காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொதியில் போட்டியிடாமல், ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமேதி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி கூறியதாவது: அமேதி தொகுதியில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை.
இது வாக்குப்பதிவுக்கு முன்பே காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டதை காட்டுகிறது. அமேதி மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நபர் வயநாடு சென்றார். வயநாட்டை தனது குடும்பம் என ராகுல் கூறினார். இப்போது ரேபரேலியில் அவர் என்ன சொல்வார்? ரேபரேலி மக்களும் அவரை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவ்வாறு ஸ்ரிருதி இராணி கூறினார்.