வலுவான இந்தியா வளமான ஆன்மிகம் தேவர் கனவு

வலுவான இந்தியா வளமான ஆன்மிகம் தேவர் கனவு

Share it if you like it

காலம் சில சத்தியவான்களை, பரிசுத்தமான தேசாபிமானிகளை, அப்பழுக்கற்ற தேசமகான்களை, சனாதான சீலர்களை அவர்கள் வாழும் காலம் ஒதுக்கிவைக்கும்.ஆனால் பின்னாளில் அவர்கள்தான் வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட பெரும் மோசடிக்கும், அன்று அதர்மக்காரர்கள் செய்த எல்லா சூதுக்களுக்கும், வஞ்சக திட்டங்களுக்கும் சாட்சிகளாய் நிற்பார்கள்.

அவர்களை படிக்கபடிக்கத்தான் இத்தேசத்தில் எப்படிபட்ட வஞ்சகங்கள் நிகழ்ந்தன என்பதும், தேசம் அந்நியராலும் அவர்கள் அடிவருடிகளாலும் எப்படியெல்லாம் மோசடிக்குள்ளாக்கபட்டது என்பதும், சனாதான தர்மத்தையும் இந்த அருமையான பாரதத்தையும் ஒழிக்க நிகழ்ந்த சதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளமுடியும்.சாவர்க்கர், வ.உ.சி, பாரதி,நேதாஜி, வ.வே.சு அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி என வெகுசிலர் அந்த கொடும் காலத்தின் சாட்சியாய் நிற்கின்றார்கள்.

வாழும்பொழுது இவர்கள் ஒதுக்கபட்டு, விரட்டபட்டு பாராரிகளாக, ஒடுகபட்டவர்களாக, அந்நிய ஆட்சியில் தாழ்த்தபட்டவர்களாக அனாதைகளாக செத்தாலும், இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு காலத்தின் வாசலில் மிகபெரிய இடம் கொடுத்திருக்கின்றது.அவர்கள்தான் அன்றுநடந்த பல மோசடிகளை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

இன்றும் இத்தேசத்துக்கு எதுதேவை, எது தேவையில்லை? எக்குரல் எழவேண்டும், எக்குரல் அடங்க வேண்டும்? இந்தியாவின் தாத்பரியமும் மகோன்னதமும் என்ன? எதெல்லாம் இங்கு மீட்கபடவேண்டும் என ஒளிகொடுத்து வழிகாட்டி நிற்கின்றார்கள்.அன்று ஒதுக்கபட்ட இந்த மூலகற்கள்தான் வருங்கால இந்தியாவுக்கு அஸ்திபாரமாய் நிற்கின்றன‌

அந்த வரிசையில் வருபவர்தான் தென்னாட்டு நேதாஜி, பாண்டிநாட்டு சிங்கம் பசும்பொன் தேவர் அவர்கள்
அந்த தெற்கத்தி மகான் இன்றைய வலுவான இந்தியாவினை, தன் மரபிலும் கலாச்சாரத்திலும் மேலெழும் சக்திவாய்ந்த இந்தியாவினை 1940களிலே கனவு கண்டான்

அந்த மனிதர் முரண்பாடுகளின் உச்சமாக இங்கு செதுக்கபட்டார், சாதி வெறியன் என்றும், அடிப்படைவாதி என்றும் முத்திரை குத்தபட்டு தூற்றபட்டார்.ஆனால் பொய் ஊரை சுற்றிவிட்டு ஒதுங்கிவிட்ட நிலையில் உண்மைகள் மெல்ல வெளிவரும்பொழுது அந்தமனிதன் அதிசய பிறப்பு , ஒரு வரம் எனும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தாயிற்று.

இன்று அவரை புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமம் அல்ல, சிரமமே அல்ல‌

இங்கு நடக்கும் தேசவிரோத குதர்க்க ஆட்டமும், இந்துக்களுக்கு நாடும் கிடையாது, உரிமையும் கிடையாது, அவர்கள் ஆலயமே அவர்களுக்கு சொந்தமில்லை, ஆலயம் அழியவேண்டும், சனாதானம் சரியவேண்டும், என பல சக்திகள் செய்யும் சதிதான் இங்கு தேவர் எவ்வளவு முக்கியமான தேசாபிமானி என்பதை சொல்ல வைக்கின்றது.

தேவர் கண்ட “வலுவான இந்தியா, வளமான ஆன்மீகம் “என்பதை உணர்த்தும்.

