தனியார் வங்கியான, எச்.டி.எப்.சி. சமீபத்தில், நிதி மோசடியை தடுப்பது தொடர்பான விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இணையதளம் உள்ளிட்ட வற்றின் வாயிலாக வங்கி கணக்கில் நடக்கும் மோசடியை தடுப்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி, வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.
அதில், ‘விஜில் ஆன்ட்டி’ என்ற பெயரில், முன்னெச்சரிக்கையாக இருக்கும் பெண் ஒருவரது படம் இடம்பெற்றுள்ளது. அந்த பெண், நெற்றியில் இருக்கும் பொட்டு, ‘ஸ்டாப்’ எனப்படும் நிறுத்துங்கள் என்பதை குறிக்கும் சின்னத்தை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எந்த ஹிந்து பெண், இதுபோன்ற பொட்டு வைப்பார்’ என, சிலர் குறிப்பிட்டு உள்ளனர். ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில், ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இந்த விளம்பரம் அமைந்துள்ளதாகவும்,இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.