ஆதார் எண்ணோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வி.சி.க கடும் எதிர்ப்பு..!

ஆதார் எண்ணோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வி.சி.க கடும் எதிர்ப்பு..!

Share it if you like it

ஆதார் எண்ணோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வி.சி.க கடும் எதிர்ப்பு.

ஏழை, எளிய, மக்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள், சட்டங்கள், அனைத்தையும் குறை கூறி தமிழக மக்களிடம் குழப்பத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் கட்சி தலைவர்களில் ஒருவராக வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளார் என்பது அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஜி.எஸ்.டி-க்கு எதிர்ப்பு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு, மும்மொழி கல்விகொள்கைக்கு எதிர்ப்பு, என மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை இன்று வரை மிக கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், ஆதார் எண்ணோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வி.சி.க கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

  • கள்ள ஓட்டு போடும் நபர்களை கட்டுப்படுத்த.
  • நேர்மையான முறையில் ஓட்டு பதிவு நடைபெற.
  • ஆள்மாறட்டத்தை தடுக்க.
  • பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி இந்திய அரசியலில் ஈடுபடாமல் தடுக்க.

என்று பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு, பல்வேறு வல்லூநர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இச்சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்தால். வாக்களிக்காத சிறுபான்மையினரை வாக்களர் பட்டியலில் இருந்து நீக்க தான் இந்த திட்டம் என திருமாளவன் கூறி இருப்பதன் மூலம் மீண்டும் அவரது அழுக்கு எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதாக சமூக வலைத்தளவாசிகள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். எதன் அடிப்படையில் இவ்வாறு? எல்லாம் திருமாவளவன் பேசுகிறார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it