ஐஐடி காரக்பூர் கல்லூரி நிர்வாக பட்டமளிப்பு விழாவில் மாணவ- மாணவிகளுக்கு ஆடை விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் 23 ஐஐடிகள் இயங்கி வருகின்றன. இங்கு சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். ஐஐடி காரக்பூர் 1951 முதல் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் பட்டமளிப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆடைகள் விதிமுறைகளை குறித்து வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு முழுக்கை காட்டன் குர்தா, அதற்கு உள்ளே வெள்ளை பனியன் அணிந்திருக்க வேண்டும். கீழே பைஜாமா அணிய வேண்டும், இந்திய பாரம்பரிய பழுப்பு வண்ண மூடப்பட்ட வகை காலணி அல்லது கோலாபுரி வகை காலணியை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணிற தங்க நிற பார்டர் வைத்த சேலை, கை வைத்த ஜாக்கெட் (ஸ்லீவ்லெஸ் ஆடைக்கு அனுமதி இல்லை) மட்டும்தான் அணிந்திருக்க வேண்டும். இந்திய பாரம்பரிய பழுப்பு வண்ண மூடப்பட்ட வகை காலணி அல்லது கோலாபுரி வகை காலணியை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஸ்ட் வாட்ச்சுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் நகை அணியும்பட்சத்தில் சிறிய வகை கழுத்து செயினை அணியலாம். கையில் எளிய வகை இரண்டு வளையல்கள், மோதிரங்களை அணியலாம். எளிமையான தோடுக்கு அனுமதி உண்டு. எனினும் தொங்கும் வகையிலான தோடுகளுக்கு அனுமதி இல்லை.