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் மிக்பெரிய அடையாளம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
அந்த மிக சிறிய கிராமத்தில் பிறந்த அவர் இளமையிலே தாயினை இழந்தார், ஆனால் கல்வியிலும் நாட்டுபற்றிலும் முருபபெருமானின் கைபிடித்தும் வளர்ந்தார்

அதிகம் படித்ததில்லை தேவர், பத்தாம் வகுப்புவரைதான் படித்திருந்தார் ஆனாலு அற்புதமான பிறவி ஞானமும் ஆங்கில புலமையும் அவருக்கு இயல்பாய் வந்தது.அதைவிட அழகானது அவரின் தமிழ்.ஆம் அவரின் பேச்சின் அழகும், வன்மையும், நுட்பமும், அருவியென கொட்டும் தமிழும் அவர் ஒரு தனிபிறப்பு என்பதை சொன்னது

நாயன்மாரின் பக்தியும் , திருவாசகத்தின் வரிகளும், பாண்டியரின் வீரமும் கலந்த மொத்த உருவாக அவர் வலம் வந்தார்.பெரும் நிலக்கிழாரான அவருக்கு ஆன்மீகமும் நாட்டுபற்றும் இருகண்களாயின.மிக சிறுவயதிலே பொதுவாழ்க்கைக்கு வந்தார். அந்த உணர்ச்சிகரமான பேச்சு அவருக்கு மிகபெரும் பலம், முதல் பேச்சே சாயல்குடியில் விவேகானந்தரை பற்றி 3 மணிநேரம் பேசிய பேச்சாய் இருந்தது.பேச்சுகலை எப்படி இருக்க்கவேண்டும் என சொல்லிகொடுத்ததே அவர்தான்.

ஆன்மீகம் அரசியலும் உலக அரசியலும் இயல்பாய் வந்து அவர் நாவில் முழங்கின , மிக முக்கியமானது முருகபெருமானின் பாடல்களும் சங்க பாடல்களும்.

அவருக்கு 25 வயதாகும் பொழுது அவரின் பொதுவாழ்வு ஆரம்பிக்கின்றது , அதுவரை டி.எம் நாயர் போன்றோர் தனியாக போராடிகொண்டிருந்த குற்றபரம்பரை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை மிக தீவிரமாக முன்னெடுக்கின்றார் தேவர். அச்சட்டம் மகா கொடுமையானது, இந்தியா முழுக்க இருந்தெனினும் மதுரை பக்கம் அதிகமாய் இருந்தது.

அச்சட்டம் பற்றி இன்னொருநாள் பார்க்கலாம், அச்சட்டத்தின் விளைவுகளில் ஒன்று குற்றபரம்பரை என சொல்லபடும் குடும்பம் எப்பொழுதும் காவலர் கண்முன்னே இருத்தல் வேண்டும், ஒருவகையான அடிமை நிலை, வேலை வெட்டி எல்லாம் இரண்டாம் பட்சம்.அச்சட்டம் அன்று நீக்கபடவில்லை எனினும் தேவர் கொடுத்த அழுத்தமே பின்னாளைய வெற்றிக்கு காரணம்
சமூக சீர்திருத்ததை ஒரு பிராமணர் முன்னெடுத்தார் அவர் பெயர் வைத்தியநாத அய்யர்.

ஆம் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோரும் நுழையவேண்டும் என போராடியவர் அவர்தான், ஆனால் அய்யர் அல்லவா பெரும் மக்கள் சக்தி இல்லை, இந்த இடத்தில் தன் படையோடு வந்த தேவர் அய்யருக்கு பலமாக நின்று அம்மக்களை உள்ளே செல்ல அனுமதித்தார், பெரும் சாதனை அது.

தாழ்த்தபட்டோருக்கான உரிமையினை அவரே பெற்று கொடுத்தார், (அந்த தேவரைத்தான் பின்னாளில் தாழ்த்தபட்டோர் எதிரி என முத்திரை குத்தியது மிக பெரிய அநீதி அது தொழிலாளர்களுக்கான தமிழக தலைவராக விளங்கியவரும் அவரே, வ.உ.சிக்கு பின் அந்த இடம் அவருக்குத்தான் வந்தது.

பசுமலை ஆலை தொழிலாளர் கூட்டமைப்பு முதல் டிவிஎஸ் தொழிலாளர் கூட்டமைப்பு வரை தேவரே நடத்தி அவர்களுக்கான உரிமையினை பெற்றும் கொடுத்தார்.முழு தேசியவாதியான நேதாஜியுடன் தயக்கமே இல்லாமல் வெளிவந்தார் தேவர்.

