தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடியது தெரியுமா.? தெரியாதா? ஏன் முதல்வர் ஸ்டாலின் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர் இந்து முன்னணி. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடிய தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?
தமிழக முதல்வரே பதில் தேவை.!
இந்துக்கள் என்றால் இளக்காரமா.?
திமுக தலைவராக உங்களின் வாழ்த்து தேவையில்லை.! ஆனால் இந்துக்களின் ஓட்டையும் வாங்கித்தானே முதல்வர் பதவி வந்தது. தமிழகத்தில் உள்ள இந்துக்களுக்கும் நீங்கள் தானே முதல்வர். அப்படியெனில் ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லும் நீங்கள் தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்லத்தானே வேண்டும்.. இந்துக்களின் மீது வன்மமா? இல்லை இந்துக்கள் என்றால் இளக்காரமா.?
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடியது தெரியுமா.? தெரியாதா? இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் போன்று இந்துக்களும் மத ஒற்றுமையோடு வாக்களித்தால் வாழ்த்து சொல்வீர்கள் தானே.! என்னதான் மட்டுப்படுத்தினாலும் இழிவுப்படுத்தினாலும் திமுகவிற்கே வாக்களிப்பார்கள் என்ற எண்ணம் தானே. மாறும் இந்த தேர்தலில் மாறும் இந்துக்கள் திமுகவை புறக்கணிப்பர்…