தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, இனிய உகாதி வாழ்த்துக்கள் – அண்ணாமலை !

தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, இனிய உகாதி வாழ்த்துக்கள் – அண்ணாமலை !

Share it if you like it

இன்று உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.உகாதி அல்லது யுகாதி என்பது தெலுங்கு பேசும் ஆந்திரா மற்றும் கன்னடம் பேசும் கர்நாடக மக்களால் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படுகிறது. தெலுங்கு வருடப்பிறப்பு என்று அழைக்கப்படும் உகாதி பண்டிகை வசந்த நவராத்திரியின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மட்டுமல்ல பல இந்திய மாநிலங்களில் மொழி ரீதியான புத்தாண்டின் தொடக்கமாக அமைகிறது. அறுவடை பருவத்தின் தொடக்கமாக இந்த நாள் கருதப்படுகிறது. வளமான எதிர்காலத்தின் அடித்தளமாக யுகாதியை பொதுமக்கள் நம்புகின்றனர். இந்த நாளில் மக்கள் புதிய ஆடைகளை அணிந்து வீடுகளை அலங்கரித்து புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். வசந்த நவராத்திரியின் முதல் நாளில் வரும் இந்த புத்தாண்டு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பொய்லா போயிஷாக் என்றும் மகாராஷ்டிராவில் குடி பத்வா என்றும் ஆந்திரா, தெலங்கானா அல்லது கர்நாடகாவில் உகாதி அல்லது யுகாதி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

உகாதி பண்டிகை பிரபஞ்சத்தை பிரம்மா உருவாக்கிய நாளாக கருதப்படுவதால் புதிய முயற்சிகள், கட்டுமானப் பணிகள் தொடங்க, முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட மற்றும் சொத்துக்கள், நகைகளை வாங்குவதில் முக்கியத்துவம் பெறுகிறது.

உகாதி பண்டிகைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவில்,
உலகெங்குமுள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, தமிழக பாஜக சார்பாக, இனிய உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உகாதி பண்டிகை, பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழிக்கும், கலைக்கும், நம் மண்ணுக்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் நம் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களின் புத்தாண்டாக, வசந்த காலத்தின் தொடக்க நாளாக, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த இனிய உகாதி தினத்தில், அனைவர் வாழ்விலும், புகழும் செல்வமும் பெருகவும், மகிழ்ச்சி நிறையவும் புத்தாண்டில், இறைவன் அருளினால் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியும் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

உகாதி பண்டிகைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவில்,

பாரதிய நவ் வர்ஷ், உகாதி, குடி பத்வா, செட்டி சந்த், சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெவ்வேறு பெயர்களில் அறியப்படும் இந்த பண்டிகைகள் நமது சமுதாயத்தில் அமைதி, செழுமை மற்றும் நல்லிணக்கத்தை பேணி நமது நாட்டின் வளமான கலாசார பாரம்பரியத்தின் உள்ளார்ந்த ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன. இந்நாளில் இயற்கை அன்னைக்கும் நமது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம். இந்த பண்டிகைகள் அனைவருக்கும் மகிழ்ச்சி, முன்னேற்றம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்குவதோடு, நமது மகத்தான தேசத்தின் வளர்ச்சிக்கு இன்னும் அதிக ஆர்வத்துடன் பாடுபட நம்மை ஊக்குவிக்கட்டும்.” – ஆளுநர் ரவி


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *