சியை முடக்க நினைத்து ஆட்சிக்கு வந்தால் அவர்களின் சொத்தை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்போம் என்று சொல்லும் இதே ராகுல் காந்தியால் இதே காங்கிரஸ் கட்சியிடம் பாரதத்தின் சுதந்திரம் கிடைத்த போது எவ்வளவு சொத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக இருந்தது? அதை நூற்றாண்டு காலம் ஆட்சி அதிகாரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு சொத்துக்கள் வளர்ந்து இருக்கிறது? என்று ஆய்வு செய்து அதை ஏழைகளுக்கு பிரித்து கொடுக்க காங்கிரஸ் கட்சியும் ராகுலும் தயாரா? என்று கேட்டால் பதில் வராது. எந்தவிதமான தொழில் வியாபாரம் வர்த்தகம் செய்து காங்கிரஸ் கட்சி இவ்வளவு சொத்துக்களை கட்சிக்காக வாரி குவித்தது என்று கேட்டால் பதில் வராது.

காங்கிரசின் ஐஎன்டிஐஏ கூட்டணியில் இருக்கும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் எல்லாம் அரசியலுக்கு வரும்போது அன்றாடம் காய்ச்சிகளாக இருந்து இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்களே? அவர்களின் மீது எல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது அவர்கள் மீது எப்படிப்பட்ட நடவடிக்கைகள் இருக்கும்? என்று கேட்டால் ராகுல் அங்கிருந்து ஓடி விடுவார். காங்கிரஸின் தலைமையிலான புள்ளி வைத்த கூட்டணியில் பெரும் அங்கமாக இருக்கும் திமுக என்ற தமிழக பிராந்திய கட்சி. அதன் கடந்த கால ஊழல்கள் சமகால அதிகார துஷ்பிரயோகம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கிறது. பல லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு வெளிநாட்டு சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக அவர்களது கட்சியை சார்ந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் தலைமை குடும்ப உறுப்பினர்கள் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் . அந்த ஆவணங்களின் அடிப்படையில் வருமானவரித்துறை சோதனை அமலாக்கத்துறை சோதனை கைதுகள் என்று நடவடிக்கைகள் நிகழ்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழல் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டில் உள்ள மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று இதுவரையில் ராகுலோ காங்கிரஸோ அறிவிக்கவில்லை. மாறாக இந்த கைதுகள் நடவடிக்கைகள் எல்லாம் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மலிவான அரசியல் தான் செய்கிறது. ஆனால் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் உழைப்பை கொடுக்கும் பெரும் முதலாளிகள் அவர்களின் தொழில் வியாபார வர்த்தக நிறுவனங்கள் காரணமாக எத்தனையோ கோடி பேர் வாழ்வாதாரம் பெற்று வரும் நிலையில் அவர்களின் சொத்துக்களை எல்லாம் அபகரித்து அதை ஏழைகளுக்கு பிரிந்து அளிப்பேன் என்று பெருமிதமாக ராகுல் குறிப்பிடுவார். அப்படி எனில் அரை நூற்றாண்டுகள் அவர்களின் இந்திய ஆட்சியில் இங்கு உள்ள வறுமையும் ஏழ்மையும் ஒழிக்கப்படவில்லை என்பதை அவரை ஒப்புக்கொள்கிறார்.

காங்கிரஸின் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி குவித்த சொத்துக்களை எல்லாம் விசாரணை உட்படுத்துவோம். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் சொத்துக்களை எல்லாம் பறித்து நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிப்போம் என்று சொல்லி இருந்தால் ராகுலின் மீது நிச்சயம் நாட்டு மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச நம்பிக்கை வந்திருக்கும். இந்த தேசத்தில் வங்கி கடன் மானியம் உள்ளிட்ட உதவிகளை பெற்றுக்கொண்டு மக்களையும் அரசையும் ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளில் போய் பதுங்கி இருப்பவர்களை எல்லாம் அடையாளம் கண்டு அவர்களின் சொத்துக்களை எல்லாம் அபகரித்து நாட்டு மக்களுக்கு பிரித்துக் கொடுப்பேன் என்று சொல்லி இருந்தால் தேசம் அவரை கைதட்டி வரவேற்று இருக்கும். ஆனால் கடுமையான உழைப்பு தொழில் போட்டிகள் நிர்வாக சவால்கள் அத்தனையும் கடந்து வெற்றிகரமாக தொழில் நிறுவனங்களை நடத்தி அதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை வருமானமாக ஈட்டி தேசத்திற்கு பெரும் பங்களிப்பு வழங்கும் ஒரு பெரும் முதலாளியிடம் இருந்து அவரின் சொத்துக்களை அபகரித்து ஏழை மக்களுக்கு பிரித்தெளிப்பேன் என்று சொல்வதன் மூலம் அவர் இந்த தேசத்தை உள்ளிருந்தே சிதைக்கும் ஒரு கரையான் போல. தேசத்தை சீரழிக்கிறோம் என்பதை அவர் வாயாலயே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதானியிடம் இருந்து சொத்துக்களை பறித்து ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கிறோம் என்று ராகுல் சொல்லி இருக்கிறார். அப்படி பிரித்துக் கொடுக்கும் போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஏழைகளுக்கு எவ்வளவு கூடுதல் முன்னுரிமை தரப்படும் என்பதை சொல்லி இருக்கலாம்? காரணம் அங்கு தான் ஏழைகள் அதிகம் இருக்கிறார்களாம். தற்போது தேசிய தலைமை பொறுப்பில் இருப்பவரை மோடி அரசாங்கத்திடம் நாடாளுமன்றத்தில் நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் எங்களுக்கெல்லாம் அரசாங்கத்தின் சார்பில் சில ஏக்கர் நிலங்களை ஒதுக்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டவர் தான்.

