இஸ்ரேல் – பாலஸ்தீனம் யுத்தம் தரும் பாடம் – பாரதத்திற்கு அக்னி பாத் திட்டம் கட்டாயமாக்கப் பட வேண்டும் !

இஸ்ரேல் – பாலஸ்தீனம் யுத்தம் தரும் பாடம் – பாரதத்திற்கு அக்னி பாத் திட்டம் கட்டாயமாக்கப் பட வேண்டும் !

Share it if you like it

இஸ்ரேல் மிகச்சிறிய நாடு .குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு. ஆனாலும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவருக்கும் ராணுவ பயிற்சி கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாக இஸ்ரேலின் குடிமக்களில் ராணுவ பயிற்சி பெறாத குடிமக்களே இல்லை என்ற சூழல். ஒரு குறிப்பிட்ட அளவு முழு ராணுவமாக இஸ்ரேல் எப்போதும் முழு நேர ராணுவ வீரர்களாக வைத்திருக்கும். அதே நேரத்தில் இன்று இருக்கும் தேசத்தின் குடிமக்கள் எல்லோரும் இராணுவத்தின் அடிப்படை பயிற்சி பெற்றவர்களே. தற்போது நடைபெறும் போர் சூழல் போல அசாதாரண சூழல் போல தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு வரும்போது ஒரே ஒரு அறிவிப்பில் ராணுவ பயிற்சி முடித்திருந்த பொதுமக்கள் அனைவரும் ராணுவ வீரர்களாக களம் இறங்குவார்கள். தற்போது இஸ்ரேலில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தாய் தந்தை மகன் மகள் பேரன் பேத்தி என்று மூன்று தலைமுறை கூட ஒரு குடும்பத்திலிருந்து தேசம் காக்கும் பணியில் களமிறங்குகிறார்கள். இது போன்ற வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு தான் தேசத்தை தேசத்தை எந்த இடர்பாட்டில் இருந்தும் பாதுகாக்க முடியும்.

இதுபோன்ற வலுவான பாதுகாப்பு கட்டமைப்பிற்கு உடல் அளவிலும் மனதளவிலும் வலுவான கட்டமைப்பு இருக்கும் இளைய தலைமுறை அவசியம். அந்த வலுவான இளைய தலைமுறையை கட்டமைக்க ராணுவ பயிற்சிகள் போர் பயிற்சிகள் கட்டாயம் தேவை. இந்த ராணுவ பயிற்சிகள் பயிற்சிகளைக் கடந்து மேம்பட்ட ராணுவ வீரர்களாக சமூகத்தில் வலம் வருவதற்கு அவர்களுக்கு அடிப்படையான அடிப்படையான பக்குவம் புரிதல் தேவை. அவற்றை அவர்களிடம் வளர்க்கத் தான் கல்வி கடந்து விளையாட்டு துறைகளிலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு என்பது உடலை மட்டும் உடலை பயிற்றுவிப்பதல்ல. அது வெற்றி தோல்விகளை சமமாக எடுத்துக் கொள்வதும் இறுதிவரை விடா முயற்சியோடு வெற்றி பெற போராடும் போர்க்குணத்தையும் பயிற்றுவிக்க வல்ல மனவளக்கலை. எந்த ஒரு தேசம் விளையாட்டில் முன்னணியில் இருக்கிறதோ அந்த தேசத்தின் ராணுவமும் பாதுகாப்பு கட்டமைப்புகளும் மிகவும் வலுவானதாக இருக்கும் . அதே நேரத்தில் விளையாட்டில் தலை சிறந்து விளங்கும் தேசத்தின் குடிமக்களிடம் போதை உள்ளிட்ட தீய வழக்கங்களின் பயன்பாடு அதன் தாக்கங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். இதன் மூலம் சமூக குற்றங்களும் கலாச்சார சீரழிவுகளும் குறைந்த அளவிலேயே இருக்கும். அந்த வகையில் விளையாட்டுப் போட்டிகளில் உடல் ரீதியாக பக்குவப்படுவதும் மனரீதியாக பண்பட்டு ராணுவ பயிற்சி உள்ளிட்ட போர் பயிற்சிகளில் பங்கேற்பதும் மேம்பட்ட ராணுவ பயிற்சி பெற்ற பாதுகாப்புக் கட்டமைப்புகள் கொண்ட ஒரு சமூகமாக தேசம் உருமாறும். அது உலகில் வெல்ல முடியாத சக்தியாக மாறும் .அதற்கு சமகால சாட்சியம் இஸ்ரேல்.

உலகின் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலால் இது போன்ற ஒரு வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி தனது தேசத்தை உலகில் வெல்ல முடியாத சக்தியாக மாற்றி அமைக்க முடியும் எனில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மிகப்பெரிய மனித வளம் கொண்ட நாடாக இருக்கும் பாரதத்தால் ஏன் முடியாது ? என்ற கோணத்தில் உதித்தது தான் அக்னி பாத் ராணுவத் திட்டம். ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தேசமும் கைதட்டி வரவேற்க வேண்டிய இந்த அக்னிப்பாத் திட்டத்தை கூட அரசியல் சாயம் பூசி மதச் சாயம் பூசி விமர்சிப்பார்கள் எனில் தேசத்தின் உள்ளே உள்நாட்டு விரோதமும் தேச துரோகமும் எவ்வளவு வேரூன்றி இருக்கிறது? என்பதை யோசித்துப் பாருங்கள்.

