தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்து, அதன் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்.12-ம் தேதி 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி, மணல் குவாரிகளின் மொத்த ஏஜென்ட்களான புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளின் வீடுகளில் நடத்திய சோதனையில்கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர்ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற விவரங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்ததும், வரும் ஏப்ரல் 25-ம்தேதி 5 மாவட்ட ஆட்சியர்களும் கட்டாயம் அமலாக்கத் துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை சம்மனுக்கு நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
தேர்தல் வேலைகள் நடைபெறுவதால் நேரில் ஆஜராக விலக்களிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் அதை ஏற்க நீதிபதிகள் மறுப்பு :- செய்தி.
இனியும் இந்த அரசு மணல் கடத்தல் விவகாரத்தில் வேஷம் போடுவது வெட்கக்கேடானது. ஆட்சியர்கள் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக இருப்பதை தெளிவுபடுத்துகிறது இந்த உத்தரவு. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது கேவலமானது.
இது ‘திராவிட மாடல்’ அல்ல ‘திருட்டு மாடல்’.