இப்படிப்பட்ட காங்கிரஸின் ஏழைகளுக்கு எவ்வளவு பங்கு பிரிக்கப்படும் என்பதையும் ராகுல் தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். ஏழைகளுக்கு பங்கு பிரிக்கும் போது காங்கிரஸ் கட்சியிலிருந்து யாருக்கெல்லாம் எவ்வளவு பங்கு? என்பதையும் சொல்லி இருக்கலாம்.

கடந்த காலங்களில் அரசாங்கத்திடம் இருந்து நலத்திட்டம் என்ற பெயரில் ஒரு ரூபாய் மத்திய அரசு ஒதுக்கினால் அது மக்களுக்கு போய் சேரும்போது பத்து பைசாவிற்கும் குறைவாகத்தான் போய் சேர்கிறது . அந்த அளவில் ஊழல் மலிந்து விட்டது. என்று அவரின் தந்தையும் முன்னாள் காங்கிரஸ் தேசிய கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை பொதுவெளியில் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக வேதனையோடு குறிப்பிட்டு இருக்கிறார். அதை ராகுல் மனதில் வைத்துக் கொள்வது நல்லது. அதானியும் அம்பானியிடம் இருக்கும் சொத்துக்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முன்பு காங்கிரசின் கட்சி அறக்கட்டளைக்கு வந்த சொத்துக்கள் நன்கொடைகள் பற்றிய விசாரணைக்கு முதலில் ராகுல் உத்தரவிடட்டும். நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கு தொடங்கி சீன நிறுவனங்கள் உளவுத்துறையிடம் இருந்து நன்கொடையாக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமை குடும்பமும் பெற்றிருக்கும் நன்கொடைகள் வரை முதலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தட்டும் அவற்றில் எல்லாம் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்காரர்களும் அதன் தலைமை குடும்பத்தில் இருக்கும் அவர் உட்பட உச்சபட்ச தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று துணிவிருந்தால் அவர் எச்சரிக்கை விடட்டும் பார்க்கலாம்.

ராஜீவின் மரணத்திற்கு பிறகு புற்றீசல் போல இளைஞர் அறக்கட்டளை மக்கள் நல அறக்கட்டளை என்று பல நூறு அறக்கட்டளைகள் காங்கிரஸ் கட்சியாலும் இவர்களின் குடும்பத்தாரும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னணி என்? என்பதை ராகுல் விசாரணைக்கு உட்படுத்த தயாரா? என்று அவரிடம் கேட்பதற்கு இங்கு ஊடகங்கள் இல்லை. அறக்கட்டளைகள் இன்று பல ஆயிரம் கோடிகளிலும் சில லட்சம் கோடிகளிலும் குரல் அதன் மர்மம் பின்னணி என்ன? அதன் பொருளாதார மூலங்கள் என்ன? என்பதை விசாரணைக்கு உட்படுத்த தயாரா? அவற்றையெல்லாம் ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சியும் நீங்களும் தயாரா? என்று அவரிடம் கேட்பதற்கு துணிவான ஒரு ஊடகவியலாளர் இங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் பெரும் வளர்ச்சிக்கும் நலனுக்கும் பங்களிப்பு வழங்கும் அதானி போன்ற பெரும் முதலாளிகள் வளரவும் அதன் மூலம் தேசம் வளரவும் நித்தமும் பிரார்த்தனை செய்யும் நலன் விரும்பிகள் தேசியவாதிகள் இங்கு ஏராளம் உண்டு.

அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கும் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரியாக எதிர்க்கட்சி அரசியல் செய்யும் ராகுலுக்கும் எதிராக விசாரணைகளையும் நடவடிக்கைகளையும் எடுக்க தொடங்கினால் இங்கு காங்கிரஸ் என்னும் ஒரு கட்சியும் இருக்காது. ராகுல் என்ற ஒருவர் அதற்கு தலைமையும் ஏற்க முடியாது. இது போன்ற பிதற்றலான அறிக்கைகளையும் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது.இந்த நிமிடம் வரை ராகுலின் அறிவிப்பை அவர் சார்ந்த ஐஎன்டிஐஏ கூட்டணியின் சார்பில் யாரும் வரவேற்கவோ ஆமோதிக்கவோ இல்லை. அதிலிருந்து இதெல்லாம் ராகுலின் பொழுது போக்கு பிதற்றல். தனக்கு ஆட்சி அதிகாரம் தராத இந்த தேசத்தின் மக்கள் மீதான அவரின் தனிப்பட்ட வன்மம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆட்சி அதிகாரத்திற்காக அதற்கு துணை நிற்கும் அந்நிய ஆதரவோடு அவர் எந்த எல்லைக்கும் போக தயாராக இருப்பதை நிருபித்து இருக்கிறார்.


Share it if you like it