கடந்த மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் 404 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக பொருளாதார ஆய்வு நிறுவனமான CMIE சர்வே தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2 மில்லியன் அதிகமாகும். இது குறித்து கருத்து தெரிவித்த CMIE நிர்வாக அதிகாரி மகேஷ் வியாஸ் ‘கடந்த நான்கு மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இது ஒரு ஆரோக்யமான விஷயமாகும். வேளாண்மை துறையில் 8.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஆனால் உற்பத்தி மற்றும் ஐ.டி துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. ஜவுளித்துறையில் 2.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது’ என தெரிவித்தார். நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவிவருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தநிலையில் இந்த சர்வே முடிவுகள் அவர்களுக்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளன.
இந்தியாவில் அதிகரித்த வேலைவாய்ப்பு..!
Share it if you like it
Share it if you like it