Share it if you like it
தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் முகநூல், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் கணக்குகள் உள்ளன.சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்ட பள்ளிக்கல்வித் துறையின் முகநூல் பக்கத்தில் மர்ம நபர்கள் சிலர் தமிழக பள்ளி கல்வி துறை சமூக வலைதள பக்கத்தை ஹேக் செய்து அதில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தினை பதிவேற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் புகார் அளித்துள்ளனர்.
Share it if you like it