நாட்டை பிளவுபடுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசி வருகிறார்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பு , வளர்ச்சி, ஏழைகளின் நலனுக்காக நிற்கும் கட்சியை தேர்வு செய்ய வேண்டும் என மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸ் தனது பழைய பழக்கமான சமரச அரசியலை மீண்டும் செய்கிறது. இதனால் அக்கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பிறகு பா.ஜ.க மீது மக்களின் ஆதரவு அதிகரித்து உள்ளது.
தனி நபர் சட்டம் குறித்து காங்கிரஸ் பேசுகிறது. ஷரியா சட்டப்படி நமது நாடு செயல்பட முடியுமா என ராகுலிடம் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். நமது அரசியல்சாசனம் மதசார்பற்றது. மத அடிப்படையில் சட்டம் கொண்டு வர முடியாது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முத்தலாக் சிவில் சட்டத்தை ரத்து செய்துவிட்டு பொது சிவில் சட்டம் நோக்கி செல்கிறோம். ஆனால், நாட்டை பிளவுபடுத்தும் தனி நபர் சட்டம் குறித்து ராகுல் பேசுகிறார். இச்சட்டத்தை நாட்டில் அமல்படுத்த முடியாது. பிரதமர் ஆக மோடி 3வது முறையாக பதவியேற்பதை நாம் பார்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.