``பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி கொள்கைரீதியாக ஆதரிக்கிறது என அக்கட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி உரையாற்றும் போது இவ்வாறு பேசினார் : பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும். பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் விதமாக இஸ்லாமியர்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என பேசியிருந்தார். இப்படியான பரபரப்பான சூழலில், கொள்கைரீதியாக பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருக்கிறது.
இது குறித்து, ஆம் ஆத்மியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக், “பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி கொள்கைரீதியாக ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 2019-ல் ஜம்மு- காஷ்மீரில் பிரிவு 370-ஐ பா.ஜ.க அரசு நீக்கியபோது பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், கெஜ்ரிவால் பா.ஜ.க-வின் முடிவை சரியென்று ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.