நேதாஜியினை மதுரைக்கு அழைத்து வந்து பெரும் மாநாடு நடத்தியதெல்லாம் தேவரின் முத்திரைகளில் ஒன்று
நேதாஜிக்கு தமிழகம் முழு பலமாய் இருக்க தேவர் முதல் காரணம்.அதன் பின் உலக யுத்தம் தொடங்கியது, நிலமையினை கண்காணித்த வெள்ளை அரசு தேவரை சிறையில் தள்ளியது, உலகமும் இந்தியாவும் மொத்தமாக குழம்பிய காலத்தில் நேதாஜி பர்மாவில் இருந்து போராடிய காலத்தில் தேவர் சிறையிடபட்டார்.

1946ல் விடுதலையானார் தேவர், அப்பொழுது நேதாஜி இல்லை மாறாக அப்பொழுது நடந்த சென்னை மாகாண தேர்தலில் அமோக வெற்றிபெற்றார், அதன் பின்பே குற்றபரம்பரை சட்டம் முழுவதுமாக ஒழிந்தது
1949ல் தீவிர அரசியலுக்கு வந்தார் தேவர்.சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் சில அரசியல் கட்சிகளின் தேசவிரோத செயல்கள் சிலவற்றை துணிச்சலாக பேசியவர் தேவர்,அழிச்சாட்டிய கும்பலையும் ஒருசேர கண்டித்தவர் தேவர். அதில் நாட்டுபற்றும் மத அபிமானமும் கலந்திருந்தது . தேவரின் சொற்படி கேட்டிருந்தால் காஷ்மீர் சிக்கல் இந்த அளவு வந்திருக்காது, சீனாவுடனான நிலை இந்த அளவு மோசமாயிராது, நாட்டுபற்றில் அவர் சொன்ன கருத்துக்கள் எதுவும் சில சுயநல காதுகளுக்கு எட்டவில்லை.

பாராளுமன்றத்தில் பைத்தியகார சர்வாதிகார முடிவினை எதிர்த்து முதலில் முழங்கியது அவர்தான். எதிர்த்து முழங்கி நாட்டுபற்றில் பாராளுமன்றம் கண்ட முதல் குரல், காஷ்மீர் பற்றியும் சீனா பற்றியும் பாகிஸ்தான் பற்றியும் பேசிய முதல் குரல் அவர்தான்.எதிர்த்து முழங்கி நாட்டுபற்றில் பாராளுமன்றம் கண்ட முதல் குரல், காஷ்மீர் பற்றியும் சீனா பற்றியும் பாகிஸ்தான் பற்றியும் பேசிய முதல் குரல் அவர்தான்.இந்நிலையில்தான் முதுகுளத்தூர் கலவரம் நிகழ்ந்தது, இம்மானுவேல் சேகரன் கொலை எல்லாம் நிகழ்ந்த கொடும் காலங்கள் அவை, தேவரை முதல் குற்றவாளியாக்கினார்கள்.

மதுரை ஆலயத்தில்  நுழைய போராடிய, தன் நிலங்களை எல்லாம் பிரித்து கொடுத்த, தொழிலாளராய் இருந்த தொழிற்சாலைகளிலெல்லாம் அவர்களுக்கு உரிமை பெற்றுகொடுத்த தேவர் அந்த கொலையில் குற்றம்சாட்டபட்டதில் அரசியலும் இருந்தது. எதிரி என்றும் இன்னும் பல காரணங்களுக்காக அந்த கைது நடந்தது, அவர் தீவிர இந்துமதவாதி என்பதும் கூடுதல் காரணம். ஆனால் ஆதாரமே இல்லை என விடுதலை செய்யபட்டார் தேவர்.

தேவரும் தேசாபிமானியான‌ ராஜாஜிக்காக ஆதரவு தெரிவித்தார்.நாட்டுபற்றிலும் ஆன்மீகத்திலும் விவேகானந்தார் போல் திகழ்ந்தார், 1963ல் இதே அக்டோபர் 30ல் அவரின் அவதார தினத்திலே மறைந்தார் தேவரின் வாழ்வினை கவனித்தால் பல நல்ல விஷயமும் தெரியும்.

அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி அதைவிட அற்புதமான முருக பக்தர். முதன் முதலில் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் முழங்கிய தமிழன் அவர். இம்சைகளின் முழக்கமெல்லாம் அந்த தேசியவாதி முன் நிற்கமுடியாது.அவரின் நாட்டுபற்று வணங்கதக்கது அஹிம்சை மற்றும் ஆயுதவழி என இரண்டுக்குமே முன்னால் நின்ற பெருமகன் அவர்,மத பாகுபாடு அவர் கண்டதில்லை,சாதி அபிமானம் அவருக்கு இருந்ததில்லை இருந்திருந்தால் தாழ்த்தபட்டோர் ஆலய நுழைவு, தொழிலாளர் சிக்கல் போராட்டம் செய்திருக்கமாட்டார் மற்றும் தன் சொந்த நிலத்தை எல்லாம் கொடுத்திருக்க மாட்டார்.

அவரின் வாழ்வு சொல்வது ஒன்றே ஒன்றுதான்.அவரின் அர்பணிப்பான நாட்டுபற்றுக்கும் மகா சுத்தமான இந்து மத அபிமானத்துக்குமே அவர் குறிவைக்கபட்டார்.சில மர்ம நடவடிக்கைகளை கேள்வி கேட்டதால் காங்கிரஸும், பிரிவினை மற்றும் நாத்திக இம்சைகளை கண்டித்ததாலும் ஒரு மாதிரி சர்ச்சை பிம்பம் அவர்மேல் சூட்டபட்டது, வாக்கு அரசியல்,பிரிவினை அரசியல் என ஏகபட்ட சூழ்ச்சி அதில் உண்டு.ஆம் வஞ்சக திட்டமே அவர்மேல் பழியாய் சுமத்தபட்டது, ஒரு தேசாபிமானியை மத அபிமானியாய் முடக்க வேண்டும் என்ற திட்டத்துடனே சுமத்தபட்டது.ஆனால் முருகபெருமான் தேவரோடே இருந்தார்.ஆம், தேவரின் வீழ்ச்சிக்கு பின் சில அரசியல் கட்சிகள் வீழ ஆரம்பித்தபொழுதுதான் தன் அஸ்திவாரத்தையே இழந்ததை சில அரசியல் கட்சிகள் உணர்ந்தது.

ஆம் இன்னொரு முருகபெருமானின் பக்தனான ராமசந்திரன் அந்த திண்டுக்கல் இடைதேர்தலில் மாய தேவர் என்பவரை முன்னிறுத்தி மாயவேலைகள் செய்து வென்றபொழுது தேவரின் மகத்துவம் புரிந்தது.ஆளாளுக்கு தேவரின் சமாதி நோக்கி ஓடினார்கள், மண்டியிட்டார்கள்.ஆம் தேவரின் தேசபற்றும் மதஅபிமானமும் மகா உண்மையாய் இருந்திருக்கின்றது, இன்றும் தமிழக அரசியலில் முக்கிய இடம் வகிப்பது அவர் உருவாக்கி வைத்த அஸ்திவாரமே,காலம் கடந்து உணரபட்டிருக்கின்றார் அவர், இன்றும் பாருங்கள் அவரின் அடிப்பொடிகள் தேசவிரோதம் பேசாது, மத வெறுப்பு பேசாது, இந்துமதத்தை கண் என காத்து நிற்கும்.ஆக அன்றே மிக சரியான பாதை கண்டிருக்கின்றார் பசும்பொன் சிங்கம்.

வெளுத்து விட்ட சில கட்சிகள் சாயம்,பழனிக்கும் காவடி தூக்கும் இம்சைகள், பிரிவினையும் இந்துமத வெறுப்பும் கக்கும் போராளிகள் என இன்றைய காட்சிகளை காணுங்கள் தேவரின் தனித்துவம் புரியும் .இன்று நிச்சயம் அம்மனிதனே வென்றிருக்கின்றான், நாடும் தமிழகமும் அவன் கண்ட பாதையிலேதான் நடைபோடுகின்றன, அவரின் மாபெரும் வெற்றி இது,அதை எங்கும் அழுத்தமாக சொல்லலாம், சந்தேகமில்லை. அம்மகான் கண்ட பாரதம் இதுதான்.

அம்மனிதன் கடைசிவரை உண்மையான முருக பெருமான் அடியானாய் வாழ்ந்தான் இறந்தான்,
வாக்குக்காகவும் பதவிக்காகவும் தன்நிலை தாழ்த்திகொண்டவன் அல்ல. அவன் தூய இந்துவாய் வாழ்ந்தான், அதுதான் அவனை வழிநடத்தியது, எல்லா சிக்கலில் இருந்தும் காத்தது.

அவரை சரித்தால் இங்கு இந்துமதம் சரியும், சாதிய சிக்கல் குழப்பம் வரும் என பல கணக்குகளில் திட்டமிட்டுத்தான் கனைகளை பாய்ச்சினார்கள், ஆனால் ஒரு சக்தி அம்மனிதரை காத்து நின்றது, இன்றும் என்றும் அவனுக்கோர் தனி இடம் கொடுத்திருப்பதும் அந்த முருகபெருமானே.

