Share it if you like it
இந்திய ரயில் பெட்டி தொழிற்சாலைகளிலேயே முதல்முறையாக, ஒரே ஆண்டில், 1,000 ரயில் பெட்டிகள் தயாரித்து, சென்னை ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.
சென்னையில் உள்ள ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில், இந்த 2023 – 24 உற்பத்தி ஆண்டில், நேற்று வரை 1,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதனால், நாட்டிலேயே அதிக ரயில்பெட்டிகளை தயாரித்த சாதனையை ஐ.சி.எப்., படைத்துள்ளது. இதில், வந்தே பாரத் ரயில்கள், மின்சார ரயில்கள், நெடுந்தொலைவு மின்சார ரயில்கள், தானியங்கி ஆய்வு ரயில்கள், தானியங்கி விபத்து உதவி ரயில்கள் உள்ளிட்டவற்றுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இந்த சாதனையை சாதகமாக்கிய, ஐ.சி.எப்., ஊழியர்கள், அதிகாரிகளை, ஐ.சி.எப்., பொது மேலாளர் சுப்பாராவ் பாராட்டி உள்ளார்.
Share it if you like it