அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசிக்க வந்த ஹனுமன் !

அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசிக்க வந்த ஹனுமன் !

Share it if you like it

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் பிரதமர் மோடி முன்னிலையில் கடந்த 22 ஆம் தேதியன்று பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இந்நிலையில் அயோத்தி கோவிலுக்கு குரங்கு ஒன்று வந்து சென்றுள்ளதாக அயோத்தி கோவில் அறக்கட்டளை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் அறக்கட்டளை இந்த நிகழ்வைப் பற்றி தெரிவித்துள்ளதாவது, “ஒரு குரங்கு தெற்கு வாசல் வழியாக கருவறைக்குள் நுழைந்து உற்சவர் சிலையை நெருங்கியது. இதை கவனித்த பாதுகாப்பு ஊழியர்கள், குரங்கு சிலையை தரையில் வீழ்த்திவிடுமோ என்ற அச்சத்தில் விரைந்தனர்.

“போலீசார் குரங்கை நோக்கி ஓடியவுடன், குரங்கு அமைதியாக வடக்கு வாயிலை நோக்கி ஓடியது. கேட் மூடப்பட்டதால், கிழக்கு நோக்கி நகர்ந்து, கூட்டத்தை கடந்து, யாருக்கும் சிரமம் ஏற்படாமல், கிழக்கு வாசல் வழியாக வெளியே சென்றது.எங்களுக்கு ஹனுமான் ஜியே ராம்லாலாவைப் பார்க்க வந்ததைப் போல இருக்கிறது என்று பாதுகாப்புப் பணியாளர்கள் கூறுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அயோத்தியில் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்ட அயோத்தி கோவிலின் ‘பிரான் பிரதிஷ்டா’ விழா பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது.

ராமர் கோயிலை முதலில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்தபோது, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு குவிந்தனர். தொடர்ந்து அயோத்தியில் பக்தர்கள் குழந்தை ராமரை வணங்கி வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


Share it if you like it