இது போன்ற ஒரு திட்டத்தை கூட வரவிடாமல் தடுக்கவும் முடக்கவும் இங்கு பல குழுக்கள் தயாராக இருக்கிறார்கள் . ஆனால் அதே குழுக்கள் ஹேப்பி ஸ்ட்ரீட் காதலர் தினம் உள்ளிட்ட கலாச்சார சீரழிவுகளுக்கு தனிமனித சுதந்திரம் சுதந்திரம் என்ற பெயரில் ஆதரவு கொடுக்கிறார்கள். எனில் இவர்களின் நோக்கம் ஒன்றுதான். இங்கிருக்கும் இளைய தலைமுறையை திரைப்பட மோகம் போதை வன்முறை ஆபாசம் கலாச்சார சீரழிவு என்று ஒட்டுமொத்தமாக அவர்களை உடலாலும் மனதாலும் சீரழிக்க வேண்டும் . அதன் மூலம் தற்காப்பு பாதுகாப்பு இல்லாத ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டும் . அதன் மூலம் இந்த தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகளை முழுவதுமாக சிதைக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த தேசத்திற்கு அச்சுறுத்தல் என்று வரும்போது அதை எதிர்கொள்ளும் வல்லமை இந்த தேசத்திற்கு இல்லாமல் அதன் அடிப்படை பாதுகாப்பு கட்டமைப்பையே சிதைக்க வேண்டும் என்ற கெடுமதி மட்டுமே.

சுற்றிலும் பகை நாடுகள் இருக்கும் போதும் இஸ்ரேல் எவ்வளவு தன்னம்பிக்கையோடு துணிவோடு கம்பீரமாக இருக்கிறது அதன் பின்னணி அதன் வலுவான கட்டமைப்பு கொடுக்கும் தன்னம்பிக்கை மட்டுமே இன்று ஒட்டுமொத்த அரபு நாடுகளும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தினாலும் சிறிதும் அச்சமின்றி அத்தனையும் எதிர்த்து நிற்கும் இஸ்ரேலின் துணிவின் பின்னணியில் இருப்பது அவர்களின் வலுவான பாதுகாப்பு கட்டமைப்புகளும் சமரசம் இல்லாத தேசிய உணர்வும் தான் இது போல ஒரு அர்ப்பணிப்பான தேசிய உணர்வும் கட்டாய ராணுவ பயிற்சியும் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பும்தான் எதிர்காலத்தில் பாரதம் போன்ற பெரிய தேசத்தை பாதுகாக்க முடியும். இன்றைய இஸ்ரேலின் சூழலை அறிவார்ந்த யோசித்துப் பார்ப்பவர்களுக்கு பார்ப்பவர்களுக்கு பாரதத்தின் அக்னிப்பா திட்டம் எவ்வளவு அத்தியாவசியமானது என்ற உண்மை சொல்லாமலே புரியும்.

இந்தியா சீனா என்றால் சீனா நிலைப்பாடு. இந்தியா பாகிஸ்தான் என்றால் பாகிஸ்தான் நிலைப்பாடு என்று வெளிப்படையாக பகைநாட்டு ராணுவத்தை ஆதரிப்பவர்கள். இந்த தேசம் ராணுவ ரீதியாக பாதுகாப்பு ரீதியாக பலப்படுவதையும் தேசத்தின் குடிமக்கள் உடல் ரீதியாக மனுரீதியாக பக்குவப்படுவதையும் ராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் என்ற வகையில் ஒரு பலமான தற்காப்பு சமூகமாக உருவாவதையும் ஒருகாலும் ஆதரிக்க மாட்டார்கள். அதை உள்ளிருந்து சிதைக்க வேண்டும் என்ற கெடுமதி கொண்டு மட்டுமே அக்னிப்பாத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். இந்த அக்னிப்பா திட்டத்தை ஒன்று இந்த தேசத்தை உள்ளிருந்து சிதைக்க நினைக்கும் கரையான்களாக இருக்க வேண்டும். அல்லது வெளியில் இருந்து இந்த தேசத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் உள்நாட்டு கைக்கூலிகளாக இருக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் அக்னி பார்த்து திட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்த தேசத்தின் விரோதிகளே. இந்த நாட்டின் நலனுக்கும் மக்களுக்கும் கெடுதல் நினைக்கும் துரோகிகளே. இவர்களைப் போன்ற விஷக்கிருமிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் இந்த தேசத்திலிருந்து அப்புறப்படுத்தும் போதுதான் அக்னி பாத் போன்ற திட்டங்கள் முழு வெற்றி அடைய முடியும். எதிர்காலத்தில் இஸ்ரேலை போல ஒரு வளமான ராணுவ கட்டமைப்பும் பாதுகாப்பு கட்டமைப்புகளும் கொண்ட தேசமாக பாரதம் மிளிர முடியும்.


Share it if you like it