நீதித்துறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் இருந்து வருகிறது என தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
சுமார் 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில்கூறியிருப்பதாவது :- நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும் ஒரு குழு முயன்று வருகிறது. ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளால் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடந்து வருகிறது. அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றங்களுக்கு உள்ளேயும், ஊடகங்களின் வாயிலாகவும் நீதித்துறையை விமர்சித்து வருகின்றனர்.
சில குழுக்கள் தங்களது வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட முயற்சிப்பதாகவும், தங்களுக்கு சாதமான தீர்ப்பு வழங்கும்படி நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். நீதித்துறை பற்றிய தவறான தகவல்களை பரப்பி, நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்க முயற்சி நடந்து வருகிறது. நீதித்துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது.
நமது ஜனநாயக கட்டமைப்பை அச்சுறுத்துகின்றன. அமைதியாக இருப்பது அல்லது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கு அதிக சக்தியை அளிக்கும். மவுனம் காப்பதற்கான நேரம் இதுவல்ல. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கடித்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் ஆதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல், பிங்கி ஆனந்த், ஹிதேஷ் ஜெயின், உஜ்வாலா பவார், உதய் ஹொல்லா, உதய் ஹொல்லா உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறியிட்டிருப்பதாவது :- பிறரை அடித்து துன்புறுத்துவது தான் காங்கிரசின் பழைய கலாச்சாரம்.
5 தசாப்தங்களுக்கு முன்பே அவர்கள் “உறுதியான நீதித்துறைக்கு” அழைப்பு விடுத்தனர் – அவர்கள் வெட்கமின்றி தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை விரும்புகிறார்கள், ஆனால் தேசத்தின் மீதான எந்தவொரு அர்ப்பணிப்பிலிருந்தும் விலகுகிறார்கள்.
140 கோடி இந்தியர்கள் அவர்களை நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை.