Share it if you like it
மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆங்கிலம் தெரிந்து கொள்வதில் தவறில்லை, ஆனால் ஆங்கிலம் தெரிந்து கொள்வதற்கு முன், நீங்கள் உங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.தாய்மொழி உங்கள் ‘கண்பார்வை’ போன்றது, பிற மொழிகள் உங்கள் கண் கண்ணாடி போன்றது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும், ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Share it if you like it