ஆபாச பேச்சாளருக்கு ஜாமீன் கேட்டுப் போய் மூக்குடைபட்ட தி.மு.க. வழக்கறிஞர்!

ஆபாச பேச்சாளருக்கு ஜாமீன் கேட்டுப் போய் மூக்குடைபட்ட தி.மு.க. வழக்கறிஞர்!

Share it if you like it

தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, “மூத்த குடிமகன் போலவை பேசியிருக்கிறார். முதலில் முழு வீடியோவையும் பார்த்துவிட்டு வந்து ஜாமீன் கேளுங்கள்” என்று கடிந்து கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளர்களில் ஒருவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசுவதில் வல்லவர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய விவகாரத்தில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 16-ம் தேதி கொடுங்கையூரில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போதும், தமிழக கவர்னர் ரவி பற்றியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பற்றியும், மிகவும் ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியிருந்தார். இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், கூட்டத்தினரை கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோவை தான் பார்த்ததாகக் கூறிய நீதிபதி, அதை முழுமையாக பார்த்துவிட்டு வரும்படி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மனுதாரர் 65 வயதான மூத்த குடிமகன் என்பதால் அவருடைய வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு மூத்த குடிமகன் இவ்வாறு பேசலாமா என்றும், மூத்த குடிமகன் போல் அவர் நடந்து கொள்ளவில்லை என்றும் கூறி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.


Share it if you like it