அர்த்த சாஸ்திரம் உரைக்கும் அர்த்தமுள்ள அறிவுரைகள்..!

அர்த்த சாஸ்திரம் உரைக்கும் அர்த்தமுள்ள அறிவுரைகள்..!

Share it if you like it

  • ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் . 
  • வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப் படும்போதும் தெரிந்து கொள்ளலாம்.
  • ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
  • அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
  • நாம் வாழ்ந்து வரும் தெருவில் தேச பக்தியுடன் கூடிய தெய்வ பக்தியை போதிக்கும் ஆன்மீக சொற்பொழிவை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருப்பது நம்முடைய கடமையாகும்.
  •  நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
  • உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தால் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள். 15 வயது முதல் 25 வயதுக்குள் தேச பக்தியுடன் கூடிய தெய்வ பக்தியை புகட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
  • பல்வேறு தியாகங்களை செய்து அதில் உங்கள் குழந்தைகளை கலந்து கொள்ள வைக்க வேண்டும். கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
  •  கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும்   பயனற்றது. 
  • பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
  • ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, தர்ம காரியங்கள், இந்து தர்மம் பற்றிய மரபுகள், தகவல்கள், ஆன்மீக & ஜோதிட ரகசியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து அறிந்து கொண்டே இருக்க வேண்டும்.
  • யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டே சென்று விடுங்கள்.
  • எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
  • நம்முடைய சனாதன தர்மம் பற்றிய அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்.

Share it if you like it