கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சங்கர் மச்சான் தொகுதிக்குட்பட்ட தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் சாலை ஓரத்தில் நின்று இருந்த கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துள்ளார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் எனக் கூறியுள்ளார் கிளி ஜோசியக்காரர்.
தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த வனத்துறையினர் கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ளனர்.
ஜோசியம் பார்ததற்கெல்லாம் கைது செய்யும் நிகழ்வை எல்லாம் திமுக ஆட்சியில் தான் பார்க்க முடியும். எந்த அளவிற்கு கருத்து சுதந்திரம் தமிழகத்தில் இருக்கு என்பதை இந்த நிகழ்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசியதாகக் கூறி போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின் போது, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “தேர்தலுக்கு முன், யூடியூப்பில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைவரையும் சிறையில் அடைக்க ஆரம்பித்தால், எத்தனை பேர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?” என்று கூறினர்.
முதல்வர் உள்ளிட்டோரை தரக்குறைவாகப் பேசியதாக துரைமுருகனை போலீஸார் கைது செய்தனர். எவ்வாறாயினும், பின்னர், யாரையும் தரக்குறைவான கருத்துக்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கியது.
ஸ்டாலினுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் கைது, கிளி ஜோசியம் பார்த்தால் கைது, ஸ்டாலினை விமர்சித்து பேசினால் கைது என தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஹிட்லர் போல் சர்வாதிகாரி ஆட்சியை நடத்தி வருகிறார். காவல் துறையினரை ஸ்டாலின் தனது கைப்பாவையாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஊடகம் மற்றும் மக்களின் கருத்து சுதந்திரம் கழுத்து நெறிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் திமுகவின் அதிகார திமிர் ஆட்சியை விமர்சித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.