Share it if you like it
- இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் பரவல் இருந்து வருகிறது. இந்நிலையில் கரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூடுதலாக 30 லட்சம் டாலர்கள் நிதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
- மேலும் இந்த உதவியின் மூலம் இந்தியா கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சிகிச்சையும், மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு செய்திகளும் வழங்க முடியும். கரோனா நோயாளிகள் குறித்த ஆய்வையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- ஏற்கெனவே கடந்த 6-ம் தேதி 29 லட்சம்(21கோடி ரூபாய்) டாலர்கள் உதவி வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it