Share it if you like it
கொரோனா தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக, நேற்று ஒரே நாளில் இந்தியாவில் இருந்து 1,06,827 பயணிகள், வெளிநாடுகளுக்கு பயணித்து உள்ளதாகவும், இது புதிய சாதனை என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு முக்கிய நாள் !
தினசரி 4.63 லட்சம் உள்நாட்டுப் பயணிகளை ஏற்றிச் செல்லும் மைல்கல்லை எட்டிய பிறகு, தினசரி 1 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் இத்துறை மேலும் ஒரு சாதனையை எட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தத் துறையை வெற்றியின் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
Share it if you like it