கடவுள் மறுப்பாளரான “ராம”சாமி நாயக்கர் பேரிலும் கூட பகவான் ஸ்ரீ ராமர் பெயர் உள்ளது !

கடவுள் மறுப்பாளரான “ராம”சாமி நாயக்கர் பேரிலும் கூட பகவான் ஸ்ரீ ராமர் பெயர் உள்ளது !

Share it if you like it

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அயோத்தி இராமர் கோவில் திறப்பின் மூலம் 500 ஆண்டுகால போராட்டம் வெற்றியில் முடிந்திருக்கிறது.

இராமர் மதத் தலைவர் அல்ல. இராமர் இந்திய நாகரிகம், கலாசாரத்திற்கான நம்பிக்கை. அவர் சிறந்த ஆட்சியாளர், சிறந்த கணவர், சிறந்த மகன். கடுமையான சூழலிலும் சத்தியத்தின் வழி நின்றவர். முக்கியத் தலைவர்களின் பெயரிலும்கூட ராம் என்பது இருக்கிறது.

உதாரணமாக எம்.ஜி.ராமச்சந்திரன், கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் ஆந்திரா முதல்வர் என்.டி.ராமராவை கூறலாம். அதேபோல, கடவுளை நம்பாத தலைவர்களின் பெயரிலும் கூட ராம் இருக்கிறது. உதாரணமாக, ஈ.வெ.ராமசாமி, சீதாராம் யெச்சூரி ஆகியோரைக் கூறலாம்.

இப்படி பல தலைவர்களின் பெயர்களில் ராம் என்ற பெயர் உள்ளது. இதற்கு மதம் மட்டும் காரணமல்ல. கலாச்சார மதிப்பு, இராமர் காட்டிய நல்வழிதான் காரணம். மக்களவைத் தேர்தலுக்கும், அயோத்திக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு சிலர் அப்படி நினைக்கின்றனர். இராமர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.

ஒரு கட்சிக்குச் சொந்தமானவர் அல்ல. இராம ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்றார் மகாத்மா காந்தி. இராம ராஜ்ஜியத்தில் ஊழல், சுரண்டல், அடாவடித்தனம், ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகும் என்பதே அர்த்தம். எனவே, ராம ராஜ்ஜியத்தின் திசையை நோக்கித்தான் செயல்பட வேண்டும்” என்றார்.


Share it if you like it