தான் வாழ்ந்த வரையில் வருடாவருடம் ஒரு சகோதரனாய் வாஞ்சியின் விதவை மனைவிக்கு வாஞ்சிநாதன் நினைவுநாளில் பணமும் வெள்ளை சேலையும் தட்டில் வைத்து கொடுத்து அவள் காலில் விழுந்து வணங்கிய தேவரின் குணம் கண்ணீர்சிந்த வைக்கும் நினைவுகள்

வடக்கன்குள கிறிஸ்தவ ஆலய சாதி சண்டையில் அங்கு தலையிட்டு அமைதி ஏற்பட பாடுபட்ட தேவரின் அந்த உண்மையான சாதி ஒழிப்பு எக்காலமும் நினைவில் நிற்பது.

தூய இந்து என்பதற்காகவும் அப்பழுக்கற்ற நாட்டுபற்றாளன் என்பதற்காகவுமே அம்மனிதன் குறிவைத்து தாக்கபட்டான் விரட்டபட்டான் பல சர்ச்சை பெயர்கள் சூட்டபட்டான் என்பதை தவிர வரலாற்றில் ஒன்றுமில்லை..

திருநீறு பூசிய அந்த கம்பீர முகமும், அந்த மகான் காட்டிய யோக நிலையும் ஒரு பரிபூரண இந்துவாக அவன் காட்டிய பெருவழியும் ஒரு காலமும் மறக்கமுடியாதது, அந்த வழிதான் இன்று தமிழகத்துக்கு அவசியம், மிக அவசியம்.

காமராஜர் கேட்க தவறியதையெல்லாம் தேவர் கேட்டார் முழங்கினார் என்பதுதான் கவனிக்கதக்கது.இதையெல்லாம் சிந்தித்தால் காமராஜருக்கும் தேவருக்குமான மோதலின் தொடக்கபுள்ளியும், முதுகுளத்தூர் கலவரமும் இன்னும் பல சர்ச்சைகளின் உண்மை முகமும் தெரியும்.

அந்த அப்பழுக்கற்ற தேசியவாதிக்கு, மத நல்லிணக்கம் பேணிய மாமனிதனுக்கு, சாதிகளை கடந்து எல்லோரையும் அரவணைத்த நல்லவருக்கு, தென்னாட்டு வீரதுறவிக்கு இறுதிவரை பிரம்மச்சாரி கோலம் பூண்டு மகா சன்னியாசனான முருகபெருமானின் அடியவராய் வாழ்ந்து சென்ற அந்த மகானுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..

“பாகிஸ்தான் கேட்டவனும் முட்டாள், அதை கொடுத்தவன் அவனை விட முட்டாள்” என மிக தீர்க்கதரிசமான உண்மையினை கம்பீரமாக சொன்ன அந்த தெய்வ திருமகனுக்கு எத்தனை குருபூஜைகள் நடத்தினாலும் தகும்.
தேசியம் தெய்வீகமும் இந்த நாட்டின் கண்கள் என காத்து நின்ற தென்னகத்து வீரசிவாஜி அப்பெருமகன், அவனை தொழ தொழத்தான் இங்கு தேசியமும் தெய்வீகமும் மலரும்.

ஆம், அந்த ஞானதிருமகனை வீரபெருமகனை தமிழரின் தனிபெரும் தலைமகனை வணங்காமல் அந்த மகானின் ஆசியில்லாமல் இங்கு தேசியமில்லை இந்துமதம் இல்லை

தமிழகம் அந்த தெய்வமகனை வணங்கட்டும், நலம்பெறட்டும்

நாட்டு பற்றுடன், தேசத்தின் சிறு மண் துகளையும் விட்டு கொடுக்காத, லஞ்சம்,ஊழல்,நாட்டை காட்டி கொடுக்கும் ஈன பிறவிகளை, சுயநல பேய்களை,சாதி,மத அரசியல் செய்யும் சாக்கடை புழுக்களை எதிர்த்து நிற்க எழும் இளம் சிங்கங்கள் அந்த பெருமகனின் ஆசியினை பெறட்டும்,

அந்த ஆசியில் தேவர் கண்ட கனவெல்லாம் இங்கு நனவாகட்டும், தேசியமும் தெய்வீகமும் உணவும் சுவாசமுமாக தமிழரில் கலக்கட்டும்.


-ஸ்டான்லிராஜன்


Share it if you like it