Share it if you like it
- மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் வீடு திரும்புவதற்காக ஒரு ரயிலைப் பிடிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஜல்னாவிலிருந்து கிட்டத்தட்ட 65 கி.மீ தூரத்தில் உள்ள அவுரங்காபாத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து ரயிலை பிடித்து மத்திய பிரதேசத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. நடந்து நடந்து களைத்துப்போன அவர்கள் அவுரங்காபாத்-நாந்தேட் ரெயில் பாதையில் ரெயில் தண்டவாளத்தில் படுத்து கொன்று ஓய்வெடுத்துள்ளனர். அதிகாலை 5.15 மணியளவில் நந்தேடில் இருந்து மன்மத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், தண்டவாளத்தில் உறங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரெயில் மோதியது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த தொழிலாளர்கள் ஜல்னாவில் உள்ள எஃகு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.
- மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ரயில் விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதால் மிகுந்த வேதனை அடைகிறேன். ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயலுடன் பேசியுள்ளார், அவர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Share it if you like it