லாவண்யா மரணம்: நீதி கேட்கும் காங். நிர்வாகி! நிர்வாகத்துக்கு முட்டுக்கொடுக்கும் மூத்த தலைவர்..!

லாவண்யா மரணம்: நீதி கேட்கும் காங். நிர்வாகி! நிர்வாகத்துக்கு முட்டுக்கொடுக்கும் மூத்த தலைவர்..!

Share it if you like it

கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்து, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியிருக்கும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸோ, பள்ளி நிர்வாகத்திற்கு முட்டுக் கொடுத்திருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையாம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம். இவரது மகள் லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்திருக்கும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். நன்றாகப் படிக்கும் இந்த மாணவி, 10-ம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆகவே, மாணவி லாவண்யாவை தங்களது மதத்துக்கு மாறும்படியும், மேல் படிப்பு செலவுகளை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் பள்ளி நிர்வாகம் ஆசைகாட்டி இருக்கிறது. இதற்கு லாவண்யா மறுத்துவிடவே, அவரது பெற்றோரை வரவழைத்து பேசியிருக்கிறார்கள். அவர்களும் மதம் மாற மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம், சிறுமி லாவண்யாவை கழிவறை கழுவ வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறது. இதனால் மனமுடைந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் பின்னணியில் கிறிஸ்தவ மதம் இருப்பதாக பிரபல ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள், லாவண்யாவின் மரணம் குறித்து வழக்கம் போல வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி, மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் துணிச்சலாக பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அப்பதிவில், ‘சிறுமி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்தப் பள்ளியில் என்ன மாதிரியான செயல்பாடுகள் நடந்தன என்பதை அறிய அவரது மரண அறிவிப்பு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், மாணவியின் தற்கொலைக்கு காரணமாகக் கூறப்படும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றும் விதமாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவரது பதிவில், ‘கும்பகோணம் மிக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்ற நிர்ப்பந்தம் காரணம் என்ற பா.ஜ.க.வின் பொய் குற்றச்சாட்டு மதவாத அரசியலின் ஆபாசம்! 1859 முதல் மூன்று நூற்றாண்டுகளாக நடக்கும் பள்ளி, ஒன்றரை லட்சம் பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை மாணவர்களுக்கு கல்வி தந்துள்ளது. தற்போது படிக்கும் சுமார் 1,000 மாணவர்களில் 70% ஹிந்துக்கள், 5% இஸ்லாமியர், 25% கிறிஸ்தவர்கள். ஹிந்து ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். மூன்று நூற்றாண்டுகள் நடக்காத மதமாற்றம் இப்போது நடக்குமா? சமூக ஒற்றுமை, மதநல்லிணக்கம் நிறைந்த தமிழகத்தில் வெறுப்பு அரசியல் நடத்த தமிழகம் அனுமதிக்காது!என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த பதிவுதான் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மாணவி லாவண்யாவே தனது மரண வாக்குமூலத்தில் மதம் மாற மறுத்ததால் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறியிருக்கும் நிலையில், அதை இல்லை என்று பீட்டர் அல்போன்ஸ் மறுத்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக குறிப்பிடுகின்றனர். மேலும், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் இருப்பதால், கிறிஸ்தவ பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

Image

Share it if you like it