Share it if you like it
- 1988ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. அப்போது அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.
- அந்த ஆண்டு மே 11ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் ராணுவ சோதனை மையத்தில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த நாளை நினைவுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- அந்நாளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும் பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
- இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்தியா இரண்டு அணுகுண்டுகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். இதன்மூலம் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இணைந்த 6வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
Share it if you like it