கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு வெளியே போகாதீர்கள் என்றும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே செல்லுங்கள் அப்பொழுதும் மாஸ்க் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில் மணிப்பூரைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் தனது தோழியுடன் மும்பையில் உள்ள கீதா விஹாரில் இருந்து கலினாவில் உள்ள ராணுவ முகாம் நோக்கி நடந்து சென்று போலீசாரால் விநியோகிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகித்துவிட்டு வீட்டுக்கு திரும்புகையில் 23 வயது நபரான குர்லாவில் வசிக்கக்கூடிய அமீர் முகமது எலியாஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து அவர் அணிந்திருந்த மாஸ்க்கை கழட்டி விட்டு கொரோனா வைரஸை பரப்பும் வகையில் அந்த பெண்ணின் மீது துப்பியுள்ளார்.
This is not done! WE HAVE TO FIGHT #COVID19 OR THIS RACIAL ATTACKS? I request the @MumbaiPolice police to immediately take actions please!
A NE girl from Manipur is the new victim again here in Mumbai. This happened just an hour ago. A biker came &spat on her.#StopRacism pic.twitter.com/sVIHuhR2Gh— Linda Newmai 🇮🇳 (@lindanewmai) April 6, 2020
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் தோழி லிண்டா நியாமி என்ற பெண் இந்த சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாக காவல் துறையினர் அந்த குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமிய அடைப்படைவாதியான அமீர் முகமது எலியாஸை மும்பையின் கலினா பகுதியில் கைது செய்தனர். கொரோனா வைரசை பரப்பும் வகையில் துப்புவது கொலை குற்றத்திற்கு ஈடானது என்று அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.