Share it if you like it
சுய சார்பை நோக்கி……
- கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விளைபொருட்கள் வீணாவதை பற்றிய செய்திகள் பல வந்தன. மாடுகளிலிருந்து கறந்த பாலை விற்க முடியவில்லை என்று கால்வாயில் ஊற்றியது, வாழை தோப்புகளில் அதிக விளைச்சல் அழுகியது, மரங்களில் பறிக்கப்படும் பழங்கள் மரத்திலேயே காய்ந்தது, தோட்டங்களில் பூக்கள் விற்கப்படாமல் செடியிலேயே விடப்பட்டு காய்ந்து விட்டது போன்ற செய்திகள் பல வந்தன.
- இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் என்ன?
- விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை செய்கின்றனர். ஆனால் அறுவடை செய்த பொருட்களை பல பொருட்களாக மாற்றி வியாபாரம் செய்ய அவர்களுக்கு தெரிவதில்லை. படித்த இளைஞர்கள் இதற்கு முன் வரவேண்டும்.
- உதாரணத்திற்கு வாழைத்தோப்பு உள்ள இடத்தில் என்னவெல்லாம் செய்யலாம்…
- பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக குளிர்பதன வசதியுள்ள கிடங்கு கட்டுவது
- வாழை இலைகளை தேவையான அளவு வெட்டி முறையாக அடுக்கி ஓட்டல்கள் சிறிய பொட்டலங்களை வீடுகளுக்கு கொடுக்கலாம்
- மீதமுள்ள வாழை இலைகளை அங்கேயே கால்நடைகளுக்கு கொடுக்கலாம்
- இதனால் வாழை இலைகள் நகரங்களில் குப்பையாக சேர்வது தடுக்கப்படும்
- வாழை மட்டையை உரிய காலங்களில் எடுத்து அதிலிருந்து நார் உரித்து அந்த நாளில் இருந்து பல பொருட்களை தயாரித்தல்
- வாழை தண்டிலிருந்து சந்தைக்கு அனுப்புவது போக மீதமுள்ள தண்டுகளில் இருந்து உணவு பண்டங்களை தயாரித்தல்
- வாழை பூக்களிலிருந்து உணவு பண்டங்கள் மருந்து பொருட்கள் தயாரித்தல்
- வாழை பழம் தேவையானதை சந்தைக்கு அனுப்பி மீதம் உள்ள பொருட்களில் உணவு பொருட்கள் தயாரித்தல்
- இப்படி ஒரு விவசாய நிலத்தில் பல தொழில் செய்யலாம். இளைஞர்கள் இப்படி பலவிதமாக யோசித்து பொருட்களை தயாரித்து அந்த பொருட்களை இணையதளம் வழியாக விற்பதற்கான திட்டத்தையும் வகுத்தால் பொருட்களும் வீணாகாது வருமானம் அதிகமாகும்.
- முயற்சிப்போம்…சுயசார்பு நோக்கி முன்னேறுவோம்…!
Share it if you like it