விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 30 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப். 19-ம்தேதி பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூன்று அடுக்கு பாதுகாப்புடன் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. அப்போது,யுபிஎஸ்-ல் ஏற்பட்ட பழுதுகாரணமாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின் சாதனங்கள் இயங்கவில்லை. சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர், மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாட்ச் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பழுது சரி செய்யப்பட்டது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மின்கட்டணம். மின்கட்டணம் முந்தைய ஆண்டில் 1000, 1500 என செலுத்திய நிலையில் தற்போது 4000, 5000 என அதிகமாகி விட்டது. இவ்வாறு ஒருபுறமிருக்க சில நேரங்களில் மின்சாரமே இருப்பதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி கொடுத்து வாயாலேயே வடை சுடுவார்கள். தேர்தல் முடிந்துவிட்டால் மக்களை கண்டுக்காமல் குதூகலிக்க கொடைக்கானல் லண்டன் சென்று விடுவார்கள். இவ்வளவுதான் திராவிட மாடல்.